Thursday, 21 May 2020

வன்னியன் சுரைக்குடி என்ற வன்னியர் படைப்பற்று - VANNIYAN SURAIKUDI @ VANNIYAR GARRISON

வன்னியன் சுரைக்குடி  என்ற வன்னியர் படைப்பற்று 

                          ஹிஜிரா 761 வருடம் - கி பி 1359-1360 ம் வருடம் ராஜாக்கள் தம்பிரான் என்ற பாண்டியன் ஆன - மாறவர்மன்   வீர பாண்டியனின்  36ம்  ஆண்டு சூரைக்குடியை அழித்த செய்தியை கல்வெட்டாக பதித்து உள்ளனர். 


         வன்னியன் சூரைக்குடி என்று அழைக்கப்பட்ட வன்னியர் படைப்பற்றான ஊரில் இருந்தவர்களை காத்தூர்  கோட்டையை சேர்ந்தவர்களும் -மற்ற கள்ளர்களும் சேர்ந்து சூரைக்குடி  ஊராரை  தாக்கி அங்கு குடியேறியனர்.  அப்படி குடியேறிய  கள்ளரை விரட்டி அழிக்க  நடைபெற்ற படையெடுப்பு பற்றிய கல்வெட்டு தான்  இது. 


                        ராஜாக்கள் தம்பிரான்  சூரைக்குடி அழிய செய்வதாக  மிஞிலிசு எலிசு கான் , ஆசம் காத்தான் , முவாசம் கான் கான்  ராசாத்தி கானுடைய பரிகாரம் ஏவப்பட்டு சூரைக்குடியும் அழிய செய்து மாத்தூர் குளத்திலே விடுதியா விரையாச்சிலை கோட்டியூர் ஊரவர்களை காண சொல்லி அருளி செய்தபடியாலே இவ்வடிகள் கண் அழிவுக்கு ராஜாக்கள் தம்பிரானார்  தோணாது கானுக்கும் -எங்களுக்கும் பிரமாணம் வரக்காட்டி அருளியபடி முன்னாள் முடபராய் நமக்கு இருந்து போந்த விரையாச்சிலை உள்ளிட்ட  ஊரும்  கோட்டியூர் உள்ளிட்ட ஊரவரும்  தங்கள் நாட்டுடனே கூட்டி தங்கள் மரியாதி, கடமை  இருக்க கடவார்கள் என்றும் ஒன்றுபட நடத்தி போதக்கடவர்கள் என்றும் இச்செய்தி திருக்கோளக்குடி நயினார் கோவில் திருமலையில் கல்வெட்டி கொடுப்பது என்று பிரமாணம் வந்த படியாலே  நாங்களும் நாட்டு உடனே கூட்டி எங்கள் மரியாதை ,கடமை இருப்பதாக சந்திராதித்த வரை செல்வதாக கல்வெட்டு கொடுத்தோம்.

இப்படிக்கு பொன்னமாராவதி நாட்டு  நாட்டவரோம், விரையாச்சிலை  உள்ளிட்ட ஊரவருக்கும் - கோட்டியூர் உள்ளிட்ட  ஊரவருக்கும். இப்படிக்கு பொன்னமாராவதி நாட்டுனா ... 







ஹிஜிரா வருடமும் அதற்கான கி பி வருடமும் :






         பாண்டியர்களின் வரிசையில் வரும் மாறவர்மன் வீரபாண்டியன் ஆட்சி ஆண்டு ஆரம்பம் கி பி 1334 முதல் கி பி 1380 வரையில் என்றும் அவரோட கல்வெட்டுகள் புதுக்கோட்டை பகுதிகளில் உள்ளதாக குறிப்புகள் உள்ளன.  இதே பாண்டியன் காலத்தில் நடைபெற்ற இரண்டு முஸ்லீம் படையெடுப்புகளை பற்றிய செய்திகள் . 

ஹிஜிரா 761 - மாறவர்மன் வீர் பாண்டியனின்    ஆட்சியின்   36 ம் ஆண்டு கல்வெட்டு சூரைக்குடியில் குடியேறிய கள்ளர்களை அழிக்க நடைபெற்றது என்றும் . 

