தென் இந்தியாவின் அரசர்களின் பாதுகாவலர்களாக விளங்கியவர்கள் அவர்களது ஆட்சியில் படைத்தலைவர்களாவும் அவர்களுடன் திருமணஉறவும் வைத்து அவர்களுக்கு உறவாக இருந்த அரசர்களை பற்றிய ஒரு வரலாற்று பார்வை.
Friday, 2 November 2018
Friday, 6 April 2018
கண்டன் மாதவன் - மாதவராயன் -வேளான் மாதவன் @ நரலோக வீரன் காலிங்கராயரின்மகனான ராஜவல்லப பல்லவராயன்
சூரை நாயகன் -மாதவராயன்:
காரிகை குளத்தூர்:
மணவில் கூற்றத்து அரும்பாகிழான் என்ற பொற்கோயில் தொண்டைமான் @ நரலோக வீரன் மகனான சூரைநாயகன் என்ற மாதவராயன் குலோத்துங்கன் மற்றும் விக்கிரமசோழன் காலத்தில் இருந்த படைதளபதி. நரலோகவீரன் அமிர்தசகர முனிவரை கொண்டு காரிகை சிறப்பு நூல் இயற்ற செய்தார். இதன் சிறப்பால் குளத்தூர் "காரிகை குளத்தூர்" என்று சிறப்பு பெற்றது.
தஞ்சை மாவட்டம் - தற்போது நாகை மாவட்டமாக இருக்கும் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த நீடூர்சிவன் கோவிலில் உள்ள இரண்டு கல்வெட்டுகள் .
காரிகை குளத்தூர் மன்னவன் - தொண்டை காவலன் -சிறுகுன்ற நாட்டு கற்பகம் -மிழலை நாட்டு வேள் -ஆண்டவன் -கண்டவன் மாதவன்..
‘‘எண்டிசை உலகை ஒருகுடை நிழற்கீழ்

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்காக்கிநாடா பகுதியில் உள்ள பீமாவரம் நாராயணசுவாமி கோவிலில் முன் உள்ள கல்வெட்டு.
சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளது..
சகதமண்டனி நாட்டை சேர்ந்த சளுக்கிபீமாபுரம் நாராயண் கோவிலில் குலோத்துங்கனின் 45 ஆம் ஆட்சியில் அவரது மிகச்சிறந்த அமைச்சர் மாதவன் @ ராஜவல்லப பல்லவராயன் அமைத்த விளக்கு.
கண்டன் மாதவன் சோழமண்டலத்து விருதுராஜா பயங்கர வளநாட்டு மன்னை நாட்டு கடம்பக்குடிக்கு அரசன்.
இதே ஊர் தான் பின்னாளில் குளத்தூர் என்று அழைக்கப்பட்ட பல்லவராயன் பேட்டை.
Sandhivigrahi - minister for foreign affairs :
பல்லவராயன் என்பது பட்டம் இல்லை - பல்லவ வழி வந்த அரசர்கள் மட்டுமே பயன்படுத்தியது.
சேக்கிழார் என்ற வெள்ளாளாருக்கு உத்தம சோழ பல்லவராயன் என்று பட்டம் சோழன் கொடுத்தா சொல்வது எல்லாம் கட்டு கதை.
உத்தம சோழ பல்லவராயன் என்பவர் இருந்த காலம் ராஜராஜன் i காலம் அவரது பெயர் ஈராயிரவன் பல்லவராயன்.
பல்லவராயன் -- தொண்டைமான் எனபது அகம்படிக்கோ - வெள்ளாளருக்கோ வழங்கப்பட்ட பட்டமோ-- சிறப்பு பெயரோ அல்லது அரசன் கொடுக்கும் விருதோ கிடையாது. பிறப்பால் வந்ததை யாரும் பிச்சை எடுக்க முடியாது..
முதலாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த நரலோக வீரன் என்று சிறப்பு பெயர் பெற்ற காலிங்கராயனின் மகனான சூரைநாயகன் பற்றிய சிறப்பு தகவல்கள்.
