Friday, 6 April 2018

கண்டன் மாதவன் - மாதவராயன் -வேளான் மாதவன் @ நரலோக வீரன் காலிங்கராயரின்மகனான ராஜவல்லப பல்லவராயன்

சூரை நாயகன் -மாதவராயன்:

                                                               முதலாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த நரலோக வீரன் என்று சிறப்பு பெயர் பெற்ற காலிங்கராயனின் மகனான சூரைநாயகன் பற்றிய சிறப்பு தகவல்கள்.


காரிகை குளத்தூர்: 

                                        மணவில் கூற்றத்து அரும்பாகிழான் என்ற பொற்கோயில் தொண்டைமான் @ நரலோக வீரன் மகனான சூரைநாயகன்  என்ற மாதவராயன் குலோத்துங்கன் மற்றும் விக்கிரமசோழன் காலத்தில் இருந்த படைதளபதி. நரலோகவீரன் அமிர்தசகர முனிவரை கொண்டு காரிகை சிறப்பு நூல் இயற்ற செய்தார். இதன் சிறப்பால் குளத்தூர் "காரிகை குளத்தூர்" என்று சிறப்பு பெற்றது.







தஞ்சை மாவட்டம் - தற்போது நாகை மாவட்டமாக இருக்கும் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த நீடூர்சிவன் கோவிலில் உள்ள இரண்டு கல்வெட்டுகள் .                                     
       


காரிகை குளத்தூர் மன்னவன்  - தொண்டை காவலன் -சிறுகுன்ற நாட்டு கற்பகம் -மிழலை நாட்டு வேள் -ஆண்டவன் -கண்டவன் மாதவன்..





   ‘‘எண்டிசை உலகை ஒருகுடை நிழற்கீழ்
           இருத்திய குலோத்துங்க சோழற்கு
      யாண்டொரு முப்பத் தெட்டினில் சோணாட்(டு)
           இசைவளர் இந்தளூர் நாட்டுள்
      உண்டைநீடியநீ டூர்உமை யோடும்
           உலாவிய சிவபெரு மானுக்(கு)
      உவந்து வெண்கயிலை மலைஎனச் சிலையால்
           உத்தம விமானமிங் கமைத்தான்
      தண்டமிழ் அமித சாகர முனியைச்
           சயங்கொண்ட சோழ மண்டலத்துத்
      தண்சிறு குன்ற நாட்டகத் திருத்திச்
           சந்தநூற் காரிகை அவனால்
      கண்டவன் மருமான் காரிகைக் குளத்தூர்க்
           காவலன் நிலாவினான் எவர்க்கும்
      கருணையும் நிதியும் காட்டிய மிழலை
           நாட்டுவேள்கண்டன்மாதவனே’’













கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்காக்கிநாடா பகுதியில்  உள்ள பீமாவரம் நாராயணசுவாமி  கோவிலில் முன் உள்ள  கல்வெட்டு.

சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளது..

சகதமண்டனி நாட்டை சேர்ந்த சளுக்கிபீமாபுரம் நாராயண் கோவிலில் குலோத்துங்கனின் 45 ஆம் ஆட்சியில் அவரது மிகச்சிறந்த அமைச்சர்  மாதவன் @ ராஜவல்லப பல்லவராயன் அமைத்த விளக்கு.

கண்டன் மாதவன் சோழமண்டலத்து  விருதுராஜா பயங்கர வளநாட்டு மன்னை நாட்டு கடம்பக்குடிக்கு  அரசன்.

இதே ஊர் தான் பின்னாளில் குளத்தூர் என்று அழைக்கப்பட்ட பல்லவராயன் பேட்டை.






Sandhivigrahi  -  minister for foreign affairs :


ராஜவல்லப பல்லவராயர் @ மாதவராயன் @ வேள் கண்டன் மாதவன் என்று அழைக்கப்படும் நரலோகவீரன் மகன் குலோத்துங்கன் 20 ம் ஆட்சி ஆண்டில் சிறிய லேடன் செப்பேடுகளில் குலோத்துங்கன் ஆணையை செயல் படுத்தியவர். இவரை சந்திவிக்ரகி எனற வெளியுறவு துறை அமைச்சர் என்று குறிக்கப்பட்டு உள்ளது.
இவரே குலோத்துங்கனின் 45 வது ஆட்சி வரை அமைச்சராக தொடர்ந்து வந்துள்ளதற்கு கல்வெட்டுகள் உள்ளது.








பல்லவராயன் என்பது பட்டம் இல்லை - பல்லவ வழி வந்த அரசர்கள் மட்டுமே பயன்படுத்தியது.

சேக்கிழார் என்ற வெள்ளாளாருக்கு  உத்தம சோழ பல்லவராயன்  என்று பட்டம் சோழன் கொடுத்தா சொல்வது எல்லாம் கட்டு கதை.

உத்தம சோழ பல்லவராயன் என்பவர் இருந்த காலம் ராஜராஜன் i  காலம் அவரது பெயர் ஈராயிரவன் பல்லவராயன்.

பல்லவராயன்  -- தொண்டைமான் எனபது அகம்படிக்கோ - வெள்ளாளருக்கோ வழங்கப்பட்ட  பட்டமோ-- சிறப்பு பெயரோ அல்லது   அரசன் கொடுக்கும் விருதோ கிடையாது. பிறப்பால் வந்ததை யாரும் பிச்சை எடுக்க முடியாது..







Sunday, 24 September 2017

வன்னிய மலைமண்டல மாதாக்கள் -மலைமண்டல நாயக்கர்கள்


மலை மண்டலம்:   

                                    மலைமண்டலம்  என்பது தொண்டைமண்லத்தின் ஒரு பகுதி இதை மறைத்து மலையாள தேசத்தின் பகுதி என்று கதைகளை எழுதும் தொல்லியல் துறை அறிவாளிகள்மிகப்பெரிய வரலாற்றை மறத்து உள்ளனர்.

மலை மண்டலத்து நாயக்கர்களான வன்னியர்களே வியாபாரக்குழுவிற்கு தலைமை வகித்துள்ளார்கள். அவர்களை மாதாக்கள் என்று குறிப்பிடும் கல்வெட்டுகள் அதிகம் கிடைத்துள்ளது.

பொழிச்சலூர் என்று இப்போது அழைக்கப்படும் பல்லாவரம் பகுதி தான் அப்போதைய ஐயாபொழில் நகரம். மலைமண்டலத்து வணிகநகரமான எறிவீரபட்டினம். மல்லை,மயிலை ,சதுரங்கப்பட்டினம் என்ற ராஜநாராயண சம்புவராயன் பட்டினம், கோவளம், நீலகங்கரையர் பட்டினம் வழியாக வரும் பொருட்களை விற்க்கும் இடமாக இருந்தது.


