Saturday, 16 November 2019

விழுப்பரையர்கள் - குருகுலராயர்கள் கடற்படையை வழி நடத்திய தலைவர்கள்

கடற்படையை வழி நடத்தும் படை தலைவர்கள்  விழுப்பரையர்கள் - குருகுலராயன் -குருகுலத்தரையன்:



             கடற்போரில் பங்கெடுத்த தளபதிகளின் சிறப்பு பெயர்கள் ;    கிடாரத்தரையன் , சீனத்தரையன் ,ஈழத்தரையன் , விழுப்பரையர் , குருகுலத்தரையர் ,குருகுலராயர் .  

 தரையன் என்பது கடலை கடந்தவர்களுக்கு உள்ள சிறப்பு பெயர். 

இதில் விழுப்பரையர்  என்பது விழுப்புண் பெற்ற அரையர் என்றும் குருகுலத்தரையர் என்பது மஹாபாரத குரு  வம்சம் வழி வந்தவர்  என்ற கதைக்கு வைக்கும் முற்றுப்புள்ளி ..




கங்கரான விழுப்பரையர்கள் :  



  
                                                       ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து கங்கன் அம்பலவாணன் கண்டராத்தித்தன்  என்ற மும்மடி சோழன் விழுப்பரையன்  

குவளாலமுடைய கங்கன் அம்பாலவாணன் கண்டராதித்த சோழ விழுப்பரையன் ராஜராஜ சோழனின் தளபதி

இடர்க்கரம்பை கோவில் கல்வெட்டுகளில் கீழை கங்க அரசர்களின் விழுப்பரையர்கள்

1. ராய ராய விழுப்பரையன்

2. கங்க விழுப்பரையன் 
                         

பல்லவரான விழுப்பரையர்கள் :

கடல் வணிகம் கடல் போரை தொடக்கம் முதல் கடைசியாக மலைமண்டல நாயக்கர் வரை தொடர்ந்தவர்கள் பல்லவர்கள் .
மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நடைபெற்ற இலங்கை படையெடுப்புக்கு முன் வேதவனமுடையான் அம்மையப்பன் என்ற அண்ணன் பல்லவராயர் - ஈழப்படை எடுப்புக்கு பின் அம்மையப்பனான ராஜராஜ விழுப்பரையன் என்று சிறப்பிக்க பட்டதும் கடல் போருக்கு பின்னர் தான்.
                        

அம்மையப்பன் ராஜராஜ விழுப்பரையன் @ வேதவனமுடையான் அம்மையப்பன் அண்ணன் பல்லவராயர் 

         
                        

முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்த காரனை விழுப்பரையர்

ஜெயசிங்ககுலகால விழுப்பரையர்

நிருபதுங்கவர்மன் காலத்தில் இருந்த மறமடக்கி விழுப்பரையர் மகன் நந்தி நிறைமதி


திருச்சிற்றம்பலமுடையார் காரனை விழுப்பரையர் 


கச்சிக்கடம்பன் தலைவக்குலைந்தான் உய்யவந்தான் @ செம்பியன் விழுப்பரையன்



குருகுலராயரான பல்லவராயர்கள்:

குருகுலராயர் என்பதை வைத்து நேராக பாரத கதைக்கு தொடர்பு ஏற்படுத்தும் காமெடி கதைகளை இந்த கல்வெட்டுகள் மூலம் சரி செய்ய முடியும்.
செவ்விருக்கை நாட்டு சக்கரபாணி நல்லூர் அரையன் விரதமுடிதானான பல்லவராயன்
மூன்றாம் ராஜராஜன் காலத்தில் அதே செவ்விருக்கை நாட்டின் அரையன் விரதமுடிதானான குருகுலராயன் என்று அழைக்கப்பட்டார்.
செவ்விருக்கை நாட்டு சக்கரபாணிநல்லூர் அரையன் விரதமுடிதானான
குருகுலராயன்.
இந்த குருகுல ராயன் மஹாபாரத குருவம்சம் என்று கதை சொல்ல முடியாது காரணம் இதே பல்லவராயன் தன்னை பல்லவாதீஸ்வரன் என்று திருப்புட்குழி கல்வெட்டுகளில் குறிப்பு உள்ளது. எடுத்தகை அழகிய பல்லவராயன் .
அரையன் விரதமுடித்தானான பல்லவராயன்
அரையன் விரதம் முடித்தான் குருகுலராயர் கல்வெட்டுகளில் பல்லவராயன் என்று
அழைக்கப்பட்டதை கூறும் திருவரங்கம் கல்வெட்டு குறிப்புகள்

தடங்கண்ணி சிற்றூர் - திருமல்லி நாட்டை சேர்ந்த உய்யநின்றாடுவாரான சோமதேவன் என்ற திருநிலைத்தரையன் மற்றும் அரையன் விரதமுடித்தானான பல்லவராயன் என்ற இருவரை பற்றிய குறிப்புகள்.

அதே இருவரும் இந்த கல்வெட்டில் குருகுலத்தரையன் என்று அழைக்கட்டது.

பொன்பற்றி உடையான் அரையன் மூவாயிரத்துஒருவன் என்ற குருகுலராயன் @ காங்கேயன் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் சுசீந்திரம் கோவிலில் கொடுத்த தானம்.

காங்கேயன் பட்டமுடையான் மூவாயிரத்து ஒருவன் விக்ரம சோழன் காலத்தில் திருவரங்கம் கோவிலில் செய்த தானம்.

குருகுலராயன் என்று சிறப்பு பெற்றவர்கள் கடற்போரில் பங்குபெற்ற பல்லவராயர், நீல கங்கர் என்ற சோழகங்கனுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பெயர்கள்.
பல்லவன் மஹாபாரத குருவம்சம் வழி வந்தவர்கள் இல்லை , அதே போல் கங்கர்கள் தங்களை இஷ்வாகு வழி வந்த சூரிய குலம் கங்கை குலத்தினர் என்று கல்வெட்டு செப்பேடுகளில் குறிக்கப்பட்டு உள்ளது.
பல்லவன் மஹாபாரத குருவம்சம் வழி வந்தவர்கள் இல்லை , அதே போல் கங்கர்கள் தங்களை இஷ்வாகு வழி வந்த சூரிய குலம் கங்கை குலத்தினர் என்று கல்வெட்டு செப்பேடுகளில் குறிக்கப்பட்டு உள்ளது.
விழுப்பரையர் மற்றும் குருகுலராயர் என்று சிறப்பு பெற்றவர்கள்
விழுப்பரையர் மற்றும் குருகுலராயர் என்று சிறப்பு பெற்றவர்கள்
பல்லவராயர்கள் மற்றும் சோழகங்கன் (கங்கரையர் @ நீலகங்கர் @ காங்கேயன்) மட்டுமே .
பல்லவராயர்கள் மற்றும் சோழகங்கன் (கங்கரையர் @ நீலகங்கர் @ காங்கேயன்) மட்டுமே .

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.