மணவில் கூற்றத்து அரும்பாகிழான் என்ற பொற்கோயில் தொண்டைமான் @ நரலோக வீரன் மகனான சூரைநாயகன் என்ற மாதவராயன் குலோத்துங்கன் மற்றும் விக்கிரமசோழன் காலத்தில் இருந்த படைதளபதி. நரலோகவீரன் அமிர்தசகர முனிவரை கொண்டு காரிகை சிறப்பு நூல் இயற்ற செய்தார். இதன் சிறப்பால் குளத்தூர் "காரிகை குளத்தூர்" என்று சிறப்பு பெற்றது.
தஞ்சை மாவட்டம் - தற்போது நாகை மாவட்டமாக இருக்கும் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த நீடூர்சிவன் கோவிலில் உள்ள இரண்டு கல்வெட்டுகள் .
காரிகை குளத்தூர் மன்னவன் - தொண்டை காவலன் -சிறுகுன்ற நாட்டு கற்பகம் -மிழலை நாட்டு வேள் -ஆண்டவன் -கண்டவன் மாதவன்..
‘‘எண்டிசை உலகை ஒருகுடை நிழற்கீழ்
இருத்திய குலோத்துங்க சோழற்கு
யாண்டொரு முப்பத் தெட்டினில் சோணாட்(டு)
இசைவளர் இந்தளூர் நாட்டுள்
உண்டைநீடியநீ டூர்உமை யோடும்
உலாவிய சிவபெரு மானுக்(கு)
உவந்து வெண்கயிலை மலைஎனச் சிலையால்
உத்தம விமானமிங் கமைத்தான்
தண்டமிழ் அமித சாகர முனியைச்
சயங்கொண்ட சோழ மண்டலத்துத்
தண்சிறு குன்ற நாட்டகத் திருத்திச்
சந்தநூற் காரிகை அவனால்
கண்டவன் மருமான் காரிகைக்
குளத்தூர்க்
காவலன் நிலாவினான் எவர்க்கும்
கருணையும் நிதியும் காட்டிய மிழலை
நாட்டுவேள்கண்டன்மாதவனே’’
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்காக்கிநாடா பகுதியில் உள்ள பீமாவரம் நாராயணசுவாமி கோவிலில் முன் உள்ள கல்வெட்டு.
சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளது..
சகதமண்டனி நாட்டை சேர்ந்த சளுக்கிபீமாபுரம் நாராயண் கோவிலில் குலோத்துங்கனின் 45 ஆம் ஆட்சியில் அவரது மிகச்சிறந்த அமைச்சர் மாதவன் @ ராஜவல்லப பல்லவராயன் அமைத்த விளக்கு.
கண்டன் மாதவன் சோழமண்டலத்து விருதுராஜா பயங்கர வளநாட்டு மன்னை நாட்டு கடம்பக்குடிக்கு அரசன்.
இதே ஊர் தான் பின்னாளில் குளத்தூர் என்று அழைக்கப்பட்ட பல்லவராயன் பேட்டை.
Sandhivigrahi - minister for foreign affairs :
ராஜவல்லப பல்லவராயர் @ மாதவராயன் @ வேள் கண்டன் மாதவன் என்று அழைக்கப்படும் நரலோகவீரன் மகன் குலோத்துங்கன் 20 ம் ஆட்சி ஆண்டில் சிறிய லேடன் செப்பேடுகளில் குலோத்துங்கன் ஆணையை செயல் படுத்தியவர். இவரை சந்திவிக்ரகி எனற வெளியுறவு துறை அமைச்சர் என்று குறிக்கப்பட்டு உள்ளது.
இவரே குலோத்துங்கனின் 45 வது ஆட்சி வரை அமைச்சராக தொடர்ந்து வந்துள்ளதற்கு கல்வெட்டுகள் உள்ளது.
பல்லவராயன் என்பது பட்டம் இல்லை - பல்லவ வழி வந்த அரசர்கள் மட்டுமே பயன்படுத்தியது.
சேக்கிழார் என்ற வெள்ளாளாருக்கு உத்தம சோழ பல்லவராயன் என்று பட்டம் சோழன் கொடுத்தா சொல்வது எல்லாம் கட்டு கதை.
உத்தம சோழ பல்லவராயன் என்பவர் இருந்த காலம் ராஜராஜன் i காலம் அவரது பெயர் ஈராயிரவன் பல்லவராயன்.
