Saturday, 8 August 2020

வன்னியர் கல்விக்கு வீர சைவ மடம் அமைத்த மழவராயரும் -பெண்ணாகடம் கடந்தையாரும்

வன்னியர் கல்விக்கு   வீர சைவ மடம் அமைத்த மழவராயரும் - பெண்ணாகடம் கடந்தையாரும்.



தென்னிந்திய கோவில் கல்வெட்டுகள்  PART I   செப்பேடு  வருடம்  1511 A D




சைவ சமய ஆசிரியர்  அருணாசல விருபாட்சி தேவரிடம் இருந்த செப்பேடு  படி எடுக்கப் பட்டு தஞ்சை சரபோசி மகாராஜாவிடம் கொடுக்கப் பட்ட செப்பேடு சாசனம் கூறும் செய்திகள்.


சக ஆண்டு 1433 ம் வருடம் விபவம் தை 13 ம் நாள் தானம் கொடுக்கப்பட்ட  நிலம் மற்றும் வேறு சலுகைகளை  செய்து கொடுத்த குன்னத்தூர்நாடு நாகைய மழவராய நயினார் அவர்களின் மகன் கட்டியப்ப நயினார்  அவர்களும் பெண்ணாகடம் பெரிய நாயக நயினார் மகன் பிரளயம் காத்த கடந்தையார்  கோத்திரத்தில் வந்த  பொன்னாலந்த கடந்தையாரும் அவர்கள் முன்னோர்கள் திசைமுக தேவர் என்ற சைவ சமய ஆசிரியருக்கு செய்து கொடுத்த சொத்து மற்றும் மரியாதைகளை பற்றியும் அவருடைய மடத்துக்கு உரிய எல்லை பற்றிய குறிப்பையும் மேலும்  கும்பகோணம் ,பேரளம்,திருவெண்காடு தாராசுரம்,சிதம்பரம்  போன்ற இடங்களில் இருந்த மடங்களை பற்றிய குறிப்பையும் அந்த செப்படு குறிப்பிடுகிறது.

 விஜயநகர அச்சுதராயர் காலத்தில் கும்பகோண மடத்திற்க்கும்  சிதம்பரம் பச்சை கண்டியர் மடத்துக்கு  எல்லை மற்றும் சொத்து பிரச்சினை வந்த போது மழவராய நயினார்கள்   தீர்த்து வைத்தனர் என்ற குறிப்பும் உள்ளது.




இதில் குறிப்பிட பட்ட மடங்கள் எல்லாம் வீர சைவ மதத்தை சேர்ந்த மடங்கள்  என்று கூறப்பட்டுள்ளது.

விஜயநகர விருப்பாட்சி தேவராயர் ராச்சியம் பண்ணும் வருடம் சக ஆண்டு 1433 ம் வருடம் விபவம் தை 13 ம் நாள்  ராசராச வளநாட்டு ராஜேந்திர சோழ வள நாட்டுள் மிழலை நாட்டுள் சேர்ந்த சோழ வளமாகிய தலத்துள்  வன்னியர் குல கிரில தரில நாட்டுக்கு அதிபதிபராகிய குண்ணத்தூர் கட்டியப்ப நயினார் குமாரர் நாகைய மழவராய நயினார் அவர்களும் பெண்ணாகடம் பிரளயம் காத்த கடந்தையார் கோத்திரத்தில் பொன்னளந்த கடந்தை குமாரன் பெரியநாயக்க நயினார் அவர்களும் நம்முடைய குண்ணத்தூர் காணிக்கும் பெண்ணாடக காணிக்கும் பூர்வாசார்யாராகிய குருக்களையயர் திசைமுக தேவர் அவர்களுக்கும் கடந்தையார் கிராமம் நாகையமழவராய நயினார் அவர்களுக்கும் சர்வ மானியமாக கொடுக்கப் பட்ட ஊர்களும் அதில் உள்ள நிலங்களுக்கு உரிய எல்லைகளும் கொடுக்கப் பட்டுஉள்ளது.




மாக்குடி,காரச்சேரி,கடம்பங்குடி,பண்ணைகிராமம், மாறபாடி,
நெடுங்கொல்லை,பூந்தோட்டம்,கீழ்மாராயம்,மேல்மாராயம்,நரிக்குடி,
ராசாக்கள் நல்லூர்,சோழபுரம் உள்ளிட்ட ஊர்களில் நல்லபெருமாள் பிள்ளை,மானாபிள்ளை,பெத்த பெருமாள் பிள்ளை,சிதம்பர முத்திரியன், ரெகுநாத முத்திரியன் இவர்களுக்கு பிரித்து கொடுத்து அதில் வரும் வருமானத்துக்கு திருவையாற்று சக்கரம் என்ற பணம் கொடுக்க கூறப்பட்டு உள்ளது.    