ஹிஜிரா 771 மாறவர்மன் வீர் பாண்டியனின் ஆட்சியின் 46 ம் ஆண்டு  கல்வெட்டு கண்டதேவி பகுதியில் உள்ள கல்வெட்டு என்றும் தெரிய வருகிறது. 








வன்னியன் சூரைக்குடி என்ற வன்னியர்  ஊரை தாக்கி எடுத்துக்கொண்ட கள்ளர்களை  ஹிஜிரா 761 ம் வருட முஹம்மது சுல்தான் அனுப்பிய தளபதிகள் கள்ளர்களை அழித்து  விரட்டினர் . 

இந்த சூரைக்குடி பின்னர் விசையால தேவர்  என்ற அரையர்களின் தலைமை இடமாக விளங்கியது.  









ஹிஜிரா 771 ம் வருடம் கல்வெட்டு  :     கண்டதேவி  ஜமீன் பங்களாவின் ஆலமரத்தின் முன் இருக்கும் நிறுத்தப்பட்ட கல்வெட்டு




தெற்கு பகுதி :  

ஸ்வதிஸ்ரீ  ராசாதிராச   ராசாதிராச  நிருப குலக்  கோநன் காலம் ராஜாக்கள் தம்பி ரானார்க்கு ஆண்டு எழுநூற்று எழுவத்து ஒன்றாவது  இரவிலதரந் எனைய்  ஆன கார்த்திகை 11 ம்  2 நாள்  ராஜாக்கள் தம்பிரானார் ஸ்ரீ பாதத்துக்கு அணை நாடு  மீதாக்கண்ட பெருமாள் வேலைக்காரர் ஆன காரணவரும் இந்நாட்டவர்களும் பிரிதியம் பண்ணி கொடுத்தபடிக் கல்லுவேட்டி நாட்டினபடி தேசத்தில் உள்ள     வன்னியரும் ,கள்ளர் ,கருமர், புறத்தார்,பட்டர்,வித்துவான்கள் , பாடகர்  எங்களுக்கு சத்ருவான அறந்தாங்கியார், மறவரும்  உள்ள மனிதர் எல்லார் முன்பாக நாங்கள் பண்ணின ப்ரத்யத்தில் ஒன்று  தப்பு தலானார்களுக்கும்  








கிழக்கு பக்கம் : 
        இணங்குவராயிருக்கிறவர்களுடனே எங்கள் ஆயுஷ் உள்ள அளவும் உறவாருதல்  ஊரு உண்டாக நடத்தி போக்குக  ராஜாக்கள் தம்பிரானார்க்கு பாதம் விடாமல் திருவுள்ளத்துக்குப் பொருந்தன் நாட்டுக்கு வேண்டுங் காரணவ்ரும் சேவிக்க வேண்டும் பரிகாரமும் கொண்டு வந்து சேவியாமல் இதிலே சில தாழ்வு ஆகுதல் இது நம்மீது யாதொரு பொழுது அருளிப்பாடெற ராஜாக்கள் தம்பிரானார் சீபாதத்தில்  நிர்ணயமான ஆளும் திருமுகமும் வந்தால் ஆயுதம் எடுக்க வல்ல மனிதரில் ஒருத்தர் நில்லாமல் தியாகத் தேற நாங்கள் விடை கொண்டு வாராமல் இருக்குதல் எங்கள் வகுப்பாராகாமல் ஆக்கிகொண்டு அருளின இத்தாலே  காத்தூர் 




வடக்கு பக்கம்: 

(காத்தூர் )கோட்டையார்  மற்றும் உள்ளவர்கள் ராஜாக்கள் தம்பிரானார்க்கு ராஜ்யத்திலே சில சில களவு செய்யும் அளவுக்கு இவர்களை அழியச் செய்ய ரஜாபரிகரம் வரவேணும் என வருகாமல் ஆன ஆளும் திருமுகமும் வந்த நாழிகையில் இவர்களை அழியச் செய்யாம விருக்குதலைச் செய்யாமல்  ராஜாக்கள் தம்பிரானார் சீபாதத்தை தப்பினோம் ஆகில் - எனவும் எங்கள் பெண்டுகளை எங்கள் சத்ருவான மனிதர்களுக்கு வித்துவான்கள் ,பாடகர் , பாணர்,புலவர் இவர்கள் பிடித்து கொண்டு போய் தானப் பொறி பொறித்து தங்கள் சிறுபச(ங்)களுக்கு குடுக்கக் கடவர்களென்றும்  செகடியும் அடித்து  ஆறேடியிலே ஏழு பிராமணரை  இவர்களை பிதக் கணமாக வந்து  