பல்லவராயன் -- தொண்டைமான் எனபது அகம்படிக்கோ - வெள்ளாளருக்கோ வழங்கப்பட்ட பட்டமோ-- சிறப்பு பெயரோ அல்லது அரசன் கொடுக்கும் விருதோ கிடையாது. பிறப்பால் வந்ததை யாரும் பிச்சை எடுக்க முடியாது..
Sunday, 24 September 2017
வன்னிய மலைமண்டல மாதாக்கள் -மலைமண்டல நாயக்கர்கள்
மலை மண்டலம்:
மலைமண்டலம் என்பது தொண்டைமண்லத்தின் ஒரு பகுதி இதை மறைத்து மலையாள தேசத்தின் பகுதி என்று கதைகளை எழுதும் தொல்லியல் துறை அறிவாளிகள்மிகப்பெரிய வரலாற்றை மறத்து உள்ளனர்.
மலை மண்டலத்து நாயக்கர்களான வன்னியர்களே வியாபாரக்குழுவிற்கு தலைமை வகித்துள்ளார்கள். அவர்களை மாதாக்கள் என்று குறிப்பிடும் கல்வெட்டுகள் அதிகம் கிடைத்துள்ளது.
பொழிச்சலூர் என்று இப்போது அழைக்கப்படும் பல்லாவரம் பகுதி தான் அப்போதைய ஐயாபொழில் நகரம். மலைமண்டலத்து வணிகநகரமான எறிவீரபட்டினம். மல்லை,மயிலை ,சதுரங்கப்பட்டினம் என்ற ராஜநாராயண சம்புவராயன் பட்டினம், கோவளம், நீலகங்கரையர் பட்டினம் வழியாக வரும் பொருட்களை விற்க்கும் இடமாக இருந்தது.
இலங்கையில் உள்ள மலைமண்டல மாதாக்கள் பற்றிய கல்வெட்டுகள்:
திருமலை மாதாக்களான அரசூருடையான் திருச்சிற்றம்பலமுடையானான -திருசிற்றம்பல பல்லவராயன் பற்றிய கல்வெட்டு குறிப்புகள். மலைமண்டலம் என்பதை கொண்டு சேதிரயரை மலையாள தேசத்தை சேர்ந்தவராக மாற்றி உள்ளனர். அவரையே மலைமண்டல நாயக்கர் வன்னியனார் என்று குறிக்கப்பட்டு உள்ளனர்.
மூன்றாம் குலோதுங்கன் காலத்தில் மலைமண்டலத்தில் இருந்தவர்களை பற்றிய குறிப்புகளே இலங்கையில் கிடைக்கிறது. இவர்களில் முக்கியமானவர்கள் நீலகங்கரையர்களும் சேதிராயரும் சம்புவராயரான பல்லவராயர்களும்.
மூன்றாம் ராஜராஜ சோழன் காலத்தில் இருந்த பல்லவனே அந்த மலைமண்டல மாதாக்கள் என்று அழைக்கப்பட்டவர்.
பாண்டியன் மீண்டும் இலங்கை அரசனுடன் சேர்ந்து சோழனுக்கு எதிராக போர் செய்யவும் சோழ எல்லை வரை வந்து தாக்கியதும் பல்லவராயன் தலைமையில் சோழர்கள் தாக்கிய செய்தி.
பழையனூருடையான் - வேதவனமுடையான் -அம்மையப்பன் @அண்ணன் பல்லவராயன் தலைமையில் சென்றவர்கள் இலங்கை படையின் தண்டநாயக்கர் இருவரையும் கொண்டு தலையை மதுரையில் கோட்டை
வாசலில் தொங்கவிட்டார். பின்னர் இலங்கைக்கு சென்று ஊராத்துறை, வலிகாமம்,வல்வெட்டிதுறை ஆகிய ஊர்களில் புகுந்து தாக்கியும் கொல்வாரை கொன்று யானையையும் பொருட்களையும் திரைகொண்டு வந்ததாக கல்வெட்டு உள்ளது.
