Saturday, 27 February 2016

இலங்கையில் சோழகங்கனும் -கருணாகர தொண்டைமானும். cholagangan and karunagara tondaiman in srilanka

சோழகங்கன் என்ற மாகோன் --  குளகோட்டன் என்ற கருணாகரதொண்டைமான்.


இலங்கையில் இருந்த கடைசி சோழ ஆட்சியாளர் வீர ராஜேந்திர சோழன் மகனான  ஆதிராஜேந்திரன். வீர ராஜேந்திரன் இறந்தவுடன் அரசனாக  பதவி ஏற்க்க சென்றவன்  குலோத்துங்கனால் கொல்லபட்டான்.அதன் பின்னர் மேலை சாளுக்கியருடன் சண்டையில் ஈடுபட்ட குலோத்துங்கன் இலங்கை பகுதியை கண்டு கொள்ளவில்லை. அதனால் அங்கு நிலைநிறுத்தப் பட்ட படை தலைவர்கள் தன்னிச்சையாக செயல் படஆரம்பித்தனர்.வேலைக்கார படையை சேர்ந்தவர்கள் பாதுகாப்பில் புத்தரின் பல்லும் -அட்சயபாத்திரமும் இருந்துள்ளது.  பின் நாளில்  குலோத்துங்கன் தன் மகளை ஒரு இலங்கை அரசனுக்கு மணம் செய்து உள்ளான்.








குலோத்துங்க சோழனின் மகன்களான  விக்கிரம சோழனுக்கும் ,பராந்தக சோழன் என்று அழைக்கப்பட்ட  சோழகங்கனுக்கும்  வாரிசு உரிமை போட்டி இருந்தது. முதலில்  அரசு பதவியை வேங்கியில் பெற்ற சோழகங்கன் பின்னர் திரும்பவும் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு அழைக்க பட்டார்.விக்கிரம சோழன் வேங்கியின்  அரச பதவியில் இருந்த காலத்தில் நடந்த  கலிங்கத்து  போரில் கருணாகர தொண்டைமான் தலைமையில் வெற்றி பெற்று "கலிங்கத்துபரணி " தொண்டைமானை புகழ்ந்து  பாடப்பட்டது. 
                                      
                               பராந்தக சோழன் என்ற சோழகங்கனுக்கும் மீண்டும் வேங்கியின் அரசபதவி  கொடுத்த போது -விக்கிரமசோழனுக்கும் பராந்தகனுக்கும் இருந்த   பகைக்கு  ஹோய்சாளர்கள்  விக்கிரம சோழனுக்கு உதவி செய்ததால்  ஏற்பட்ட குழப்பம காரணமாக சோழகங்கனை மீண்டும் கங்கைகொண்ட சோழபுரம் திரும்பி அழைக்க நேரிட்டது.அதன் பின்னர் இலங்கைக்கு பாண்டியனை மணந்த தன் தங்கையிடம்  அனுப்பி வைக்க பட்டு இருக்கிறார்.அவனுக்கு பாதுகாப்பாக கருணாகர தொண்டைமானும் அனுப்பபட்டு  உள்ளார்.


history of  andra cholas  








குலோத்துங்கனின் மகனான சோழ கங்கன்:





இலங்கையின் இந்திரபாலா கூறும் கருத்து :

                       மட்டகளப்பு மானியத்தில் மட்டக்களப்பு  வன்னிய அரசர்கள் மாகோனால்  நிறுவப்பட்டவர்கள் என்றும் கலிங்க அரசனாக காட்ட படும் அரசன் காளிகோட்டம்  என்ற இடத்தில இருந்து படையாட்சிகளை கொண்டு வந்து வன்னிபம் அமைத்து கொடுத்தார் என்று கூறப்பட்டு உள்ளது.மேலும் அனைத்து சாதிகளுக்கும் அவர்களுக்கான வேலைகளை பிரித்து கொடுத்தார் என்றும் கோவில் மற்றும் குளங்களை  புனர்நிர்மாணம் செய்தார் என்று கூறப்பட்டுள்ளது.  குளகோட்டன் என்பவர் பற்றி கூறப்பட்டுள்ளது.