மேற்கு பக்கம் : 
இந்த பிராமணரை கங்கை கரையிலே கொன்ற பாபியாய் மஹா பாபம் செய்த அவர்கள் கிடக்கும் நரகத்திலே கிடைக்க கடவோம் எனவும் எங்கள் உருவத்தைப் பெண் உருவமாக வகுத்து  பாணர் ,புலையர் ,பள்ளர்,பறையர் மற்றும் உள்ள கீழ் சாதிகளும் எங்களுடைய இந்த உருவத்தை எழுதி நாங்கள் இருந்த தேசத்திலும் மற்றும் உள்ள தேசத்திலும் இவர்கள் சிறுபச(ங்)கள் காலிலே கட்டி இழுக்கொண்டு திரியக்கடவர்களெனவும் இப்படி அமைந்து எங்கள் நாட்டு தாயூர் ஆன இதிலே  மணத்தோரணமும் கட்டிக் கல்லும் வெட்டி நாட்டினோம். ஆணை நாட்டில் காரணவரும் இனாத் தாரர்களும் இவ்வனைவோரும்..  
















செய்தி சுருக்கம் :  

                            தேசத்தில் உள்ள வன்னியரும்,  கள்ளர் ,கருமர், புறத்தார்,பட்டர்,வித்துவான்கள் , பாடகர்  எங்களுக்கு சத்ருவான அறந்தாங்கியார், மறவரும்  உள்ள மனிதர் எல்லார் முன்பாக செய்த சத்தியம் . 
             முன்னாளில்   எங்களை தாக்கி சில சில களவு செய்த  காத்தூரர் -கோட்டையார்  மற்றும்  அவர்கள் உடன் உள்ளவர்களை அழியச் செய்ய அரசன் உதவி வேண்டும் என்று கோராமல்  எங்களில் ஆயுதம் எடுக்க வல்லோரை கொண்டு அழிப்போம். அப்படி செய்யாமல் முன்னர் ராஜாக்கள் தம்பிரானார் வந்து கள்ளர் கூட்டத்தை அழித்ததை போல் மீண்டும் அழிக்க அரச உதவி வேண்டும் என்று எதிர்பார்த்தால்  



1. (திருடர்களுக்கு )எங்களுக்கு சத்ருவான மனிதருக்கு மீசை சிறைத்து  இவர்களுக்கு நாங்கள் குடும்பமாக இருக்ககடவோம்.

2.எங்கள் பெண்டுகளை எங்கள் சத்ருவான மனிதர்களுக்கு (திருடர்களுக்கு)  வித்துவான்கள் ,பாடகர் , பாணர்,புலவர் இவர்கள் பிடித்து கொண்டு போய் தானப் பொறி பொறித்து தங்கள் சிறுபச(ங்)களுக்கு குடுக்கக் கடவர்களென்றும். 

3.செக(ண் )டியும் அடித்து  ஆறேடியிலே ஏழு பிராமணரை  இவர்களை பிதக் கணமாக வந்து  இந்த பிராமணரை கங்கை கரையிலே கொன்ற பாபியாய் மஹா பாபம் செய்த அவர்கள் கிடக்கும் நரகத்திலே கிடைக்க கடவோம்.

4.எங்கள் உருவத்தைப் பெண் உருவமாக வகுத்து  பாணர் ,புலையர் ,பள்ளர்,பறையர் மற்றும் உள்ள கீழ் சாதிகளும் எங்களுடைய இந்த உருவத்தை எழுதி நாங்கள் இருந்த தேசத்திலும் மற்றும் உள்ள தேசத்திலும் இவர்கள் சிறுபச(ங்)கள் காலிலே கட்டி இழுக்கொண்டு திரியக்கடவர்களெனவும்.