இந்த கல்வெட்டில் உள்ள இருவர் இலங்கையில் உள்ள ஒரு முக்கிய கல்வெட்டில் உள்ளனர். நீலகங்கரையர் மற்றும் அவரது சமந்தரான வில்லவராயன்.
12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வளஞ்சியர் செய்த சாசனத்தில் மலைமண்டல மாதாக்கள் பற்றிய குறிப்புகள்.ஸ்வஸ்தி ஸ்ரீ லங்காயாம் ஜினதந்ததாது பவனம் யத் தேவஸேனாதிபோ - கார்ஷீத் ஸ்ரீ விஜயாதிவாஹ ந்நபராதேசா, த் புலஸதேஹ் புரே வேளைக்காற ஸமா (கதா) ந் தத், அபி த த் பர்யந்த தேவாலயாந் வேளைக்காற ப, லாநிபாந்து நிதராம் ஆகல்ப ஸந்தேர் புவிநமோபுத்தாய ஸ்ரீலங்காத்பீபத்து ஸுர்ய வம்சத்து ஈசுஷ்வாகு (வி ன் வழி வந்த அநேக சத்ரு விஜயம் பண்ணி அநுராதபுரம் புக்கு புத்தர் சாஸ்ஸநம் ரகூரிக்க வேண்டி ஸங் க. நியோகத்தால் திருமுடி சூடி அருமணத்தில் நின்றும் சங்கத்தாரை அழைப்பித்து மூன்று நிகாய த்து ஸங்கஸத்தி, பண்ணுவித்து மூன்று துலாபாரம் மூன்று நிகாயத்துக்கு குடுத்து தஸராஜ தர்ம்மத்தால் ஐம்பத்தய் யாண்டு இலங்கை முழுதும் ஒரு குடை நிழ ற்றித் திருவிராஜ்யஞ் செய்தருளி எழுபத்து மூவாண்டு திரு ந கூடித்ரஞ் செலுத்தின கோ ஸ்ரீஸங்கபோதி வந்மரான சக்ரவர்த்திகள் ஸ்ரீவிஜயபாஹ" தேவர்வர்கள் தேவசேனவிரத்தர்க்கு நியோகித்து புலநரியான விஜயராஜபுரத்து எடுப் பித்த மூலஸ்தாநமாகிய அபயகிரி மஹாவிஹாரத்து அக்ராயதனமான உத்தொருள் மூளையில் மூவுலகுக்கும் சிகாமணியாகிய தளதாபாத்ரதாது ஸ்வாமிதேவர்களுக்கு நித்யவாஸப வநமாந ப்ரதமாபிஷேகத்துக்கு மங்கள க்ருஹமாந ஆட்டாண்டு தோறும் திருநயநமோகூரம் பண்ணி அஞ்சந நிறுக்கும் கண்ணாலஞ் செய்யும் மங்கள மஹாஸிலாமய புத்ததேவர்க்கு கந்தகுடியான தளதாய்ப் பெரும்பள்ளி உங்கள் ரக்ஷையாக வேண்டுமென்று ஸகல சாஸ்த்ராகம ஸிலாசார ஸம்பந்நரான ராஜகுரு உதுருள்மூளையில் வ்யாரிணி முகலந்மஹாஸ்தவிரர் ராஜாமாத்யரோடும் கூட எழுந்தருளியிருந்து எங்களை அழைத்து அருளிச் செய்தமையில் மாதந்திரத்தோங் கூடி எங்களுக்கு மூதாதைகளாயுள்ள வளஞ்செயரையும் எங்ளோடு கூடிவரும் நகரத்தாருள்ளிட்டாரையும் கூட்டி மூன்றுகைத்திருவேளக்காந்தளதாய்ப்பெரும் பள்ளியென்று திருநாமஞ் சாத்தி எங்களறமாய் எங்கள் காவலாய் நிற்க வேண்டு மென்று அறங்காவலுக்கு படைப் படையால் ஒரோ சேவகரையும் ஒரோ வேலி நிலமும் இட்டுக் குடுத்து இப் பள்ளி நோக்கின ஊர்களும் பரிவாரமும் பண்டாரமும் அபயம் புக்காரையும் பட்டும் கெட்டும் காக்கக் கடவோமாக