Saturday, 8 August 2020

வன்னியர் கல்விக்கு வீர சைவ மடம் அமைத்த மழவராயரும் -பெண்ணாகடம் கடந்தையாரும்

வன்னியர் கல்விக்கு   வீர சைவ மடம் அமைத்த மழவராயரும் - பெண்ணாகடம் கடந்தையாரும்.



தென்னிந்திய கோவில் கல்வெட்டுகள்  PART I   செப்பேடு  வருடம்  1511 A D




சைவ சமய ஆசிரியர்  அருணாசல விருபாட்சி தேவரிடம் இருந்த செப்பேடு  படி எடுக்கப் பட்டு தஞ்சை சரபோசி மகாராஜாவிடம் கொடுக்கப் பட்ட செப்பேடு சாசனம் கூறும் செய்திகள்.


சக ஆண்டு 1433 ம் வருடம் விபவம் தை 13 ம் நாள் தானம் கொடுக்கப்பட்ட  நிலம் மற்றும் வேறு சலுகைகளை  செய்து கொடுத்த குன்னத்தூர்நாடு நாகைய மழவராய நயினார் அவர்களின் மகன் கட்டியப்ப நயினார்  அவர்களும் பெண்ணாகடம் பெரிய நாயக நயினார் மகன் பிரளயம் காத்த கடந்தையார்  கோத்திரத்தில் வந்த  பொன்னாலந்த கடந்தையாரும் அவர்கள் முன்னோர்கள் திசைமுக தேவர் என்ற சைவ சமய ஆசிரியருக்கு செய்து கொடுத்த சொத்து மற்றும் மரியாதைகளை பற்றியும் அவருடைய மடத்துக்கு உரிய எல்லை பற்றிய குறிப்பையும் மேலும்  கும்பகோணம் ,பேரளம்,திருவெண்காடு தாராசுரம்,சிதம்பரம்  போன்ற இடங்களில் இருந்த மடங்களை பற்றிய குறிப்பையும் அந்த செப்படு குறிப்பிடுகிறது.

 விஜயநகர அச்சுதராயர் காலத்தில் கும்பகோண மடத்திற்க்கும்  சிதம்பரம் பச்சை கண்டியர் மடத்துக்கு  எல்லை மற்றும் சொத்து பிரச்சினை வந்த போது மழவராய நயினார்கள்   தீர்த்து வைத்தனர் என்ற குறிப்பும் உள்ளது.




இதில் குறிப்பிட பட்ட மடங்கள் எல்லாம் வீர சைவ மதத்தை சேர்ந்த மடங்கள்  என்று கூறப்பட்டுள்ளது.

விஜயநகர விருப்பாட்சி தேவராயர் ராச்சியம் பண்ணும் வருடம் சக ஆண்டு 1433 ம் வருடம் விபவம் தை 13 ம் நாள்  ராசராச வளநாட்டு ராஜேந்திர சோழ வள நாட்டுள் மிழலை நாட்டுள் சேர்ந்த சோழ வளமாகிய தலத்துள்  வன்னியர் குல கிரில தரில நாட்டுக்கு அதிபதிபராகிய குண்ணத்தூர் கட்டியப்ப நயினார் குமாரர் நாகைய மழவராய நயினார் அவர்களும் பெண்ணாகடம் பிரளயம் காத்த கடந்தையார் கோத்திரத்தில் பொன்னளந்த கடந்தை குமாரன் பெரியநாயக்க நயினார் அவர்களும் நம்முடைய குண்ணத்தூர் காணிக்கும் பெண்ணாடக காணிக்கும் பூர்வாசார்யாராகிய குருக்களையயர் திசைமுக தேவர் அவர்களுக்கும் கடந்தையார் கிராமம் நாகையமழவராய நயினார் அவர்களுக்கும் சர்வ மானியமாக கொடுக்கப் பட்ட ஊர்களும் அதில் உள்ள நிலங்களுக்கு உரிய எல்லைகளும் கொடுக்கப் பட்டுஉள்ளது.