இலங்கையில் உள்ள மலைமண்டல மாதாக்கள் பற்றிய கல்வெட்டுகள்:

திருமலை மாதாக்களான அரசூருடையான் திருச்சிற்றம்பலமுடையானான -திருசிற்றம்பல பல்லவராயன் பற்றிய கல்வெட்டு குறிப்புகள். மலைமண்டலம் என்பதை கொண்டு சேதிரயரை மலையாள தேசத்தை சேர்ந்தவராக மாற்றி உள்ளனர். அவரையே மலைமண்டல நாயக்கர் வன்னியனார் என்று குறிக்கப்பட்டு உள்ளனர்.


மூன்றாம் குலோதுங்கன் காலத்தில் மலைமண்டலத்தில் இருந்தவர்களை பற்றிய குறிப்புகளே இலங்கையில் கிடைக்கிறது. இவர்களில் முக்கியமானவர்கள் நீலகங்கரையர்களும் சேதிராயரும் சம்புவராயரான பல்லவராயர்களும்.







மூன்றாம் ராஜராஜ சோழன் காலத்தில் இருந்த பல்லவனே அந்த மலைமண்டல மாதாக்கள் என்று அழைக்கப்பட்டவர்.





 எதிரிலி சோழ சம்புவராயர்  மகனான பிள்ளை பெருமாள் பல்லவராயன் இலங்கை தண்ட நாயக்கர்களிடம் போர் செய்ய சென்றபோது போரில் வெற்றி பெற தனது குருவான்   உ மாபதி தேவரிடம் அகோர பூஜை செய்ய வேண்டிய செய்தி.


















பாண்டியன் மீண்டும் இலங்கை அரசனுடன் சேர்ந்து சோழனுக்கு எதிராக போர் செய்யவும் சோழ எல்லை வரை வந்து தாக்கியதும் பல்லவராயன் தலைமையில் சோழர்கள் தாக்கிய செய்தி.

பழையனூருடையான்   - வேதவனமுடையான் -அம்மையப்பன்  @அண்ணன் பல்லவராயன்  தலைமையில் சென்றவர்கள் இலங்கை படையின் தண்டநாயக்கர் இருவரையும் கொண்டு தலையை மதுரையில் கோட்டை
வாசலில் தொங்கவிட்டார். பின்னர் இலங்கைக்கு  சென்று  ஊராத்துறை, வலிகாமம்,வல்வெட்டிதுறை ஆகிய ஊர்களில் புகுந்து தாக்கியும்  கொல்வாரை கொன்று யானையையும் பொருட்களையும் திரைகொண்டு வந்ததாக கல்வெட்டு உள்ளது.  


இந்த கல்வெட்டில் உள்ள இருவர் இலங்கையில் உள்ள ஒரு முக்கிய கல்வெட்டில் உள்ளனர். நீலகங்கரையர் மற்றும் அவரது சமந்தரான வில்லவராயன்.









12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வளஞ்சியர் செய்த சாசனத்தில் மலைமண்டல மாதாக்கள் பற்றிய குறிப்புகள்.
ஸ்வஸ்தி ஸ்ரீ  லங்காயாம் ஜினதந்ததாது பவனம் யத் தேவஸேனாதிபோ - கார்ஷீத் ஸ்ரீ விஜயாதிவாஹ ந்நபராதேசா, த் புலஸதேஹ் புரே வேளைக்காற ஸமா (கதா) ந் தத், அபி த த் பர்யந்த தேவாலயாந் வேளைக்காற ப, லாநிபாந்து நிதராம் ஆகல்ப ஸந்தேர் புவிநமோபுத்தாய ஸ்ரீலங்காத்பீபத்து ஸுர்ய வம்சத்து ஈசுஷ்வாகு (வி ன் வழி வந்த அநேக சத்ரு விஜயம் பண்ணி அநுராதபுரம் புக்கு புத்தர் சாஸ்ஸநம் ரகூரிக்க வேண்டி ஸங் க. நியோகத்தால் திருமுடி சூடி அருமணத்தில் நின்றும் சங்கத்தாரை அழைப்பித்து மூன்று நிகாய த்து ஸங்கஸத்தி, பண்ணுவித்து மூன்று துலாபாரம் மூன்று நிகாயத்துக்கு குடுத்து தஸராஜ தர்ம்மத்தால் ஐம்பத்தய் யாண்டு இலங்கை முழுதும் ஒரு குடை நிழ ற்றித் திருவிராஜ்யஞ் செய்தருளி எழுபத்து மூவாண்டு திரு ந கூடித்ரஞ் செலுத்தின கோ ஸ்ரீஸங்கபோதி வந்மரான சக்ரவர்த்திகள் ஸ்ரீவிஜயபாஹ" தேவர்வர்கள் தேவசேனவிரத்தர்க்கு நியோகித்து புலநரியான விஜயராஜபுரத்து எடுப் பித்த மூலஸ்தாநமாகிய அபயகிரி மஹாவிஹாரத்து அக்ராயதனமான உத்தொருள் மூளையில் மூவுலகுக்கும் சிகாமணியாகிய தளதாபாத்ரதாது ஸ்வாமிதேவர்களுக்கு நித்யவாஸப வநமாந ப்ரதமாபிஷேகத்துக்கு மங்கள க்ருஹமாந ஆட்டாண்டு தோறும் திருநயநமோகூரம் பண்ணி அஞ்சந நிறுக்கும் கண்ணாலஞ் செய்யும் மங்கள மஹாஸிலாமய புத்ததேவர்க்கு கந்தகுடியான தளதாய்ப் பெரும்பள்ளி உங்கள் ரக்ஷையாக வேண்டுமென்று ஸகல சாஸ்த்ராகம ஸிலாசார ஸம்பந்நரான ராஜகுரு உதுருள்மூளையில் வ்யாரிணி முகலந்மஹாஸ்தவிரர் ராஜாமாத்யரோடும் கூட எழுந்தருளியிருந்து எங்களை அழைத்து அருளிச் செய்தமையில் மாதந்திரத்தோங் கூடி எங்களுக்கு மூதாதைகளாயுள்ள வளஞ்செயரையும் எங்ளோடு கூடிவரும் நகரத்தாருள்ளிட்டாரையும் கூட்டி மூன்றுகைத்திருவேளக்காந்தளதாய்ப்பெரும் பள்ளியென்று திருநாமஞ் சாத்தி எங்களறமாய் எங்கள் காவலாய் நிற்க வேண்டு மென்று அறங்காவலுக்கு படைப் படையால் ஒரோ சேவகரையும் ஒரோ வேலி நிலமும் இட்டுக் குடுத்து இப் பள்ளி நோக்கின ஊர்களும் பரிவாரமும் பண்டாரமும் அபயம் புக்காரையும் பட்டும் கெட்டும் காக்கக் கடவோமாக வும் அழிவு பட்டடங்கள் அழிவு சோர்ந்தும் எங்கள் அந்வயமுள்ளதநையு மெஞ்ஞான்றும் இதுக்கு வேண்டுவன - வெ லாஞ் செய்வோமாகவும் பண்ணின இந்த வ்யவஸ்தை, சந்த்ராதித்யவரை நிற்பதாகக் கைவினா வேற்றிச் செம்பிலும் கல்லி லும் வெட்டுவித்துக் குடுத்தோம் வலங்கை இடங்கை சிறுதநம்பிள்ளைகள் தனம் வடுகர் மலையாளர் பரிவாரக் கொந்தம் பல கலனையும் உள்ளிட்ட திருவேளைக்காறரோம் இப்படி திறம்புவானும் திறம்பச் சொல்லுவானு திறம்பச்சம்மதிப்பானும் மாதந்திரத்துக்குப் பிழைத்த படைப்பகைஞன் பஞ்சமஹாபாதகஞ் செய்தானும் தேவர் பூதர் மாதவத்தோர்க்குக் குடுத்தன கொள்ளும் கொடும் பாவியும் புத்ததர்ம்ம ஸங்கரத்நங்ககளுக்குப் பிழைத்தா னும் புகுந் நரகம் புகுவார் அறமறவற்க. 
ஸ்வஸ்திஸ்ரீ "குழலாலபுரபரமேசிரந் கங்கைகுலோத்தமன் காவேரிவல்லவன் நந்தி கிரிஞ்சதன் உத்தமசோழன் பேரால் மண்டலநாயகத்துக்கு உடன்படு வேளைக்காறன் ஒலைக்காறன் மாதேவன் நேர்ஆணத்தி.”இச்சாசனம் இருவரின் பெயர்களைக் குறிப்பிடுகின்றது. 