         குளகோட்டன்  என்பவரை குளம் வெட்டுபவர் என்றும் அவர் கோவில் மற்றும் குளம்  கட்டி சீர் செய்யும் வேலையும் நீர் பாசனத்தை சரி செய்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.குளகோட்டன் சைவ ,வைணவ கோவில் களோடு பெளத்த மதசின்னங்களையும் சரி செய்தார்.




காலியூர் கோட்டமும் படையாட்சிகளும் :
                              
                                                                           காலியூர் கோட்டம் எனபது உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த  வட தமிழ் நாட்டு பகுதியான   பழைய தொண்டை மண்டல பகுதி. இலங்கை குறிப்புக்கள் கூறும் செய்தி கலிங்க மாகோன்  காளி கோட்டத்து படையாட்சிகளை கொண்டு வந்து இலங்கையில் போர் செய்து கைபற்றினார். காளி கோட்டம் என்ற பகுதியை கல்கத்தாவில் உள்ள காளி காட் (காட் -என்றால் கரை ) பகுதியில் இருந்த படையாட்சி  என்று கூறிஉள்ளனர். காளிகோவில் ஹூக்ளி  ஆற்றங்கரையில் உள்ளது.அந்த பகுதியை காளிகாட் என்று கூறுவர்.  இதை தான் ஒரிசாவில் இருந்து  வந்ததா கதை கட்டபட்ட  மாகோன் நேரா கல்கத்தா போய் மறக்காம படையாட்சியை கூப்பிட்டு வந்தார் என்று சொல்லி முடிச்சி இருக்காங்க.

                                   மாகோன் காலத்தில் சோழதேசத்தை கலிங்கம் வரை ஆட்சி செய்த குலோத்துங்கன்  இதை பற்றி கண்டுகொள்ளவில்லை ஏன்?? இங்க தான் ஒரு பெரிய வரலாறு மறைக்க பட்டு உள்ளது. விக்கிரம சோழனிடம் இருந்து தன் மகனான சோழகங்கன் என்ற பராந்தகனை காப்பாற்ற கருணாகர தொண்டைமானுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கின்றான்.அவர்களே இலங்கையில் மாகோன் மற்றும்  குளககோட்டன் என்று அறியப்படுகின்றனர்.






                  



இலங்கை வரலாற்றில் கருணாகர தொண்டைமான் : 
                                                                              
                       சோழகங்கனுக்கு பாதுகாப்பாக  அனுப்ப பட்ட கருணாகர தொண்டைமான் செய்த கோவில்,குளம் சீரமைப்பை விட முக்கியமாக   வணிககுழுக்களை பாதுகாத்து அதனை ஒழுங்கு படுத்தும்
வேலையை முதன்மையான  பணியாக செய்துள்ளார்.

               அவரால் ஏற்படுத்த பட்ட குழுவுக்கு கருணாகர தென்னிலங்கை வளஞ்சியர் குழு என்று பெயர்.குலோத்துங்கன் காலத்தில் இலங்கையில் சீனர்கள் ஆதிக்கம் அதிகம் தலைப்பட்ட போது அவர்களை அடக்க கருணாகர தொண்டைமானை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.



    சோழ நாட்டின் கோடியகரைக்கும் நாகப்பட்டினத்துக்கும் மிக அருகில் உள்ள இலங்கை பகுதியின் கடல் பகுதியை சோழன் கட்டுப்பாடில் வைத்து வணிகத்தை முறைப்படுத்தியவர்  கருணாகர தொண்டைமானே. 




இலங்கையின் தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் இடங்கள் எல்லாம் இந்த கடல் பகுதிகளை ஒட்டியே இருக்கும் தகவலும் சோழனின் ஆதிக்கத்தை உறுதி செய்கிறது.பிறகால பாண்டியர்கள் ஆட்சி வரை  தொண்டி,பாசி,இராமேஸ்வரம் வரை சோழர் கட்டுபாட்டில் இருந்த வரலாறு சோழனின் கடல் வியாபாரம் மற்றும்இந்த  கடல்பகுதியை   முழுவதையும் தன் கட்டுபாட்டில் வைத்து இருந்ததையும் உறுதி செய்கிறது.    