5.எங்கள் நாட்டு தாயூர் ஆன இதிலே  மணத்தோரணமும் கட்டிக் கல்லும் வெட்டி நாட்டினோம். ஆணை நாட்டில் காரணவரும் இனாத் தாரர்களும் இவ்வனைவோரும்..



ஹிஜிரா வருடம் 761 ம் வருடம்  சூரைக்குடியை அழித்த வருடம் மாறவர்மன் வீரபாண்டியனின் 36 வது ஆட்சி ஆண்டு. 


                         முஸ்லீம் படையெடுப்புக்கு  பின்னரும்  சூரைக்குடியை ஆட்சி செய்த அறந்தாங்கி தொண்டைமான் ஆன அதளையூர் நாட்டு சூரைக்குடி அவையன் பெரியான் ஆன தொண்டைமானார்  கல்வாயில்  நாட்டு நெல்வாயில் உடையார் திருவகித்தீஸ்வரமுடையார் கோவில் கல்வெட்டு. வீரபாண்டியனின் 40 ம் ஆண்டு வரை சூரைக்குடி பகுதிகளில் ஆட்சி செய்தவர்  அறந்தாங்கி தொண்டைமான் வம்சத்தினர் .  








         ஹிஜிரா வருடம் 771 ம் வருடம்  சூரைக்குடியை அழித்த வருடம் மாறவர்மன் வீரபாண்டியனின் 46 வது ஆட்சி ஆண்டு கல்வெட்டு  கண்டதேவி கல்வெட்டு . 


மாறவர்மன் வீரபாண்டியனின் 47 ம் ஆட்சி ஆண்டில் தான் முதல் கல்வெட்டு அதளையூர் நாட்டு  தேனாற்று பேரூருக்கு  சூரைக்குடி அவையன் பெரியநாயனார் ஆன விசையால தேவர்க்கு கானாடான விருதுராசாபயங்கர வளநாட்டு ஆதனூர் ஊர்க்கு அமைந்த ஊராரும் பாடிக்காவல் கட்டுவிலை பிரமாணம் பண்ணி கொடுத்த பரிசு  - வாளால் வழி திறந்தான் குளிகை பணம் 300. 

            துலுக்கர் கலகமாய் எங்களுக்கு ...  என்று கூறி காப்பாற்ற பாடிக்காவல் பணம் எழுதி கொடுத்து உள்ளனர்.   



         இப்படி 1370 ல் சூரைக்குடிக்கு வரும் தெலுங்கு பல்லவன்  விஜய கண்ட கோபாலனை  வைத்து எழுதிய கதைக்கும்  வன்னியன் சூரைக்குடியோடு சேர்த்து எழுதி கள்ளர் கதைகளுக்கு முற்றுப்புள்ளி . 


      சூரைக்குடிக்கு முதல் முதலாக வரும்  விசையாலய தேவர்    வீர் பாண்டியனின் ஆட்சி ஆண்டான 47 ம் வருடம் .அதற்கு முன்னர் இந்த பகுதியை  ஆட்சி செய்தவர் அறந்தாங்கி தொண்டைமான் என்று தெளிவாக புரிகிறது. 



       மாறவர்மன் வீர்பாண்டியன்  ஆண்டு 1370 (ஹிஜிரா 771)   விரையாச்சிலை நயினார் உலக விடங்கீஸ்வரர்  கோவிலுக்கு   

            சூரைக்குடித் தேவர் சொக்கநயினார்  விசையாலய தேவர் 






                சூரைக்குடி வன்னியர்களை காத்ததால்  பெற்ற சிறப்பு பெயர்  வன்னியனார் அடைக்கலம் காத்தார் ஆன நாடு மதித்த விசையாலய தேவர் .








இந்த வன்னியன்  சூரைக்குடி வரலாறை  திரிக்கும் திருடர்கள் :

இனி வரும் எழுத்துக்கள் எல்லாம் கள்ளர் எழுதிய கதையை எடுத்து கொடுக்கப்பட்டது :


இந்த கல்வெட்டை முதன் முதலாக முன்னாள் உலக வராலாற்று ஆய்வகத்தின் உறுப்பினரும், இந்திய வரலாற்று ஆய்வாளரும் ஆன உயர்திரு. கிருஷ்ணசாமி அய்யங்கார் பதிவு செய்கிறார்.