மாக்குடி,காரச்சேரி,கடம்பங்குடி,பண்ணைகிராமம், மாறபாடி,
நெடுங்கொல்லை,பூந்தோட்டம்,கீழ்மாராயம்,மேல்மாராயம்,நரிக்குடி,
ராசாக்கள் நல்லூர்,சோழபுரம் உள்ளிட்ட ஊர்களில் நல்லபெருமாள் பிள்ளை,மானாபிள்ளை,பெத்த பெருமாள் பிள்ளை,சிதம்பர முத்திரியன், ரெகுநாத முத்திரியன் இவர்களுக்கு பிரித்து கொடுத்து அதில் வரும் வருமானத்துக்கு திருவையாற்று சக்கரம் என்ற பணம் கொடுக்க கூறப்பட்டு உள்ளது.    




சோழ வாஞ்சமை நாட்டவர்கள் குருமடத்துக்கு மானிய கட்டளை தருமம்  

உள்ளூர் நாட்டவர், குருவூர் நாட்டவர்,கீழ்ஆனைமேடு நாட்டவர்,மண்மேடு பளைங்குட்ட நாட்டவர்,பீராக்கன் நாட்டவர்,பாவனூர் கூத்தனூர் நாட்டவர்,மாவுத்த யிருப்பு  நாட்டவர்,வாண்டாயிருப்பு நாட்டவர்,அம்மையப்பன்  நாட்டவர், மாறாசேரி நாட்டவர்,கீழ்நரிக்குடி நாட்டவர், புத்து நாட்டவர்,கோயிலாச்சேரி கண்ணங்குடையார் தர்மம், களம்பரம் நாட்டவர், மிழலை நாட்டவர்,சிறுகுடி நாட்டவர்,மட்டியூர் நாட்டவர்,உன்றாத்தம நாட்டவர்,சீபுரந்தான் நாட்டவர், முட்டம் நாட்டவர்,இருப்புணியாம் நாட்டவர்,மேலத்தியூர் நாட்டவர், வாழைகுறிச்சி நாட்டவர்,அமக்காவல் நாட்டவர், காவற்க்கூடம் நாட்டவர்,ஆளங்குரிச்சி நாட்டவர்,கடிச்சம்பாடி நாட்டவர், நீரத்தநல்லூர் நாட்டவர்,தேவனாச்சேரி  நாட்டவர்,ஆதனார் நாட்டவர், திருப்பிறம்பியம்  நாட்டவர், தின்னப்புலியூர் நாட்டவர் மடங்களுக்கு  மானியம் அளித்தவர்கள். 
                 கும்பகோணம் மடமும் -சிதமபரமடமும் செய்து கொண்ட எல்லை பிரச்சினைக்கு பற்றி விசாரணை செய்த மழவராய நயினார் 92 வயது கோவில் பூசகரின் உதவியுடன் தீர்த்து வைத்தார் என்ற குறிப்பு உள்ளது. திருவெண்காடு மடத்துக்கு அரியலூர் பாளையம் தானம் செய்யத செப்பேடு அவர்கள் அரசு முத்திரையுடன் உள்ளது என்றும் தற்போது திருவெண்காடு சோழபுர மடத்து திசைமுக தேவருடையது என்று தீர்த்து வைத்தனர்.



மழவராய நயினார்கள் தங்கள் பாட்டன்  செய்த தானத்தை மீண்டும் சரி செய்து வீர சைவ மடத்து பண்டாரங்களுக்கு நீங்கள் இன்று முதல் இந்த எல்லை பிரச்சனைக்கு வரவேண்டாம்.குருக்களயயர் வரத்தில் (அனுமதியில் ) தலம்  விடாமல் தலம் தாண்டி அனுபவித்து  கொண்டிருக்கட்டும் என்று கட்டளை யிட்டனர்.