                            

இலங்கையில் கலிங்கர் என்று கூறப்படுபவரும் வன்னியரே.



கருணாகர தொண்டைமான் முதல் கலிங்க போரருக்கு போய் வந்த பின் பாடப்பட கலிங்கத்து பரணியில் கருணாகர தொண்டைமானை பற்றி புகழ்ந்து பாடப்பட்டது . இரண்டாம் கலிங்க போரில் விக்கிரம சோழனுக்கு உதவிய அரும்பையர் கோன் என்று அழைக்கப்பட்ட நரலோகவீரனை புகழ்ந்து அரும்பை தொள்ளாயிரம் ஒட்டக்கூத்தரால்  பாடப்பட்டது .இந்த நரலோகவீரனுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பட்டம் காலிங்கராயர். இவருடன்  படையடுப்பில் கலந்து கொண்ட படையாட்சி குடிக்கு வழங்கப்பட்ட பட்டம் காலிங்க ராயர். இன்றும் தொண்டைமான் -காலிங்கராயர் -பல்லவராயர் என்ற பட்டம் கொண்ட படையாட்சி குடிகள் இருக்கும் வடக்கு தஞ்சை டெல்டா மாவட்டங்களே படையாட்சிகளின்  வீரத்தை இன்னும் உலகுக்கு எடுத்து கூறிக்கொண்டு  உள்ளது.
                    

             இந்த படையாட்சி குடிகளே இலங்கைக்கு மாகோன் என்ற சோழகங்கன்  மற்றும் கருணாகர தொண்டைமானுடன் இலங்கை சென்றவர்கள். இலங்கையில் இவர்கள் இருவரும் செய்த எல்லாம் இலங்கை வரலாற்று ஆசிரியர்கள் குழப்பி வைத்து இவர்களை மறைத்து வைத்து உள்ளனர்.மாகோன் வன்னிமை வகுத்து கொடுத்து இந்த வன்னியர்களுக்கு தான்.


இலங்கை வரலாற்றில் மாகோன் மற்றும் குளகோட்டன் பற்றிய குழப்பம்.












இலங்கையில் கருணாகர தொண்டைமானின் வரலாறு 



Karunakara Tondaiman



தொண்டைமானாறு செல்வச் சந்நிதி:

        இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பிரதேசத்தில் வல்வெட்டித்துறை நகரை அடுத்து அமைந்துள்ள தொண்டைமானாறு என்னும் கிராமத்தில் இம்முருகன்கோவில் அமைந்துள்ளது. 
தொண்டைமானாறு என்ற பெயர் முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதியாகிய கருணாகரத் தொண்டைமானோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.
                                 கருணாகரன் இலங்கைக்குப் படையெடுத்து வந்தபொழுது, யாழ்ப்பாணத்தில் கரணவாய், வெள்ளைப் பரவை என்னுமிடங்களில் உப்பு அளவின்றி விளைந்து அழிந்து போவதைக் கண்டு அவ்வுப்பைச் சோழ தேசத்துக்கு அனுப்புவதற்கு வேண்டிய பிரயத்தனங்களைச் செய்தான்.
          அவனுடைய உப்பேற்றும் மரக்கலங்கள், காற்றின் உக்கிரத்துக்கு இலக்காகாது ஒதுங்கி நிற்கக்கூடிய ஒரு துறையாக தொண்டைமானாற்றை வெட்டுவித்து இப்போது உரும்பிராய்க் குறிச்சியில் இருக்கும் கருணாகரப் பிள்ளையார் கோயிலையும் கட்டுவித்தான்”. (யாழ்ப்பாணச் சரித்திரம்)