அவருடைய பதிவில் சிறு, சிறு தவறுகள் இருந்ததை 08:04:86  ல் உஞ்சனை வட்டார கல்வெட்டு பகுதியில் திருத்தி படியெடுத்து புத்தகமாகவும் வந்தது. அந்த புது படியெடுத்த கல்வெட்டை அன்று தினதந்தி, தினமலர், தினகரன் நாளிதழ்களில் வெளி வந்தது.

மேலும் இதனை வரலாற்று ஆர்வலர் உயர்திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார் நேரடியாக கண்டதேவிக்கு சென்று படி எடுத்து, புகைப்படத்தையும் அளித்துள்ளார்.

உன்மை இப்படி இருக்க சில கோமாளிகள் ஏதோ கள்ளர்கள் பொண்டாட்டியை ஒப்படைப்பதாக சத்தியம் செய்தார்கள் என்று வலைதளங்களில் கிறுக்கியுள்ளார்கள். மேலும் பள்ளி சாதியினர்,  வன்னியர் என்று இங்கு குறிக்கப்பட்ட சூரைக்குடி தொண்டைமானை பள்ளி சாதி என்று கூறிவருகின்றனர்.

தேசத்தில் உள்ள வன்னியரும், கள்ளர்களும் என்று குறித்துள்ளது. இங்ஙனம் வன்னியர் என்பது ஒருமை அதை கூட புரிந்து கொள்ளாமல் அது ஜாதி பெயர் என ஒப்பாரி வைக்கின்றனர். இவர்கள் வன்னியர் என்பது சாதியாக மாறியது இந்த நூற்றாண்டில் என்பது நாம் அறிந்ததே. வன்னியர் என்ற பட்டம் இங்கு கள்ளர், மறவர், வலையர், பள்ளி என்ற பலதர சாதிகளுக்கு உள்ளது. 

புதுக்கோட்டை தொண்டைமான், அந்த பகுதி விசங்கு நட்டு கள்ளர்களை நாய் சங்கிலியால் கொண்டுவந்தார் என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதனால் தொண்டைமான் என்பது வேறு சாதி, கள்ளர்கள் வேறு சாதி என்று சொன்னால் எவ்வளவு அபத்தமோ அதுபோல் உள்ளது பள்ளி சாதியினரின் கதை.

கல்வெட்டில் கள்ளர்கள் என்று குறிக்கப்பட்ட போது வன்னியர்கள் என்று ஏன் பன்மையில் குறிக்கவில்லை.....?

அதனால் தான் அய்யா கிருஷ்ணசாமி அய்யங்கார் சூரைக்குடி தொண்டைமானை கள்ளர் குடும்பம் என்றும் சூரைக்குடி கள்ளர்களின் தலைமையிடம் என்றும் பதிவு செய்தார்.




பதின்மூன்றாம் நூற்றாண்டின் தமிழ் கல்வெட்டை படிக்க தெரியம  திரு கிருஷ்ணசாமி அய்யங்கார் பதிவு செய்ததை  நேரடியாக ஆய்வு செய்த சம்பூட்டி கொடுத்த தகவல் - தேசத்தில் உள்ள வன்னியரும், கள்ளர்களும் என்று குறித்துள்ளது. இங்ஙனம் வன்னியர் என்பது ஒருமை அதை கூட புரிந்து கொள்ளாமல் அது ஜாதி பெயர் என ஒப்பாரி வைக்கின்றனர்.

              அந்த கருமர் என்ற வார்த்தையை எடுத்துவிட்டு கள்ளர்களும் என்று சேர்த்த கூமுட்டை  கள்ளன் என்பது ஒருத்தனை மட்டுமே குறிக்கும்.  கள்ளர் என்றால் பன்மை அது கூட கள்ளர்களும் என்று கல்வெட்டில் இல்லாததை சேர்த்துவிட்டுட




மேலும் பல கோமாளிகள் இதை கிபி16 ஆம் நூற்றாண்டு என்று பிதற்றுகிறார்கள். அவர்கள் ஹிஜிரா வருடத்தை பற்றிய புரிதல் இல்லாமல் பொய்யுரைக்கின்றனர். இஸ்லாமியர்களுக்கு நன்கு தெரியும் ஹிஜிரா வருடம் என்றால் என்னவென்று.