அவர்களில் ஒருவன் நந்தி கிரிஞ்சதன்  குழலாலபுர பரமேசிரந் என்பது குவளாலபுர பரமேஸ்வரன் என்று அழைக்கப்பட நீலகங்கரையர்கள்.அவர்களது சிறப்பு பெயர்கள்  கங்கைகுலோத்தமன்,காவேரிவல்லவன்,நந்திகிரிஞ்சதன். இந்த  சாசனம் எழுதப்பட்ட கல்லின் மேற்பாகத்திலே செதுக்கப்பட்டுள்ள புலியின் உருவம் சோழனது கீழ் உள்ளதை  உறுதி செய்கின்றது. இந்த கல்வெட்டை எடுத்தவர் நீலகங்கரையரின் வேலைக்காரன் மாதேவன்.  



நீலகங்கரையர்கள் என்ற சோழ கங்கர்கள்:     கூத்தாடும் தேவனான பிருதிவிகங்கன் வன்னிய மாதேவன் சோழன கங்கன்.


அழகிய சோழன் வரந்தரும் பெருமாளான சோளேந்திர சிங்க பிரிதிவி கங்கன்:





நந்தி கொடி உடையவன் நீலகங்கரையர்கள் தான் ஆரியசக்ரவர்த்திகளுக்கு முன் சேதுபதியாக இருந்தவர்கள் எனபதற்கு இந்த சேது பதித்த காசுகளே ஆதாரம்.

ஹோய்சாலர் காலத்தில் கோப்பெருஞ்சிங்கனுக்காக போரிட்டு சிதம்பரத்தில்   உயிர் இழந்த இலங்கை அரசர்கள் என்று குறிக்கப்படுபவர்கள் இவர்களாகவே இருக்கும்.

ஹோய்சால தண்டநாயகரிடம் மணஉறவு கொண்ட யாதவராயர்கள் ஆரிய சக்ரவர்த்திகளாகவும் சேதுபதிகளாக மாறியது நீலகங்கரையர்கள் காலத்துக்கு பின்னர் தான். 




 இலங்கையில் வன்னியர்கள் இல்லை என்று கதை சொல்லும் அறிவாளிகளுக்கு இன்னும் நிறைய வரலாற்று ஆவணங்கள் எல்லாம் இலங்கை பகுதியில் இருந்தே கிடைத்து உள்ளது.








Sunday, 12 February 2017

வன்னிய கருணாகர தொண்டைமான் - VANNIYA KARUNAKARA TONDAIMAN



Karunakara Thondaiman alias Karunakara Pallavaraiyan alias Karunakaran was the Pallavan king, the prime minister and the undaunted general of Ko Rajakesarivarman Abaya Kulottunga Chola. He had sacked Lanka and Kalinga to show his loyalty to his king. He is the much celebrated, larger than life hero of Jayamkondar's poem and war-song Kalinkkattuparani. After the period of Kulottunga Chola I, he continued to serve as the prime minister of the former's son Vikrama Chola as well.



பன்னிரண்டாம் நூற்றாண்டில் செயங்கொண்டாரால் பாடப்பட்டது கலிங்கத்துப் பரணி.கலிங்க நாட்டு அரசன் அனந்தவர்மனை வெற்றி கொண்ட போர்தான் கலிங்கப்போர். இன்றைய ஒரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக விளங்கியது. பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடும் பாடல் என்று பொருள்.கருணாகர தொண்டைமான் என்ற தளபதியைக் கொண்டு முதல் குலோத்துங்க சோழன் அனந்தவர்மனை வென்ற கலிங்கப் போரைப் பற்றியதே கலிங்கத்துப் பரணி. இவன் தொண்டை நாட்டை ஆண்டு வந்த பல்லவ அரசன் ஆவான். சோழ மாமன்னனான குலோத்துங்கனுக்கு உட்பட்ட சிற்றரசர்களில் ஒருவனாய் நெருங்கிய நண்பனாகவும் இருந்திருக்கிறான். இந் நட்பு காரணமாகவே குலோத்துங்கன் காஞ்சியில் வந்து படைகளுடன் தங்கினான் என்பர். கருணாகரன் கலிங்கப் போருக்குப் படைத்தலைவனாய்ப் புறப்படும் போது, இவனுடைய தமையனும் குலோத்துங்க சோழனின் நன்பனுமாகிய பல்லவனும் உடன் சென்றான் எனக் குறிக்கப்படுகிறது.



"தொண்டையர்க் கரசு முன்வ ருஞ்சுரவி

துங்க வெள்விடை உயர்த்த கோன்

வண்டையர்க்கரசு பல்லவர்க்கரசு

மால் களிற்றின் மிசை கொள்ளவே" -- (பாடல். 364)



 
என்ற பாடலால் இதை அறியலாம். தமையன் தொண்டை நாட்டை ஆள, குலோத்துங்கனுக்குப் படைத் தலைவனாய் அமைந்த கருணாகரன், வண்டைநகரின் கண் இருந்த பகுதியை ஆட்சி செய்தான் என அறியலாம். இவன் வண்டையர்க்கரசு என்றே பல இடங்களில் குறிப்பிடப்படுகிறான். 

      
அலகில் செருமுதிர் பொழுது வண்டையர்
 
அரச னரசர்கள் நாதன் மந்திரி
 
உலகு புகழ் கருணாகரன்றன தொருகை

 யிருபணை வேழ முந்தவே!
 