            இன்று வல்லைவெளி என்று வழங்கும் வெளியூடாக ஓடிய வல்லிநதியின் தொடுவாயை கருணாகரத் தொண்டைமான் வெட்டி ஆழப்படுத்தியதாலேயே தொண்டைமான் ஆறு என்ற பெயருடன் உப்பு நீருடையதாக இன்று விளங்கும் நீர்நிலை உருவானது என்று கூறப்படுகிறது.ஆறு போன்று நீண்டு கிடக்கும் அந்நீர்நிலையின் அருகே விளங்கும் இக்கிராமமும் தொண்டைமானாறு என்ற பெயரைப் பெற்றது. இக்கிராமத்திலேயே பாரம்பரியச் சிறப்புக்கள் மிக்கதான செல்வச் சந்நிதி ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் தலவிருட்சமாக பழமை வாய்ந்த பூவரச மரம் விளங்குகிறது. இவ்வாலயத்துக்கு சின்னக் கதிர்காமம், செல்லக் கதிர்காமம், கல்லோடை என்ற பெயர்களும் உண்டு.















தொண்டைமானாற்றின் காணிகளின் பெயர்களாக தற்போதும் உள்ள பெயர்கள் வன்னியர்களின் பெயரில் இருந்துள்ளதாகவும் வன்னியர் விருது பெயர் என்றே குறிப்பிட பட்டுஉள்ளது.



அத்திப்படை ஆண்டவன் கொல்லை
நாயினிச்சிய்யார் கொல்லை
சேதுபதியர் கண்டு
இராக்காவளவு 
பணிக்க வளவு 










                     திருமணத்தில் மஞ்சள்குதிரையில் அழகான மாப்பிள்ளை வந்து இறங்குவார் என்ற பாட்டு திருமணத்திற்கு பாடப்படுவதாகவும் அந்த வழக்கம் இலங்கையில் இல்லை என்றாலும் தமிழகத்தில் இருந்து வந்த பழக்கத்தை பாட்டாக பாடுகின்றனர்





வட்டுக்கோட்டையூர் – வன்னியன்தோட்டம்
அருள்மிகு சின்னக் கதிர்காமம்
தலவரலாறு

முருகன் திருப்பதிகளுள் சின்னகதிர்காமம்

கந்தவேள் கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் அவன் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் மற்றும் பல்வேறு பழம் பதிகளிலும் அமர்ந்தருளி அடியார்களுக்கு அருளார் அமுதை வாரிவழங்கி வருகின்றான். ஈழத்திற் பல்வேறு முருகன் திருத்தலங்கள் உளவேனும் பழமை சிறப்பினாலும் திருவருட் பொலிவினாலும் கதிர்காமக்கந்தன், மாவைக்கந்தன், நல்லைக்கந்தன், சந்நிதிமுருகன் ஆலயங்கள் சிறந்து விளங்குகின்றன. அவ் வகையில்  வட்டுக்கோட்டை மேற்கில் வன்னியன் தோட்டத்தில் அமைத்திருக்கும் சின்னக்கதிர்காமமும் சிறப்புப் பெற்று விளங்குகின்றது.


                                                     

கருணாகர தொண்டைமானால் கட்டபட்டதாக கூறப்படும் கருணாகர பிள்ளையார் கோவில்.
கருணாகர பிள்ளையார் கோவிலில் இருக்கும் வணிககுழுக்களின் கல்வெட்டு. 






உடப்பூர் ஸ்ரீ திரெளபதி அம்மன் கோவில்:












தமிழக வடமாவட்டங்களில் உள்ள வன்னியர்களை போல் உடப்பூர மக்களும் தாங்கள் பாண்டவர் வம்சம் என்று பெருமையோடு கூறுவர்.




உடுப்பிட்டியூர் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் என்று  இணையத்தில் இருந்த தகவல் : 