இனி கள்ளர் எழுதிய கல்வெட்டு  பற்றிய கதை : 


19 வது வரி யில் :   வன்னியரும் , கள்ளர், கருமர்  என்று வருவதை கள்ளர்களும் என்று எழுதிய அறிவாளிகள் -  கள்ளன் என்பது ஒருமை என்றும் கள்ளர் என்பது பன்மை என்றும் தெரியாமல்  எழுதிவிட்டு கிருஷ்ணசாமி அய்யங்காருக்கு படிக்க தெரியல என்று கதை வேற விட்டு இருக்கான் . 


வரலாறு திரிக்க தாங்களே ஒரு புத்தகம் எழுதி அதை ஆதாரமாக காட்டுவது திருடர்களுக்கு கை வந்த கலை  அதன் படி எழுதப்பட்ட புத்தகம் இது.












சம்பூட்டி படம் எடுத்த கண்டதேவி கல்வெட்டு ல்  படிக்க முடிந்த அளவுக்கு படித்தாலும் கரும என்று வரும் வார்த்தையை களும் என்று எழுதி கள்ளர்களும் கதை விட்டு அய்யங்காருக்கு படிக்க தெரியல என்று சொல்லிட்டான் ..















                 வரலாறு எப்படி  பேசனும் என்றால் அறந்தாங்கி தொண்டைமானும் - தெலுங்கு பல்லவன் என்ற விசையாலய தேவனும் ஒன்று. அப்படியே அறந்தாங்கி தொண்டைமான் தான் புதுக்கோட்டை  இந்திரகுல வங்கிசம் என்ற   புதுக்கோட்டை தொண்டைமானுக்கு முன்னோர். 

             கள்ளர் எழுதிய ப்ளோக் பக்கங்களில் இப்படி எத்தனையோ அரசர்களை ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாதவர்களை தொடர்பு படுத்தி எழுதிய காமெடிகள் நிறைய உண்டு 




   நீங்க எத்தனை கதை எழுதினாலும் உங்க ப்ளோக் தான் எல்லாத்துக்கும் முக்கிய தகவலை தருகிறது. அதனால் தொடந்து உங்க ப்ளோக் எல்லாம் படித்து அதில் இருந்து ஆராய்ச்சி செய்தாலே உங்க கதை எல்லாத்தையும் உடைக்க முடியும். 



        கடைசியா இத்தனை வருடம் வரலாறு கதை விட்டு ஊருக்கு ஒருவரை பிடித்து அவர் இவர் வம்சம் - அவர் வம்சம் என்று பிளக்ஸ் வைத்து கதை விடும்அறிவாளிகளே "முக்கண்டி காடுவெட்டி விசையாலயதேவன்"  வம்சத்தை கண்டுபிடிக்க சொன்னா யாரையோ காட்டி கொடுமை படுத்துவது தான் பாவமா இருக்கு ..



எல்லா அரையர்களும் படைத்தளபதிகளும் வட மாவட்டங்களில் இருந்து தான் தென் பகுதியில் குடி அமர்த்தப்பட்டனர். 

இந்த வரலாறு தெரியாமல் வெற்று கூச்சல் இடும் கோமாளிகளே வரலாறை  வரலாறா தேடுங்க 

உங்க சாதிக்கும் வரலாறு இருக்கும்  எப்போ என்றால் நாயக்கன்  கொடுத்த சேதுபதி பதவிக்கும்  - சேதுபதி கொடுத்த பேக்கரி தொண்டைமான் பதவிக்கும்  பின்னர் நிறைய வரலாறு இருக்கும் . அதை தேடி எழுதினால் நல்லது. 

சங்ககாலத்தில் இருந்து இடையில் கொஞ்சம் பக்கத்தை காணோம் என்று கிடைத்ததை எல்லாம் திருடினா ரொம்பவே கஷ்டம் தான் உங்க வரலாறு. 






No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.