வும் அழிவு பட்டடங்கள் அழிவு சோர்ந்தும் எங்கள் அந்வயமுள்ளதநையு மெஞ்ஞான்றும் இதுக்கு வேண்டுவன - வெ லாஞ் செய்வோமாகவும் பண்ணின இந்த வ்யவஸ்தை, சந்த்ராதித்யவரை நிற்பதாகக் கைவினா வேற்றிச் செம்பிலும் கல்லி லும் வெட்டுவித்துக் குடுத்தோம் வலங்கை இடங்கை சிறுதநம்பிள்ளைகள் தனம் வடுகர் மலையாளர் பரிவாரக் கொந்தம் பல கலனையும் உள்ளிட்ட திருவேளைக்காறரோம் இப்படி திறம்புவானும் திறம்பச் சொல்லுவானு திறம்பச்சம்மதிப்பானும் மாதந்திரத்துக்குப் பிழைத்த படைப்பகைஞன் பஞ்சமஹாபாதகஞ் செய்தானும் தேவர் பூதர் மாதவத்தோர்க்குக் குடுத்தன கொள்ளும் கொடும் பாவியும் புத்ததர்ம்ம ஸங்கரத்நங்ககளுக்குப் பிழைத்தா னும் புகுந் நரகம் புகுவார் அறமறவற்க.ஸ்வஸ்திஸ்ரீ "குழலாலபுரபரமேசிரந் கங்கைகுலோத்தமன் காவேரிவல்லவன் நந்தி கிரிஞ்சதன் உத்தமசோழன் பேரால் மண்டலநாயகத்துக்கு உடன்படு வேளைக்காறன் ஒலைக்காறன் மாதேவன் நேர்ஆணத்தி.”இச்சாசனம் இருவரின் பெயர்களைக் குறிப்பிடுகின்றது.அவர்களில் ஒருவன் நந்தி கிரிஞ்சதன் குழலாலபுர பரமேசிரந் என்பது குவளாலபுர பரமேஸ்வரன் என்று அழைக்கப்பட நீலகங்கரையர்கள்.அவர்களது சிறப்பு பெயர்கள் கங்கைகுலோத்தமன்,காவேரிவல்லவன்,நந்திகிரிஞ்சதன். இந்த சாசனம் எழுதப்பட்ட கல்லின் மேற்பாகத்திலே செதுக்கப்பட்டுள்ள புலியின் உருவம் சோழனது கீழ் உள்ளதை உறுதி செய்கின்றது. இந்த கல்வெட்டை எடுத்தவர் நீலகங்கரையரின் வேலைக்காரன் மாதேவன்.நீலகங்கரையர்கள் என்ற சோழ கங்கர்கள்: கூத்தாடும் தேவனான பிருதிவிகங்கன் வன்னிய மாதேவன் சோழன கங்கன்.
அழகிய சோழன் வரந்தரும் பெருமாளான சோளேந்திர சிங்க பிரிதிவி கங்கன்:
நந்தி கொடி உடையவன் நீலகங்கரையர்கள் தான் ஆரியசக்ரவர்த்திகளுக்கு முன் சேதுபதியாக இருந்தவர்கள் எனபதற்கு இந்த சேது பதித்த காசுகளே ஆதாரம்.ஹோய்சாலர் காலத்தில் கோப்பெருஞ்சிங்கனுக்காக போரிட்டு சிதம்பரத்தில் உயிர் இழந்த இலங்கை அரசர்கள் என்று குறிக்கப்படுபவர்கள் இவர்களாகவே இருக்கும்.ஹோய்சால தண்டநாயகரிடம் மணஉறவு கொண்ட யாதவராயர்கள் ஆரிய சக்ரவர்த்திகளாகவும் சேதுபதிகளாக மாறியது நீலகங்கரையர்கள் காலத்துக்கு பின்னர் தான்.இலங்கையில் வன்னியர்கள் இல்லை என்று கதை சொல்லும் அறிவாளிகளுக்கு இன்னும் நிறைய வரலாற்று ஆவணங்கள் எல்லாம் இலங்கை பகுதியில் இருந்தே கிடைத்து உள்ளது.
Subscribe to:
Posts (Atom)