 யாழ்பாணக் குடாநாட்டில் அமைந்திருக்கும் வடமராட்சிப் பகுதியிலே கிறீன்வீச்சில் இருந்து 5மணி 30நிமிடம் கிழக்காகவும் அட்சரேகை வடக்கு 09பாகை 48 கலை தீர்க்க ரேகை கிழக்கு 80பாகை 10 கலை குறிக்கும் கேந்திரப்பகுதியில் உடுப்பிட்டியூர் அமைந்துள்ளது. எமது ஊரில் ஐவகைப் பண்புகளுடைய நில அமைப்புக்கள் கொண்டிருப்பதுடன் உயர்பீடமான பல பகுதிகளும் அமையப்பெற்றுள்ளன. இப்பகுதிகளில் பருவகால மழை ஆவணி மாதம் தொடக்கம் மார்கழி மாதம் வரை பெய்யும் கோடைகால மழை பங்குனி சித்திரை மாதங்களிலும் பெய்வதால் இம்மழை நீரை நம்பியும் கிணறுகள் மூலமும் தமது வாழ்வாதாரங்களை அமைத்துக்கொள்ளக் கூடிய நிலையிருப்பதாலும் பருவகால மழை நீரைச் சேமிக்க வேண்டிய தேவையும் நிலத்தடி நீரைப் பேணவேண்டிய அவசியமும் இருந்ததால் நமது மூதாதையர்கள் ஒரு சிறந்த வழிமுறையைக் கண்டுபிடித்து வெற்றியும் கண்டார்கள்.
மேடான நிலங்களுக்கிடையே வெட்டு வாய்க்கால்களையும், வெள்ளவாய்க்கால்களையும் அமைத்தும் மதகுகள் மூலமும் குளங்களுடனும், குட்டைகளுடனும் இணைத்தும் சிறு ஏரிகளில் தேங்கும் படியாகவுமுள்ள பொறிமுறையைக் கையாண்டு மழைக்காலங்களில் நீரைச் சேமித்தும் எஞ்சிய நீரை கடலுக்குச் செல்லும்படியாகச் செய்தார்கள்.
                      
                  வடக்காக செல்தும் வெள்ளம் இலந்தைக்காடு, பொலிகண்டி, ஊறணிக் கடல்வரையும் சென்றடையும். தெற்காக இலந்தைக்காடு, இலக்கணாவத்தை, கும்பவாளி, வல்லவாளி, துவாளியூடாக கட்டுக்குளம், துவாளிக்குளம் நிரம்பி கிராய்க்குளம், நெசவாலைக்குப் பக்கத்தில் உள்ள மதகுகளினூடாகம் தெற்காக ஊரி மதகுகள் ஊடாகவும் சென்ற நீர் வல்லை வெளிகளில் நிரம்பியபின் தொண்டமானாற்றில் கலக்கும்.
                         
                மேற்காக இலந்தைக்காடு, வல்வெட்டி, வன்னிச்சிஅம்மன் கோவில் வழியாக வந்த வெள்ளம் கம்பர்மலைக்கும், உடுப்பிட்டிக்கும் இடையே சென்று விறாச்சிக்குளத்தையடைந்து, நிரம்பியதும் தலைவக்குளம், மிலாவில்குளம் சென்று தெற்காகவுள்ள தில்லையடிக்குளம், ஆனைவிழுந்தான் குளம் சென்றடைந்து மதகுகள் வழியாக முழுதைவெட்டிக்குளம், மற்றும் கொட்டளி வெளியில் நிரம்பியபின் தொண்டமானாற்றை வந்தடையும்.
                                            இமையாணன் பகுதியிலிருந்து செல்லும் வாய்கால் வழியாக மூத்தவிநாயகர் ஆலயத்திற்குப்பக்கத்தில் இரண்டாகப்பிரிந்து கல்லுவக்குளத்திற்கும் பின்னர் முள்ளிக்கு கிழக்காக உள்ள வாய்க்கால் வழியாக தொண்டமானாற்றுக் கடலைச் சென்றடையும். கெருடாவிலிருந்து சின்னமலைக்கும், கம்பர்மலையில் இருந்து மயிலியதனையூடகவும் செல்லும் வெள்ளம் வல்வெட்டித்துறைக் கடலினையடையும்.சந்திரகுளத்தை வந்தடையும் வெள்ளம் நிரம்பியதும் தெற்காக கிராய்க்குளத்திற்கும், மேற்காக தில்லையடிக்குளத்திற்கும் சென்றடையும்.எமது ஊரில் 25இற்கு மேற்பட்ட சிறு குளங்களும், குட்டைகளும் இருந்திருக்கின்றன. (சந்திர குளம், ஆனைவிழுந்தான் குளம், கிராய்க் குளம், தில்லையடிக்குளம், விராச்சிக் குளம், .........)