     1511 AD செய்த செப்பேடு  மழவராய நயினார் அவர்களின் பாட்டனார் செய்த தானத்தை சரி செய்த செய்தியை கூறு கிறது.பதினான்காம் நூற்றாண்டுகளில்  ராசராச வளநாட்டு ராஜேந்திர சோழ வள நாட்டுள் மிழலை நாட்டுள் சேர்ந்த சோழ வளமாகிய தலத்துள்  வன்னியர் குல கிரில தரில நாட்டுக்கு அதிபர் என்ற செப்பேடு மிக முக்கியமான ஆவணம்

 கும்பகோணம் ,பேரளம்,திருவெண்காடு, தாராசுரம்,சிதம்பரம்  போன்ற இடங்களில் இருந்த மடங்களை பற்றிய குறிப்பையும் அந்த செப்படு குறிப்பிடுகிறது. இது கல்விக்கு பதினான்காம் நூற்றாண்டில் வன்னிய அரசர்கள் செய்த மிகப்பெரிய தொண்டு.இப்போது இந்த மடங்களும்  சொத்துக்களும் யார் கையில் இருக்கிறது என்ற ஆய்வை கண்டிப்பாக செய்து  நம் பாட்டன் சொத்து யார் அனுபவித்து வருகின்றானர் என்று இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும். 


பதினான்காம் நூற்றாண்டில் வன்னியர்கள் கல்விக்கு செய்த கொடை எல்லாம் வளந்தை என்ற பெண்ணை ஆற்றின் வடகரையில் இருந்து ஆரம்பித்து திருத்துறைப்பூண்டி பகுதியில் முடிகிறது. தற்போதைய் திருவாரூர் பகுதியின் கடம்பகுடியும்,நாகை உம்பளமும், நன்னிலம் பூந்தோட்டமும்,கும்பகோணம் கீழ்மாராயமும்,சோழபுரம் பகுதியின் நரிக்குடி ,ராஜாக்கள் நல்லூர் எல்லாவற்றையும் உள்ளடக்கிய பகுதியை தானமாக கொடுத்து உள்ளனர்.   தற்போது உள்ள இந்த ஊர்களின் பெயர்களை கொண்டே  கும்பகோணம் ,பேரளம்,திருவெண்காடு, தாராசுரம்,சிதம்பரம்    மடங்களின் எல்லைகளை அறிந்து கொள்ளலாம்.

       கும்பகோணத்தில்  மஹாமககுளக்கரையின்  வடகரையில் அமைந்து   உள்ள வீரசைவ மடமே இதில் குறிப்பிடப்பட்டுள்ள கும்பகோணம் மடம்.  

Thursday, 11 June 2020

சேதுகாவலன் என்ற ஆரிய சக்கரவர்த்திகள் யார் -history of ariya chakravartis srilanka

கீழைகங்கர்களும்  - மேலைகங்கர்களும்

EASTERN GANGAS AND WESTERN GANGAS 



        கீழை கங்கர்கள் கி பி 500 ம் ஆண்டு முக்கலிங்கம் பகுதிகளை ஆட்சி செய்தவர்கள் . 

மேலை கங்கர்களான கொங்காணிவர்மன் ஆரம்பித்த கர்நாடக கங்கவம்சத்தில் இருந்து வந்த  இந்திரவர்மன் பாசர் மலைப்பகுதிக்கு சென்ற போது ஆரம்பித்ததே கீழை கங்கவம்சம்.    


        கொங்கணி வர்மனை முதல்வனாக கொண்ட மேலை கங்கர்கள் ஆந்திர அமராவதி -நாகர்ஜுன கொண்டா பகுதியில் இருந்து சென்ற இச்வாக்கு வழி வந்தவர்கள். இவர்கள் கோலார் பகுதியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தவர்கள். கீழை கங்கர்கள் மேலை கங்கர் வழி வந்தவர்களாக தங்களை குறிப்பிடுகின்றனர். 

     ஹரிசேனா வகாடாவின் படைத்தலைவர்களாக சென்றவர்கள் அவர்கள் அரசு வீழ்ச்சிக்கு பின் அந்த பகுதிகளில் ஆட்சி செய்ய ஆரம்பிக்கின்றனர்


          கீழை கங்கர்கள் அரச இலஞ்சினை  உட்கார்ந்து இருக்கும் காளை , மேலை கங்கர்கள் அரச இலஞ்சினை நிற்கும் யானை.