    
கடற்கலிங்க மெறிந்துசயத் தம்ப நாட்டிக்
 
கடகரியுங் குவிதனமுங் கவர்ந்து தெய்வச்
 
சுடர்ப்படைவா ளபயனடி யருளி னோடுஞ் 

 சூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே 

  வண்டை வளம்பதி பாடிரே

  மல்லையுங் கச்சியும் பாடிரே

  பண்டை மயிலையும் பாடிரே

  பல்லவர் தோன்றலைப் பாடிரே - பாடல் . 534

கம்பர் எழுதிய நூல்களில் ஒன்று சிலை எழுபது அந்நூலில் தொண்டைமான் பட்டம் பெற்ற கருணாகரனை வன்னியர் குல வேந்தன் என்றும் சம்பு குலத்தவன்என்றும் கம்பர் குறிப்பிட்டு இருக்கிறார் .கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு,
சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக பல்லவநாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி (கி.பி. 1070-1118)கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய
வன்னியர் பெருமையை பற்றி கம்பர் பாடியது இந்நூல். இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு,அணிகலன்கள் மற்றும்ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாகஅறியப்படுகிறது. சிலையெழுபது எனும் நூல் கி.பி.12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. சோழர்ஆட்சியின்போது எழுதப்பெற்ற இந்நூலில் வன்னியர் குலத்தினராகக் குறிப்பிடுவது பள்ளி இனத்தவரையே. இந் நூலில் வன்னியர் பள்ளி நாட்டார், வீர பண்ணாடர் என்றும் தழலிடை அவதரித்தோர் என்றும் குறிப்பிடப்படுகின்றனர். மேலும் சம்பு முனிவர் யாகத்தில் தோன்றியவர்
வன்னியர் என்றும் கூறப்பட்டுள்ளது.


கருணாகர தொண்டைமான் வன்னியர் குலம் என கம்பர் பாடிய பாடல் பின்வருமாறு :

சம்புகோத்திரச் சிறப்பு

சாத்திர மறைகள் சொற்ற தனிநியமம்வ ழாதோர்
சூத்திரந் தவறில்வன்னி தோன்றுமெய்ப் புகழ்காப் பாளர்
மாத்திரை யளவுஞான மறைப்பின்மா தவங்கூர் சம்பு
கோத்திர வரசர்க் கொப்புக் கூறுவதெவரை மாதோ. 4


வன்னியர் குலச் சிறப்பு

விதிகுலத்தோர் சிறப்புறச்செய் வேள்விக்குச் சிறந்தவன்னி
உதிகுலத்தோ ராதலினா லுயர்குலத்தோ ராமிவர்க்கத்
துதிகுலத்தோ ரொவ்வாரேற் சொலும்வணிக குலத்தோரும்
நதிகுலத்தோர் களுமெங்ஙன் நாட்டினிலொப் பாவாரே. 6



வன்னியர் குலச் சிறப்பு
மறைக்குலத்தி லுதித்தாலென் மறையுணர்ந்தா லென்வணிகர்
நிறைக்குலத்தி லுதித்தாலென் நிதிபடைத்தா லென்னான்காம்
முறைக்குலத்தி லுதித்தாலென் முயற்சிசெய்தா லென்வன்னி
இறைக்குலத்தி லுதித்தவரே இகபரனென் றியம்புவரே. 7



பரிசுதரற் சிறப்பு
அவிக்கா தரங்கூர் புனிதர்மகிழ்ந்
தருள்வன் னியரை யாம்புகழ்ச்
செவிக்கா ரமுதமெனக் கேட்டுச்
சிந்தையுவந்து சீர்தூக்கிப்
புவிக்கா யிரம்பொ னிறைநீக்கிப்
பொற்றண் டிகபூடணத்தோடு
கவிக்கா யிரம்பொன் பரிசளித்தான்
கருணாகரத்தொண்டை வன்னியனே. 68

விற்போர் சிறப்பு (12)
வட்டவுல கிற்கொடிய நெட்டவுண ரைச்சமரின்
மட்டறவி டித்தெதிரெயிற்
கிட்டவறு பட்டதலை நட்டுவிழ மொட்டையுடல்
கெட்டுருட ரக்கு ருதிநீர்
கொட்டநுரை கட்டிடமி கச்சுழிசு ழித்தலைகொ
ழித்துநதி யிற்புகவழி
விட்டுறுமி நெட்டையிடுமக் கினி குலத்தரச
விக்ரமரெ டுத்த சிலையே!

திருமங்கை ழ்வாரால் பாடப்பெற்றோர்
வளமருவு மங்கையர்கோன் சொலத்தகு
பல்லவராயன் மரபிற் றோன்றிக்
களமருவு கறையுடைய கண்ணுதல்கச்
சியின் வாழே கம்பரேசற்
குளமருவு மன்பினரா யொளிர்மகுட
மணிப் பொற்றே ருதவிமேனாள்
தளமருவு தாமரைபோன் முகவனியர்
படைத்தபுகழ் சாற்றற் பாற்றோ. 50

குலத்தலைவர் படைச் சிறப்பு :


விடையுடையார் வரமுடையார்
வேந்தர்கோ வெனலுடையார்
நடையுடையார் மிடியுடைய
நாவலர்மாட் டருள்கொடையார்
குடையுடையார் மலையன்னர்
குன்றவர்பல் லவர்மும்முப்
படையுடையார் வனியர்பிற
ரென்னுடையார் பகரீரே. 8


இப் பாடல்களில் வன்னியர்களை சம்புகுலதவர் , தழலிடை 
அவதரித்தோர் என்றும் குறிப்பிடப்படுகிறார் கம்பர் .




Saturday, 24 September 2016

காலிங்கராயர்-நரலோக வீரன்-சபா நர்த்தகா-பொன்னம்பல கூத்தன் - kalingaraya the hero of kalinga war one of the bravest son of pallis




 நரலோக வீரன் என்ற காலிங்க ராயர்  முதலாம் குலோத்துங்கன் மற்றும்  அவர் மகன் விக்கிரம சோழனின் படைத்தலைவனாக இருந்தவர்.அவரை பற்றிய குறிப்புகள்:




 சிதம்பரம் கோயில் கல்வெட்டுகள்.
————————————————
காலிங்கராயரின் சிதம்பரத்து வெண்பாக் கல்வெட்டுக்கள்.
(தென்னிந்திய சாஸனங்கள் volume.IV-எண்- 225.)
———————————————————————–




    1 - (கொடுங்கை பொன்வேய்ந்தமை)
    எல்லை கடலா இகல்வேந் தரைக்கவர்ந்த
    செல்வமெலாம் தில்லைச்சிற் றம்பலத்துத் - தொல்லைத்
    திருக்கொடுங்கை பொன்வேய்ந்தான் திண்மைக் கலியின்
    தருக்கொடுங்க வேல்கூத்தன் தான்