                               நமது முன்னோர்கள் தாம் வாழ்ந்து வந்த இடங்களின் நிலப்பண்புகள் மற்றும் இயற்கையான அபை;புக்களை நன்கறிந்தும் வரலாற்று நிகழ்வுகளையும் தொடர்புபடுத்தி தோட்டங்கள், வயல்கள், மற்றும் காணிகளுக்கும் குளங்கள், கிணறுகள், பிரதான சந்திகள் வீதிகள் என்பனவுக்கெல்லாம் மிகப்பொருத்தமான பெயரைச் சூட்டியுள்ளார்கள்.
உதாரணமாக: உடுப்பிட்டி வாசிகசாலையடி, வீரபத்திரர் கோவிலடி, வல்லவாளி, பெரும்பற்று, கும்பவாளி, துவாளி, கரம்பவாளி, குளவாளி, முள்ளி, ஊரி, நிரை, கல்லுப்பிடார் சந்தி, யாமங்கலை, மாதிவில், பள்ள காடு, வல்லை, எட்டுத்திட்டி, கப்புதூ, கல்லுவம், முள்ளி, இமையாணன், சமரபாகு, கொம்பர்மூலை(கம்பாமூலை - கம்பர்மலை), கொம்பந்தறை(கொம்பன் தறை), மல்லந்தறை, ஆதியாமலை, கோம்பு, பண்டகை, பணிக்கர்வளவு, ஆனைப்பந்தி, பொக்கணை, மருதடி, வாகையடி, தியவில் நாவலடி, 15ம் கட்டை, 7ம் கட்டை(சுமைதாங்கியடி), ......





கரணவாய் (சோழிங்கன்-சோழங்கன்) ,தொண்டைமானாறு(கி.பி.1110 இல் குலோத்துங்க சோழன் தளபதி கருணாகர தொண்டைமான் தொண்டைமானாற்றுத் துறைமுகத்தை அமைத்து தானாக விளையும் உப்பை சோழநாட்டுக்கு ஏற்றுவித்தான்), சோழநாட்டு மக்கள் பொலிகண்டி(கண்டி), கப்பு-தூ (துவ்வூர்) பாண்டியநாட்டு மக்கள் (இராமநாதபுர மாவட்டத்தின் கோடிக்கரை, தனுஸ்கோடி, வல்லை கிராமங்களிலிருந்து) வல்லைவெளிப் பகுதியிலும், சமரவாகுத்தேவன் குறிச்சியிலும், (வல்வெட்டி)வல்லித்தேவன் குறிச்சியிலும், செயக்கொடிபாகுதேவன் குறிச்சியிலும், குறுளிபாகுத்தேவன் குறிச்சியிலும், சங்கிலிமன்னனின் தளபதி (இமையாணன்) இமையாணன் குறிச்சியிலும் குடியேறி இங்கு வாழ்ந்த வரலாற்றுப் பதிவுகளை அறியமுடிகிறது.

thanks to this blog for the information.
http://uduppiddy.ca/clients/UduppiddyHistory.aspx



கம்பரும் குலோத்துங்கனும் :

                                                                           கம்பர் தமிழகத்தை விட்டு வெளியேறிய செய்தி உண்மை.அதற்கு கூறப்படும் கதைகள் தான் வேறு வேறு. முதலாம் குலோத்துங்கன் அவையில் இருந்த ஒட்டக்கூத்தரோடு  கருத்து வேறுபாடு ஒரு கதை,மூன்றாம் குலோத்துங்கன் மகளை காதலித்த கம்பர் மகன் என்று கூறப்படும்  "அம்பிகாபதி -அமராபதி" கதை. இதில் கம்பர் முதலாம் குலோதுங்கன் காலத்தவர் எனபதால் கருணாகர தொண்டைமானின் சமகாலத்தை சேர்ந்தவர்.அதனால் கருணாகர தொண்டைமானால் ஆதரிக்க பட்டு கருணாகர தொண்டைமான் மீது " சிலை எழுபது" பாடி சிறப்பித்து அதில் வன்னியரின் பெருமையையும் உலகம் அறிய செய்தவர்.