சோழ வாஞ்சமை நாட்டவர்கள் குருமடத்துக்கு மானிய கட்டளை தருமம்  

உள்ளூர் நாட்டவர், குருவூர் நாட்டவர்,கீழ்ஆனைமேடு நாட்டவர்,மண்மேடு பளைங்குட்ட நாட்டவர்,பீராக்கன் நாட்டவர்,பாவனூர் கூத்தனூர் நாட்டவர்,மாவுத்த யிருப்பு  நாட்டவர்,வாண்டாயிருப்பு நாட்டவர்,அம்மையப்பன்  நாட்டவர், மாறாசேரி நாட்டவர்,கீழ்நரிக்குடி நாட்டவர், புத்து நாட்டவர்,கோயிலாச்சேரி கண்ணங்குடையார் தர்மம், களம்பரம் நாட்டவர், மிழலை நாட்டவர்,சிறுகுடி நாட்டவர்,மட்டியூர் நாட்டவர்,உன்றாத்தம நாட்டவர்,சீபுரந்தான் நாட்டவர், முட்டம் நாட்டவர்,இருப்புணியாம் நாட்டவர்,மேலத்தியூர் நாட்டவர், வாழைகுறிச்சி நாட்டவர்,அமக்காவல் நாட்டவர், காவற்க்கூடம் நாட்டவர்,ஆளங்குரிச்சி நாட்டவர்,கடிச்சம்பாடி நாட்டவர், நீரத்தநல்லூர் நாட்டவர்,தேவனாச்சேரி  நாட்டவர்,ஆதனார் நாட்டவர், திருப்பிறம்பியம்  நாட்டவர், தின்னப்புலியூர் நாட்டவர் மடங்களுக்கு  மானியம் அளித்தவர்கள். 
                 கும்பகோணம் மடமும் -சிதமபரமடமும் செய்து கொண்ட எல்லை பிரச்சினைக்கு பற்றி விசாரணை செய்த மழவராய நயினார் 92 வயது கோவில் பூசகரின் உதவியுடன் தீர்த்து வைத்தார் என்ற குறிப்பு உள்ளது. திருவெண்காடு மடத்துக்கு அரியலூர் பாளையம் தானம் செய்யத செப்பேடு அவர்கள் அரசு முத்திரையுடன் உள்ளது என்றும் தற்போது திருவெண்காடு சோழபுர மடத்து திசைமுக தேவருடையது என்று தீர்த்து வைத்தனர்.



மழவராய நயினார்கள் தங்கள் பாட்டன்  செய்த தானத்தை மீண்டும் சரி செய்து வீர சைவ மடத்து பண்டாரங்களுக்கு நீங்கள் இன்று முதல் இந்த எல்லை பிரச்சனைக்கு வரவேண்டாம்.குருக்களயயர் வரத்தில் (அனுமதியில் ) தலம்  விடாமல் தலம் தாண்டி அனுபவித்து  கொண்டிருக்கட்டும் என்று கட்டளை யிட்டனர்.


     1511 AD செய்த செப்பேடு  மழவராய நயினார் அவர்களின் பாட்டனார் செய்த தானத்தை சரி செய்த செய்தியை கூறு கிறது.பதினான்காம் நூற்றாண்டுகளில்  ராசராச வளநாட்டு ராஜேந்திர சோழ வள நாட்டுள் மிழலை நாட்டுள் சேர்ந்த சோழ வளமாகிய தலத்துள்  வன்னியர் குல கிரில தரில நாட்டுக்கு அதிபர் என்ற செப்பேடு மிக முக்கியமான ஆவணம்

 கும்பகோணம் ,பேரளம்,திருவெண்காடு, தாராசுரம்,சிதம்பரம்  போன்ற இடங்களில் இருந்த மடங்களை பற்றிய குறிப்பையும் அந்த செப்படு குறிப்பிடுகிறது. இது கல்விக்கு பதினான்காம் நூற்றாண்டில் வன்னிய அரசர்கள் செய்த மிகப்பெரிய தொண்டு.இப்போது இந்த மடங்களும்  சொத்துக்களும் யார் கையில் இருக்கிறது என்ற ஆய்வை கண்டிப்பாக செய்து  நம் பாட்டன் சொத்து யார் அனுபவித்து வருகின்றானர் என்று இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும். 


பதினான்காம் நூற்றாண்டில் வன்னியர்கள் கல்விக்கு செய்த கொடை எல்லாம் வளந்தை என்ற பெண்ணை ஆற்றின் வடகரையில் இருந்து ஆரம்பித்து திருத்துறைப்பூண்டி பகுதியில் முடிகிறது. தற்போதைய் திருவாரூர் பகுதியின் கடம்பகுடியும்,நாகை உம்பளமும், நன்னிலம் பூந்தோட்டமும்,கும்பகோணம் கீழ்மாராயமும்,சோழபுரம் பகுதியின் நரிக்குடி ,ராஜாக்கள் நல்லூர் எல்லாவற்றையும் உள்ளடக்கிய பகுதியை தானமாக கொடுத்து உள்ளனர்.   தற்போது உள்ள இந்த ஊர்களின் பெயர்களை கொண்டே  கும்பகோணம் ,பேரளம்,திருவெண்காடு, தாராசுரம்,சிதம்பரம்    மடங்களின் எல்லைகளை அறிந்து கொள்ளலாம்.

       கும்பகோணத்தில்  மஹாமககுளக்கரையின்  வடகரையில் அமைந்து   உள்ள வீரசைவ மடமே இதில் குறிப்பிடப்பட்டுள்ள கும்பகோணம் மடம்.  

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.