    2 - (அம்பலத்தை செம்பொன்வேய்ந்தமை)
    தில்லையில்பொன் னம்பலத்தைச் செம்பொனால் வேய்ந்துவா
    னெல்லையைப் பொன் னாக்கினான் என்பரால் - ஒல்லை
    வடவேந்தர் செல்வமெலாம் வாங்கவேல் வாங்கும்
    குடைவேந்தன் தொண்டைதார் கோ

    3 - (சிற்றம்பலம் பொன்வேய்ந்தமை)
    தென்வேந்தன் கூன்நிமிர்ந்த செந்தமிழர் தென்கோயில்
    பொன்வேய்ந்து திக்கைப் புகழ்வேய்ந்தான் - ஒன்னார்க்கும்
    குற்றம்பல கண்டோன் கோளிழைக்கும் வேல்கூத்தன்
    சிற்றம் பலத்திலே சென்று

    4 - (ஆடம்பலம் பொன்வேய்ந்தமை)
    பொன்னம் பலக்கூத்தர் ஆடம் பலம்மணவிற்
    பொன்னம் பலக்கூத்தர் பொன்வேய்ந்தார் - தென்னர்
    மலைமன்னர் ஏனை வடமன்னர் மற்றக்
    குலமன்னர் செல்வமெலாம் கொண்டு

    5 - (பேரம்பலம் பொன்வேய்ந்தமை)
    தில்லைச்சிற் றம்பலத்தே பேரம் பலம்தன்னை
    மல்லற் கடற்றானை வாள்கூத்தன் - வில்லவர்தம்
    அம்புசேர் வெஞ்சிலையின் ஆற்றல்றனை மாற்றியகோன்
    செம்பு வேய்வித்தான் தெரிந்து

    6 - (பசுநெய் வார்க்க செம்பொற்கலம்)

    ஏனை வடவரசர் இட்டிடைந்த செம்பொனால்
    ஏன லெனதில்லை நாயகற்கு - ஆனெய்
    சொரிகலமா மாமயிலைத் தொண்டையர்கோன் கூத்தன்
    பரிகலமா செய்தமைத்தான் பார்த்து

    7 - (படிகள் பொன்தகடு பொதிந்தமை)
    தெள்ளு புனற்தில்லைச் சிற்றம் பலத்தார்க்கு
    தள்ளிஎதி ரம்பலந்தா தன்பாதம் - புள்ளுண்ண
    நற்பயிக்கம் கண்ட நரலோக வீரன்செம்
    பொற்படிக்கம் கண்டான் புரிந்து

    8 - (ஆராதனையில் ஊது செம்பொற்காளம்)
    இட்டான் எழில்தில்லை எம்மாற் கிசைவிளங்க
    மட்டார் பொழில்மணவில் வாழ்கூத்தன் - ஒட்டாரை
    இன்பமற்ற தீத்தான மேற்றினான் ஈண்டொளிசேர்
    செம்பொற் தனிக்காளம் செய்து

    9 - (கர்ப்பூரம் தீபம், உயர்ந்த விளக்கு)
    ஆடும் தனித்தேனுக் கம்பலத்தே கர்ப்பூரம்
    நீடுந் திருவிளக்கு நீடமைத்தான் - கூடா
    ரடிக்கத் திணைநரியும் புள்ளும் . . .
    கடிக்கப் பெருங்கூத்தன் தான்

    10 - (திருச்சுற்று விளக்கு ஈடு)
    பொன்னம் பலம்சூழப் பொன்னின் திருவிளக்கால்
    மன்னுந் திருச்சுற்று வந்தமைத்தான் - தென்னவர்தம்
    பூவேறு வார்குழலா ரோடும் பொருப்பேற
    மாவேறு தொண்டையார் மன்

    11 - (திருமஞ்சனக்கட்டம்)
    சிற்றம் பலத்தானை ஏற்றினார் தெவ்விடத்துக்
    கொற்றத் தால்வந்த கொழுநெதியால் - பற்றார்
    தருக்கட்ட வஞ்சினவேல் தார்மணவிற் கூத்தன்
    திருக்கட்ட மஞ்சனமும் செய்து

    12 - (பாலமுது)
    தொல்லைப் பதித்தில்லைக் கூத்தற்குத் தொண்டையர்கோன்
    எல்லைத் திசைகரிகள் எட்டளவும் - செல்லப்போய்ச்
    சாலமுது பேய்தடிக்க தாறட்டிக்கத்தங்கு தொண்டையர்கோன்
    பாலமுது செய்வித்தான் பரிந்து

    13 - (நாழி நாழியாக தேன்)
    ஆடுந் தெளிதேனை ஆயிர நாழிநெய்யால்
    ஆடும் படிகண்டான் அன்றினர்கள் - ஓடந்
    திறங்கண்ட தாளன் சினக்களிற்றான் ஞாலம்
    அறங்கண்ட தொண்டையர்கோன் ஆங்கு

    14 - (திருப்பதிகம் ஓத மண்டபம்)
    நட்டப் பெருமான் ஞானங் குழைந்தளித்த
    சிட்டப் பெருமான் திருப்பதியம் - முட்டாமைக்
    கேட்போர்க்கு மண்டபத்தைச் செய்தான்தெவ் வேந்தர்கெட
    வாட்போக்கும் தொண்டையர்கோன் மன்

    15 - (திருப்பதிகம் ஓதுவித்தமை)
    மல்லக் குலவரையால் நூற்றுக்கால் மண்டபத்தே
    தில்¨ப் பிரானுக்குச் செய்தமைத்தான் - கொல்ல
    மழிவுகண்டான் சேரன் அளப்பரிய ஆற்றற்
    கிழிவுகண்டான் தொண்டையர்கோ னேறு

    16 - (திருச்சுற்று மாளிகை)
    தில்லைப் பெரிய திருச்சுற்று மாளிகை
    எல்லைக் குலவரைபோ லீண்டமைத்தான் - தொல்லைநீர்
    மண்மகளைக் தங்கோன் மதிகுடைக்கீழ் வீற்றிருத்தி
    உண்மகிழும் தொண்டையர்கோ னுற்று

    17 - (தீர்த்த நீர் குளம் கல்சாத்துவித்தல்)
    புட்கரணி கல்சாத்து வித்தான்பொற் கோயிலின்வாய்
    விக்ரணம் பார்படத்தன் மேல்விதித்து - திக்களவு
    மாநடத்தி கோனடத்தும் வாள்கூத்தன் மண்ணிலறம்
    தானடத்தி நீடுவித்தான் தான்

    18 - (சுற்று வீதிகளில் விளக்கு, படிமண்டபம்)
    வீதிசூழ் நல்விளக்கும் வீற்றிருக்க மண்டபமும்
    மாதுசூழ் பாகமும் மகிழ்ந்தார்க்கும் - போதுசூழ்
    தில்லைக்கே செய்தான் திசைகளிறு போய்நிற்கும்
    எல்லைக்கே செல்கலிங்க ரேறு