     கீழை கங்க அரசன் தேவேந்திரவர்மனின்  பெங்களூரு செப்பேடு  மேலை கங்கரின்  யானை இலஞ்சினையை பயன்படுத்தியதை பார்க்கும் போது இரண்டு கங்கர்களுக்கும் இடையில் உள்ள உறவை குறிக்கிறது.



      கீழை கங்கர்கள் தங்கள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில்  நந்திகிரி நாதரை வணங்குபவர்கள் என்றும் குவலாலயபுரம் என்ற கோலார் பகுதியை தலைநகராக கொண்டவர்களை என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.

       குவலாலயபுரம்  பகுதியை தங்களது முன்னோர் இருந்த பகுதியாக குறிப்பிட்ட கங்கர், நீலகங்கரையர்,பங்களநாட்டு கங்கரையர், காங்கேயன், ஆரிய சக்கரவர்த்திகள்  பற்றிய எல்லா ஆவணங்களையும் இந்த பதிவில் காணலாம்.


கீழை - மேலை கங்கர்களின் ஆவணங்களை ஆய்வு செய்தவர்களின் குறிப்புகள்.
         
            1. கங்க வம்சம்   2. கங்கவாடி   3. குவலாலயம்  /   குவலாலயபுரம் 
4. கோகர்ண  ஈஸ்வரரை வணங்குபவர்  5. நந்திகிரி நாதரை வணங்குபவர்  என்பதை பொதுவாக பயன்படுத்துவது  இருவரும் ஒரு பிரிவினர் என்பதற்கான ஆதாரம்.

                       ஆனந்தவர்ம சோழ கங்கன் கார்னி மற்றும் விசாகப்பட்டினம் செப்பேடுகளிலும்  கங்கவாடி மற்றும்   குவலாலயபுரம் பகுதியில் இருந்து வந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது.  

                        மேலை கங்கர்கள் தங்களை அயோத்தியில் இருந்து வந்த இஷ்வாகு வம்சத்தினர் என்று குறிப்பிட்டு கர்நாடக பகுதியில் கங்கவாடி என்ற பகுதியை ஆட்சி செய்தவர்கள். இவர்களின் தலைநகராக கோலார் பகுதியாக இருந்தது. இந்த வரலாறு தகவலையே  கீழை கங்கர் முதல் அங்கு இருந்து தமிழகம் முழுவதும் பரவிய  கங்கர்கள் தங்கள் கல்வெட்டுகளில் பயன்படுத்தி உள்ளனர்.


         பல்லவர்களான கம்பவர்மன் - நிருபதுங்கன்  இருவருக்குமான பதவி சண்டையில் நடைபெற்ற போர்களே நிறைய வரலாற்று மாற்றத்துக்கான காரணம். 

                  கம்பவர்மன் மகனான அபராஜிதவர்மனுக்கும் -  நிருபதுங்கவர்மனுக்கும் நடைபெற்ற போரில்  அபராஜிதனுக்கு துணையாக  கங்க பிரிதிவீபதியும் ( அபராஜிதன் தாய் கங்க அரசி)   நிருபதுங்கனுக்கு துணையாக  வரகுணபாண்டியன்(பாண அரசியின் பேரன்) பாணபரஞ்சயா என்ற காடுவெட்டி முத்தரையன், ஆதித்த சோழன் இவர்களும் துணையாக இருக்க பல்லவர்களுக்குள்  நடைபெற்ற  திருப்புறம்பியம் போரில் அபராஜிதன் வெற்றி பெற்றார் . அபராஜிதன் துணையாக இருந்த  கங்க மன்னன் பிரிதிவீபதி உயிர் இழந்ததார்.   அதற்க்கு அடுத்து நடைபெற்ற போரில் ஆதித்த சோழன்  அபராஜிதனை கொன்று பல்லவர் பகுதியை முழுவதுமாக ஆட்சி செய்ய ஆரம்பித்தனர் 
                 
இங்கு இருந்து பல்லவர்கள் வீழ்ச்சியும் சோழனது அரசு பேரரசாக  நிலைபெற ஆரம்பித்தது. 