                   கம்பர் முதலாம் குலோத்துங்கனுடனும் -ஒட்டக்கூத்தருடனும்  ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் தன்னை ஆதரித்த கருணாகர தொண்டைமானிடம் இலங்கைக்கு சென்று   சேர்ந்தார்.
                   

                                         கம்பர் எழுதிய சிலைஎழுபது கூட  இலங்கையில் எழுதபட்டு இருக்கலாம்.கம்பர் பற்றிய குறிப்புகளில் கம்பர் முதலாம் குலோத்துங்கன் காலத்தை சேர்ந்தவர் என்பது நிரூபிக்க பட்ட உண்மை.இவரை ஆதரித்த சடையப்ப வள்ளல் வேறு கம்ப நாட்டார் என்று மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்தவரை ஆதரித்த புதுவை சடையப்ப வள்ளல் வேறு.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெண்ணெய்நல்லூர் சடையன் சரராமன் வேறு. வரலாற்றில் மூன்று சடையப்பரும் ஒரு கம்பர் ,ஒரு கம்ப நாட்டார் வேறு வேறு காலங்களில் இருந்தது நிரூபிக்க பட்ட உண்மை.கம்பர் கடைசி காலம் இலங்கையில் கருணாகர தொண்டைமானிடம் இருந்தது இப்போது நிரூபணம் ஆகிறது.அதன் பின் அவர் தொண்டைமானை தொடந்து தமிழகம் வந்து காரைக்குடி  பகுதி நாட்டரசன் கோட்டையில்  கடைசியில் உயிர் நீங்கி சமாதி ஆனதும் தற்போது உள்ள அவர் சமாதி உணர்த்துகிறது.இந்த உண்மையால்  இன்னும் ஒரு பெரிய கட்டுகதை உடைக்க பட்டு விட்டது. கம்பர் கொங்குநாடு சென்றார் ஏர் எழுபது பாடினார் கூட்டம் பிரித்து கொடுத்தார் என்பதும் கதை என்பதை  கம்பரின் இலங்கை வாழ்கை நிரூபிக்கிறது.


கம்பர் வாழ்ந்த பகுதியை கம்பர் மலை என்று இலங்கையில் அழைக்கின்றனர்.


கம்பர்மலை என்ற பகுதியில் உள்ள வன்னிச்சி ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயம்.




கம்பர்மலை கோவில் திருவிழா:


தொண்டைமானாறு கோவில்கள்.










மூன்றாம் குலோத்துங்கன் காலத்து கல்வெட்டு கூறும் தகவல்:

                                     இலங்கையில் இருக்கும் திருநீற்றுச்சோழபுரத்தில் இருக்கும் சூசகர் கருணாகர வீரர்கள்  திருகண்ணபுரத்தில் இருக்கும் கருணாகர வீரர் மடத்துக்கு செய்த தானம் பற்றி கூறப்பட்டு உள்ளது.இது கருணாகர தொண்டைமான் இலங்கைக்கு சென்று திரும்பிய செய்தியை  அவர் பெயரால் இயங்கிய வணிககுழுவான  "கருணாகர தென்னிலங்கை  வளஞ்சியர்"  உறுதி செய்து உள்ளது. 



கம்பர் கடைசி காலத்தில் நாட்டரசன் கோட்டையில் வாழ்ந்து அங்கேயே உயிர் துறந்து சமாதியாக இருக்கும் செய்தியை பார்க்கும் போது கருணாகர தொண்டைமானுக்கு பின்னர் கம்பர் தமிழகம் வந்துள்ளார் எனபதும் விளங்கும். 

             சோழ மாகோன் என்ற சோழகங்கனுக்கும் சிதம்பரத்தில் இராஜாக்கள் தம்பிரான் மாளிகை என்று அமைத்து கொடுத்து   இருக்ககூடும்.கல்வெட்டுகளில்  குலோத்துங்கன் மாளிகை, விக்ரமசோழன் மாளிகை,ராஜாக்கள் தம்பிரான் மாளிகை  என்ற மூன்றும் வேறு வேறு வீதிகளில் இருந்ததை  பற்றி கூறப்பட்டு உள்ளது.