    19 - (அம்மைக்கு திருமாளிகை)
    நடங்கவின்கொ ளம்பலத்து நாயகச்செந் தேனின்
    இடங்கவின்கொள் பச்சையிளந் தேனுக் - கடங்கார்
    பருமா ளிகைமேல் பகடுதைத்த கூத்தன்
    திருமாளி கைஅமைத்தான் நன்று

    20 - (அம்மை கோயில் திருச்சுற்று)
    எவ்வுலகும் எவ்வுயிருமீன்று மெழிலழியாச்
    செவ்வியாள் கோயில் திருச்சுற்றைப் - பவ்வஞ்சூழ்
    எல்லைவட்டம் தங்கோற் யகல்வித்த வாட்கூத்தன்
    தில்லைவட்டத் தேயமைத்தான் சென்று

    21 - (அம்மைக்கு அபிஷேகம்)
    வாளுடைய பொற்பொதுவின் மன்றத்தே நடமாடும்
    ஆளுடைய பாவைக் கபிடேகம் - வேளுடைய
    பொற்பினான் பொன்னம்பலக் கூத்தன் பொங்குகட
    வெற்பினாற் சாத்தினான் வேறு

    22 - (அம்மைக்கு பொன்னாடைகள்)
    சேதாம்பல் வாய்மயிற்கு தில்லையந் தேவிக்கும்
    பீதாம்பரஞ் சமைத்தான் பேரொலிநீர் - மோதா
    வலைகின்ற வெல்லை வெல்லை அபயனுக்கே யாக
    மலைகின்ற தொண்டையார் மன்

    23 - (அம்மைக்கு அபிஷேக எள்நெய்)
    செல்வித் திருத்தடங்கண் ணாள்நகரித் திலைக்கே
    நல்லமகப்பா லெண்ணெய் நாள்தோறும் - செல்லத்தான்
    கண்டாரும் பயர்கோன் கண்ணகனீர் ஞாலமெல்லாங்
    கொண்டான் தொண்டையர் கோன்

    24 - (கொடிமரம்)
    பொன்னுலகு தாம்புலியூர் தொழுவதற்கு . . .
    குன்னிழி கின்ற சொர்க்கமால் - தென்னர்
    . . டா மற்செகுத்த கூத்தன்செம் பொன்னின்
    கொடிபுறஞ் செய்தகு மா (பிழை திருத்தமில்லை)

    25 - (வெளிவீதி உலா பரிகலங்கள்)
    ஆதிசெம்பொன் அம்பலத்தி லம்மா னெழுந்தருளும்
    வீதியும்பொன் வேய்ந்தனனாய் மேல்விளங்கும் - சோதிக்
    கொடியுடைதாய்ப் பொன்னால் குறுகவலான் ஒன்றும்
    படியமைத்தான் தொண்டையர்கோன் பார்த்து

    26 - (வெளிவீதி உலாவில் குங்கிலிய தூபம்)
    நாயகர் வீதி எழுந்தருளும் நன்நாளால்
    தூய கருவெழு தூபத்தால் - போயளிசேர்
    வான்மறைக்கக் கண்டானிப் பார்மகளை வண்புகழால்
    தான்மறைத்த கூத்தன் சமைத்து

    27 - (வெளிவீதி திருவிழா உலாக்கள்)
    பாருமை மொட்பச் செய்வீர் சீரிய
    திருவுருவ மானதிருக் கோலம் - பெருகொளியால்
    காட்டினான் தில்லைக்கே தாசனனாய் வெங்கலியை
    ஓட்டினான் தொண்டையர் கோன்

    28 - (சந்தனம்?)
    என்றும்சிற் றம்பலத் தெங்கோமா நந்தீசன்
    கெடைமுலகே தகச் சாந்தமைத்தான் - கல்லுவந்
    துயினக்கொளவீர் கொள்வென்னல் வெல்களர்களிரி
    வரித் திருத் தொண்டையர்கோன் வென்று (பிழை திருத்தமில்லை)

    29 - (கணங்களுக்கு திருவமுது)
    மன்றுதிகழ் தில்லைக்கே மாணிக்க மரசகணம்
    துன்றுபொழில் மணவில் தொண்டைமான் - என்றும்
    இருந்துண்ணக் கண்டான் இகல்வேந்தர் ஆகம்
    பருந்துண்ணக் கண்டான் பரிந்து

    30 - (வெளி வீதிகளில் திருமடங்கள்)
    தில்லை தியாகவலி விண்சிற் பஞ்சமினி
    எல்லை நிலங்கொண்டி றையிழிச்சி - தில்லை
    மறைமுடிப்பார் வீதி மடஞ்சமைத்தான் மண்ணோர்
    குறைமுடிப்பார் தொண்டையர் கோ

    31 - (அணிசெய் முத்து மாலைகள்)
    என்றும் பெறுதலில் ஏறா யெழிற்புலியூர்
    மன்றில் நடனுக்கு மாமுத்தக் - குன்று
    கொடுத்தருளி மண்ணிற் கொடுங்கலி வாராமே
    தடுத்தான்தொண் டையர்கோன் தான்

    32 - (திருமுறைகள் செப்பேட்டில் பதிவு)
    முத்திறத்தா ரீசர் முதற்திறத்தைப் பாடியவா
    றொத்தமைந்த செப்பேட்டி னுள்ளினெழு - தித்துலக்கி
    லெல்லைக் குரிவா யிசையெழுதி னான்கூத்தன்
    தில்லைச் சிற்றம்பலத்தே சென்று

    33 - (நந்தவனச் சுற்று)
    தில்லை வளரும் தெளிதே னொளிதழைப்ப
    நல்லதிரு நந்தா வனஞ்சமைத்தான் - வில்லத்திருக்
    கோட்டங்கொள் வாழ்வேந்தர் கொற்றக் களியானை
    யீட்டங்கொள் காலிங்க ரேறு

    34 - (அம்மைக் கோயில் பெரியமாட கோபுரம்)
    நூறாயிரமுக மாங்கமைதான் நோன்சி னத்தின்
    மாறாக வெல்களிற்று வாட் கூத்தன் - கூறாளும்
    வல்லிச் சிறுகிடைக்கு வான்வளர மாடஞ்செய்
    தில்லைச் சிற்றம்பலத்தே சென்று

    35 - (மாசிக்கடலாட்டுவிழா மண்டபம், நல்ல சாலை)
    மாசிக்கடலாடி வீற்றீருக்க மண்டபமும்
    பேசற்ற வற்றைப் பெருவழியும் - யீசற்கு
    தென்புலியூர்க் கேயமைத்தான் கூத்தன் திசையனைத்தும்
    மன்புலியா ணைநடக்க வைத்து