கங்க மன்னன்  இரண்டாம் பிரிதிவீபதியின் உதயேந்திரம் செப்பேடு :  

                         முதலாம் பிரிதிவீபதி  திருப்புறம்பியம் போரில் இறந்த பின்  பல்லவருக்கு ஆதரவாக இருந்த கங்கர்கள்,  தக்கோலம் போரில் கங்கமன்னன் பூதகன் ராஷ்டிரகூடர்களுக்கு ஆதரவாக இருந்து முதலாம் பராந்தகன் மகன் ராஜாதித்தியனை யானையில் இருக்கும் போது கொலை செய்கிறார். அதன் பின்னர் முதலாம் பராந்தகனுக்கு ஆதரவாக கங்கர்கள்  இரண்டாம் பிரிதிவிபதி  காலத்தில் மாறுகின்றனர். 

                இரண்டாம் பிரிதிவீபதி முதலாம் பராந்தகனுடன் பாணர்களுக்கு எதிரான போரில் உதவி செய்ததால் பராந்தகன்  கங்கமன்னனுக்கு " செம்பியன் மாவலி வாணராஜன் " என்ற சிறப்பு பெயரை பாணர்களுக்கு தலைவன் என்று  கொடுத்து சிறப்பித்தார். 

        கங்கர்களின் கொடியாக கருப்பு மானும் , இலஞ்சினையாக காளை மாடும் , வெற்றி முரசாக பிசாசமும் குறிப்பிடப்பட்டு உள்ளது 


            செம்பியன் மாவலி வாணராஜன் என்று பெயர் பெற்றபின் பாணர்களின் சின்னங்களை சொந்தம் செய்து கொண்ட கங்கர்கள்

         வலப்புறமாக உட்கார்ந்து இருக்கும் காளை  அதன் இரண்டு பக்கமும்   அலங்கரிக்கப்பட்ட விளக்குகள் , சந்திரன் , இரண்டு பக்கமும் சாமரம்  நடுவில் ஒரு குடை   காளைக்கு கீழே பிரபுமேரு.   இந்த  சின்னம் எல்லாம்  கீழை கங்கர் - மேலை கங்கர் இருவருமே பயன்படுத்தி உள்ளனர் என்பது செப்பேடுகளில் உள்ள சின்னங்களால் தெரியவருகிறது.





           பங்களநாட்டு கங்கரையர்கள் : படுவூர் கோட்டத்தை சேர்ந்த பங்கள நாட்டை ஆட்சி செய்த மேலை கங்கரின் ஒரு பிரிவு பற்றிய கல்வெட்டு:  

           முதலாம் பராந்தக சோழன் காலத்தில் மேலை கங்கர் கங்கமார்த்தாண்டன் ஆன செம்பியன் பிரிதிவிகங்கரையனின் தம்பியும் ராஜாதித்ய மஹாதேவா என்பவரின் மகனுமான அழிவின் கள்ளரசி ஆன செம்பியன் புவனிகங்கரையன்  விளக்கு எரிக்க 30 கழஞ்சு பொன் கொடுத்த தகவல். 

           வீர பாண்டியன் தலைகொண்ட  கோபரகேசரி பருமருக்கு நான்காம் ஆண்டு பல்குன்ற கோட்டத்து தென்னாற்றூர் சீயமங்கலத்து பள்ளி எழுந்த தேவருக்கு ஸ்ரீகங்கரையர்  கங்கசூளாமணி என்ற பெயருடைய மும்முடிச்சோழ செம்பியன் ஸ்ரீகங்கரையர்  எடுத்த திருக்கற்றளி.   



         உத்தம சோழனின் மனைவிகளுள் ஒருவர்   பங்களனாடுடையார்  பெரும...ணப்பிராட்டியார் என்ற கல்வெட்டு குறிப்பு மூலம் சோழனுடன் மண உறவு  மேலை கங்கருக்கு இருந்துள்ளதை அறிய முடிகிறது. இவரையே விழுப்பரையன் மகளாக மற்ற கல்வெட்டுகள் குறிப்பிடுகிறது 

           பல்குன்ற கோட்டத்து பங்களநாட்டு  கம்பன் ராமன் ஆன உத்தம சோழ பிரிதிவிகங்கரையர்  உத்தம சோழர் காஞ்சிபுரம் அரண்மனையில் உள்ளபோது செய்த கோவில் சர்வமான்ய இறையிலி தானம்.