இளைய பல்லவன் கருணாகர தொண்டைமான் : 


Karunakara Tondaiman


கம்பர் எழுதிய சிலை எழுபது வன்னியரின் சிறப்பையும் வன்னியரின் படைவலிமையும் சிறப்பித்து கூறுகிறது.

Karunakara Tondaiman


Karunakara Tondaiman

இலங்கை வன்னியர்களும் -வன்னிமைகளும்
  
இலங்கையில் வன்னியர்  யார் என்பதை நிரூபிக்க கருணாகர தொண்டைமானும் -அவரை புகழ்ந்து பாடிய கம்பரின் சிலை எழுபதுவும் ஆதரமாக இருக்கும் போது இன்னமும் சிலர் ஈழம் பற்றியும் அதில் டச்சுக்காரர்கள் மூலம் வெள்ளாளர்கள் செய்த குழப்பத்தை கொண்டும் இலங்கை வரலாறை எழுதிய வெள்ளாளர்கள் புத்தகங்களை கொண்டு வன்னியர் வரலாறை இலங்கையில் தேடி கொண்டு இருக்கிறர்கள். வன்னியரால் அமைக்க பட்ட வன்னிமைகளுக்கு கருணாகர தொண்டைமான் வன்னியர் அல்லாதவரை நியமித்ததாக கூறமுடியாமல் மாகோன் வகுத்த வன்னிமை என்று கூறி வன்னியர் குடி என்ற பெயரே இல்லாமல் செய்த பெருமை வெள்ளாளரையே சேரும். இந்த வெள்ளாளருக்கு  முதலி பட்டம் கொடுத்தும் வன்னியரே. 

                 கடைசியில் தமிழகத்திலும் வன்னியர் என்ற பெயரை பயன்படுத்தபடுவதை தடைசெய்ததும் , பிரிட்டிஷ்காரர்கள் அந்த பெயரை கேட்டதும் அஞ்சிய காரணம் பாயும் புலி பண்டாரக வன்னியனின் வீரத்தை கண்டு பயந்ததன் விளைவே.இலங்கையில் மறைக்க பட்ட வன்னியர் என்ற பெயரை வெளிக்கொண்டுவரவும்  போராடவும்  எவரும் அங்கு இல்லை. அதனால் வன்னியர்கள் இப்போது வெள்ளாள குடியில் கலந்து படையாட்சிகுடி,மழவராசன்குடி,படையாண்டவர்குடி,
 கலிங்கர்குடி என்ற குடிகளாய் இப்போது உள்ளனர். 







4 comments:

  1. இலங்கையில் உடப்பு திரௌபதியம்மன் கோயில் மறவர்களுடைய கோயில். பொதுவான வன்னியர்னு ஆராய்ச்சி பண்ணினா இப்படித்தான் கதை எழுத முடியும். காலியூர் கோட்டம்னு போட்ட கல்வெட்டுக்கு விளக்கம் என்ன? சொல்லமுடியுமா? முடியாதுன்னா நான் சொல்கிறேன்.

    ReplyDelete
  2. இலங்கையில் உடப்பு திரௌபதியம்மன் கோயில் மறவர்களுடைய கோயில். பொதுவான வன்னியர்னு ஆராய்ச்சி பண்ணினா இப்படித்தான் கதை எழுத முடியும். காலியூர் கோட்டம்னு போட்ட கல்வெட்டுக்கு விளக்கம் என்ன? சொல்லமுடியுமா? முடியாதுன்னா நான் சொல்கிறேன்.

    ReplyDelete
  3. காலியூர் கோட்டம் எங்க இருக்கு என்று தெரியாம கம்பு சுத்த வேண்டாம்.

    ReplyDelete
  4. காலியூர் கோட்டம் எங்க இருக்கு என்று தெரியாம கம்பு சுத்த வேண்டாம்.

    ReplyDelete

Note: only a member of this blog may post a comment.