    36 - (ஆயிரம் பால்பசுநிரை)
    ஓங்கியபொன் னம்பலத்தார்க் கோரா யிரஞ்சுரவி
    ஆங்களித்தா னேற்றெதிர்ந்தா ராயிழையார் - தங்கா
    தொருக்கி யுடலாவி உயிர்நாட் போக்கி
    இருக்கவென்ற தொண்டைய ரேறு

    37 - (சுடலையமர்ந்தார் கோயில் கற்றளி)
    தொல்லோர்வாழ் தில்லைச் சுடலையமர்ந் தார்கோயில்
    கல்லால் எடுத்தமைத்தான் காசினியிற் - தொல்லை
    மறம்வளர்க்க வெங்கலியை மாற்றி வழுவாம
    லறம்வளர்க்க காலிங்க னாய்ந்து

    38 - (தில்லை நகர்க்கு குடிநீர் ஏரி மதகு)
    தில்லைமூ வாயிரவர் தங்கள் திருவளர
    எல்லையின் பேரேரிக் கெழில்மதகு - கல்லினாற்
    தானமைத்தான் தேர்வேந்தர்க் கெல்லாம் தலம்தவிர
    வானமைத்த தொண்டையார் மன்




     திருவதிகை வீரட்டானத் திருப்பணிகள் 

    திருஅதிகை வீரட்டானர்கோயில் புரமெரித்தான் திருமேனிமுன்
    அமைந்த அலங்கார மண்டபத்து தூண்களில் பொளித்துள்ளவை
    S.I.E. Annual Report, 369 of 1921





    1 - (பொன் தோரணவாயில், பட்டிகை அணிவகைகள்)
    பொன்மகர தோரணமும் பூணனியும் பட்டிகையும்
    தென்னதிகை நாயகர்க்குச் செய்தமைத்தான் - மன்னவர்கள்
    தன்கடைவாய் நில்லாதார் தாள்வரைவாய் நின்றுணங்க
    மின்கடைவேற் காலிங்கர் வேந்து

    2 - (புரமெரி போர் விழா சதுக்கம்)
    மின்னிலங்கு போர்சதுக்க மேகடம்ப மென்னிவற்றைத்
    தென்னதிகை நாயகர்க்குச் சேர்த்தினான் - தென்னவர்தம்
    தோணோக்கும் வென்றி துரந்தே சுரநோக்க
    வாணோக்குங் காலிங்கர் மன்

    3 - (அம்மை, அப்பர் ஆட்டிற்கு, ஆயிர நாழி நெய்)
    வில்லில் வெயிலனைய வீரட்டர் தந்திருநாள்
    நல்லநெயீரைஞ்ஞூற்று நாழியால் - வல்லி
    யுடநாடக் கண்டான்தன்னொன்னலார்க்குக் கண்க
    ளிடனாடச் செல் கூத்த னீண்டு

    4 - (மாளிகை. மண்டபம்)
    மண்டமும் மாளிகையும் வாழதிகை வீரட்டர்க்
    கெண்டிசையு மேத்த வெடுத்தமைத்தான் - விண்டவர்கள்
    நாள்வாங்க சேயிழையார் நாண்வாங்க நற்றடக்கை
    வாள்வாங்குங் காளிங்கர் மன்

    5 - (நூற்றுக்கால் மண்டபம்)
    மன்னொளிசேர் நூற்றுக்கால் மண்டபத்தை மால்வரையால்
    மன்னதிகை நாயகர்க்கு வந்தமைத்தான் - மன்னர்
    இசைகொடாதோட இகல்கொண்டாங் கெட்டுத்
    திசைகொடாக் கூத்தன் தெரிந்து

    6 - (மடைப்பள்ளி)
    மன்னுதிரு வீரட்டார் கோயில் மடைப்பள்ளி
    தன்னைத் தடஞ்சிலையா லேசமைத்தான் - தென்னர்
    குடமலைநா டெறிந்து கொண்டவேற் கூத்தன்
    கடமலையால் யானையான் கண்டு

    7 - (உண்ணாழி, சுற்று புதிப்பித்தமை)
    அதிகை அரனுக் கருவரையாற் செய்தான்
    மதுகை நெடுங்குடைக்கீழ் மன்னர் - பதிகள்
    உரியதிருச் சுற்றும் உடன்கவர்ந்த கூத்தன்
    பெரிய திருச்சுற்றைப் பெயார்த்து

    8 - (அறச்சாலை, காமக்கோட்டம்)
    அருமறைமா தாவின் அறக்காமக் கோட்டம்
    திருவதிகைக் கேயமையச் செய்து - பெருவிபவம்
    கண்டான் எதிர்ந்தா ரவியத்தன் கைவேலைக்
    கொண்டான்நம் தொண்டையார் கோ

    9 - (செம்பொனால் வேய்ந்தமை)
    தென்னதிகை வீரட்டம் செம்பொனால் வேய்ந்திமையோர்
    பொன்னுலகை மீளப் புதுக்கினான் மன்னுணங்கு
    முற்றத்தான் முற்றுநீர் வையம் பொதுக்கடிந்த
    கொற்றத்தான் தொண்டையார் கோ

    10 - (கற்பக வனம் ஒத்த நந்தவனம்)
    வானத் தருவின் வளம்சிறந்த நந்தவனம்
    ஞானத் தொளியதிகைத் நாயகர்க்குத் - தானமைத்தான்
    மாறுபடுத்தாருடலம் வன்பேயட பகிர்ந்துண்ணக்
    கூறுபடுத்தான் கலிங்கர் கோ

    11 - (அதிகை ஊருக்கு வளநீர் ஏரிக்கரை)
    எண்ணில் வயல்விளைக்கும் பேரேரி யீண்டதிகை
    அண்ணல் திருவிளங்க ஆங்கமைத்தான் - மண்முழுதும்
    தன்கோன் குடைநிழற்கீழ் தங்குவித்த வேற்கூத்தன்
    எங்கோன் மணவிலா ரேறு

    12 - (5000 பாக்கு மர வனம்)
    ஐயருப தாயிரமாம் பூகம் அதிகையிலே
    மைவிரவு கண்டார்க்கு வந்தமைத்தான் - வெய்யகலி
    போக்கினான் மண்ணைப் பொதுநீக்கி தங்கோனுக்
    காக்கினான்தொண் டையார்கோ னாங்கு

    13 - (500 பால் பசு)
    அராப்புனையும் நம்மதிகை வீரட்டா னர்க்குக்
    குராற்பசுவைஞ் ஞூறு கொடுத்தான் - பொராப்புரஞ்சாய்
    கண்டருக்கு தான்கொடுத்த காலிங்கன் காசினுக்கு
    தண்டருப்போல் நின்றளிப்பான் தான்

    14 - (புது ஊரும் ஏரியும் )
    வாரிவளம் சுரக்க வானதிகை நாயகருக்குக்
    கேரியு மூரும் இசைந்தமைத்தான் - போரிற்
    கொ¨லாடு வெஞ்சின வேற்கூத்தன் குறுகார்
    மலைநாடுகொண்டபிரான் வந்து

    15 - (மலர் பூக்கும் செல்வழிகள்)
    அம்மான் அதிகையிலே அம்பொற் தடமிரண்டும்
    செம்மா மலரிகச் செய்தமைத்தான் - கைம்மாவின்
    ஏட்டநின்ற வெம்பரிமாக் கண்டருளென் றீண்டரசர்
    காட்டநின்ற வேற்கூத்தன் கண்டு

    16 - (நல்லூர் ஏரிப்பணி)
    அருளா கரநல்லூர் ஆங்கமைந்த ஏரி
    இருளார் களத்ததிகை ஈசன் - அருளாரச்
    சென்றமைத்தான் தென்னாடன் சாலேற்றின் திண்செருக்கை
    அன்றமைத்தான் தொண்டையர்கோன் ஆங்கு

    17 - (வரிகளில்லா தேவதானமாக்கல்)
    போதியி னீழற் புனிதற் கிறையிலிசெய்
    தாதி அதிகையின்வாய் ஆங்கமைத்தான் - மாதர்முலை
    நீடுழக்காண் ஆகத்து நேரலரைத் தன்யானை
    கோடுழக்காண் கூத்தன் குறித்து

    18 - (அம்மைக்கு முத்துமாலைகள்)
    மாசயிலத் தம்மைக்கு வாழதிகை வீரட்டத்
    தீசன் இடமருங்கில் ஏந்திழைக்கு - மாசில்
    முடிமுதலா முற்றணிகள் சாத்தினான் வேளான்
    குடிமுதலான் தொண்டையர் கோன்

    19 - (செம்பால் அழகிய பரிகலங்கள்)
    ஆற்றற் படைவேந்தர் ஆற்றா தழிந்திட்ட
    மாற்றற்ற செம்பொனால் வாழதிகை - ஏற்றுக்
    கொடியார்க்குக் கோலப் பரிகலமாச் செய்தான்
    படியார்கடகும் சீர்கூத்தன் பார்த்து

    20 - (பாவைஏந்து கைவிளக்கு)
    அண்ணல் அதிகையாற்கு கையிரண்டு நல்விளக்கு
    மண்ணின் வறுமைகெட வந்துதித்துக் - கண்ணகன்ற
    ஞாலத் தறஞ்செய் நரலோக வீரன்பொற்
    சீலத்தினா லமைத்தான் சென்று

    21 - (வீரட்ட திருநடன அரங்கு)
    நீடும் அதிகையோன் நித்தன் பெருங்கூத்தை
    ஆடும் அரங்கத் தமைத்தான் அன்றினார் - நாடு
    பரியெழுப்புந் தூளிபகல் மறைப்பச் சென்றாங்
    கெரியெழுப்புந் தொண்டையா ரேறு

    22 - (திருநாவுக்கரசு நாயனார்க்கு தனிக்கோயில்)
    ஈசன் அதிகையில்வா கீச னெழுந்தருள
    மாசில் பெருங்கோயில் வந்தமைத்தான் - பூசல்
    விளைவித்த வேணாடும் வெற்பனைத்தும் செந்தீ
    வளைவித்தான் தொண்டையார் மன்

    23 - (வேள்வி மண்டபம்)
    நல்யாக மண்டபத்தைச் செய்தான் நரபதியர்
    பல்யானையோ டுணங்கப் பாவலர்க ளெல்லாம்
    புகுங்குடையான் தொண்டையர் கோன்பொன் மழையோடொக்கத்
    தகுங்கெடையான் தானதிகை சார்ந்து

    24 - (அம்மை 32 அறங்கள் செய்ய செலவு)
    அண்ணல் அதிகையான் ஆகம் பிரியாத
    பெண்ணினலாள் எண்ணான்கு பேரறமும் - எண்ணியவை
    நாணாள் செலவமைத்தான் நண்ணா வயவேந்தர்
    வாளாண் கவர்கூத்தன் வந்து

    25 - (உயர்ந்த கோபும்)
    ஆடல் அமர்ந்தபிரான் ஆங்கதிகை வீரட்டம்
    நீடுவதோர் கோயில் நினைந்தமைத்தான் - கோடிக்
    குறித்தாருடல் பருந்து கூட்டுண்ணக் காட்டி
    மறித்தான்நம் தொண்டையார் மன்



குலோத்துங்க சோழன் காலத்தில் காலிங்கராயர் கல்வெட்டுகள்:










 ஸ்ரீரங்கம் கல்வெட்டுகளில்  காலிங்கராயர் :




 அரையன் கருடவாகனன் என்ற காலிங்கராயர் :





  

பனையவரம்  கல்வெட்டு  அரையன்  பொன்னம்பல கூத்தன் தொண்டைமானார்: 







   
பாண்டிய நாட்டில்  நரலோக வீரன் :


















































 முதலாம் ஜடாவர்மன் குலசேகரன் மைத்துனன் - அழகம்பெருமாள் காலிங்கராயர்:

























































 அரும்பாக்கிழான்  ஸ்ரீ மதுராந்தகன் பொன்னம்பலக்கூத்தனான  காலிங்க ராஜன்:






 திருவதிகை திருவீரட்டானமுடைய நாயனார் கோவிலில்  கலிங்கராயன் சன்னதி அமைத்த கப்பலூருடையான்  காலிங்க ராயர்:



 விக்கிரம சோழன் காலத்தில்  கிடங்கல் ராஜேந்திர சோழ நல்லூர் கோவிலுக்கு  கப்பலூருடையான் ஆதித்தன் நள்ளாறு தேவனான ஆதித்தன் அரையதேவன் வைத்த விளக்கு :


 


விக்கிரம சோழன் காலத்தில் கொல்லம்  அழித்த காலிங்கராயர்  
பாண்டியநாட்டில்  இருந்த செய்தியும்  அதன் பின்னர் அவர் மகன் பாண்டியனுக்கு கீழ இருந்தவர் பின்னர் திருக்கழுக்குன்றம்  கோவிலில்  காலிங்கராயர் சன்னதி ஏற்படுத்திய செய்தி.










 திருப்புனவாசல் கோவில் கல்வெட்டுகள் : 



















  


 சிதமபரம் கோவிலில் தானம் செய்த  ஆனந்த தாண்டவ  பெருமாள் தொண்டைமானார் பெருமான்:















































































நரலோக வீரன் -சபாநர்தகா -அம்பலவாணன் -நடுவிற்கூத்தன் -மணவிற்கூத்தன்-மானவரதா- காலிங்கராயர்  என்று  சிறப்பு பெயர்களை  பெற்றவரின் முழு வரலாறையும்  தொகுக்க வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உள்ளது. 


விரைவில்  அவருடைய  சமாதி  விவரம்  படங்களுடன்  வெளிவரும்.