இதை செய்தவர்கள் உலகன் கண்டராதித்தன் ஆன மீனவ மூவேந்திர வேளான்.. பழுவூர் நக்கன் ஆன விக்கிரம சோழ மாராயன்.


          ராஜராஜ சோழன் காலத்தில் குவலாலயம் - கங்கவாடி ஆறாயிரம் பகுதி சேர்ந்த அரசனின் பெருந்தரம் கங்கன் அம்பலவாணன் கண்டராதித்தன் ஆன மும்முடி சோழ விழுப்பரையன் பற்றிய கல்வெட்டு.     பெருந்தரம்- அரசனின் படைபிரிவை சேர்ந்தவர் - விழுப்பரையர் என்று குறிப்பிடப்பட்டதால் கடல்படை பிரிவை சேர்ந்தவராவார்.



          பெருந்தரம்  கங்கன் அம்பலவாணன் கண்டராதித்தன் ஆன மும்முடி சோழ விழுப்பரையன் திண்டிவனம் பகுதியில் கோவில் கட்டிய கல்வெட்டு தகவல்.



கீழை கங்கர் செப்பேடுகளில் கூறப்பட்ட தகவல்கள் :

                வஜ்ரஹஸ்தா என்ற ராஜாதிராஜாதேவா கி பி 1038 முதல் 1070 வரையும் அவரை தொடர்ந்து அவரது மகன் முதலாம் ராஜராஜ தேவேந்திரவர்மன்  கங்க அரசனாக பதவி ஏற்றது  மே மாதம் 
20ம் நாள் 1070.

           வேங்கியின் மீது போர் தொடுத்தது கி பி 1071-72 முதல் கி பி 1075 வரை நடைபெற்ற போரில் குலோத்துங்கனை வெற்றி கொண்டதாகவும் குலோத்துங்கன் மகளான ராஜசுந்தரியை திருமணம் செய்து கொடுத்தாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் பின்னர்  குலோத்துங்கன் சோழ அரியணையை ஏற்றதும் , அதன் பின்னர் தன் மகன்களை வேங்கியின் ஆளுநர்களாக நியமித்தும் தொடர்ந்தது.

       கங்க மன்னன் ராஜராஜனுக்கு  ராஜசுந்தரிக்கும் பிறந்த மகன் - அனந்தவர்ம சோழ(ட) கங்கன்.

         கங்க மன்னன் ராஜராஜன் ஆட்சி  கி பி 1077 ல் முடிவடைகிறது  ராஜாராஜ தேவேந்திரவர்மன் இறந்தபோது சோழகங்கன்  4 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
           சோழர்களுக்கு பின் சோழ நாட்டை ஆட்சி செய்ய வந்த குலோத்துங்கன் வேங்கி நாட்டை ஆட்சி செய்ய தன் மகன்களை ஆளுநராக நியமித்தார் . வீரசோழன் 1078-84 /1089-92 வரை ஆட்சி செய்ததும் அதன் பின்னர் குலோத்துங்கன் மகன் விக்ரம சோழனுக்கும் - வீர சோழனுக்கும் நடைப்பெற்ற பதவி போட்டியில் வீரசோழன் சோழகங்கனுடன் சேர்ந்ததாக கல்வெட்டுகள் உறுதிசெய்கிறது.

                     குலோத்துங்கனின் 23ம் ஆட்சி ஆண்டில் திருவல்லம் மஹாதேவருக்கு அச்சல வீமன் அரசர் தலைவன் தன் மகளும் குலோத்துங்கன் மகனும் வேங்கியின் அரசனும்  ஆன வீரசோழன் மனைவி  வில்லவன் மாதேவியார்க்காக வைத்த திருநந்தா விளக்கு ஒன்றுக்கு சாவா மூவாப்பெராடு தொன்னூறு வழங்கிய செய்தி.



               வீரசோழன் சோட கங்கனுடன் சேர்ந்த பின்னர்  விக்ரமசோழன்  
கி பி  1092/3 ல் வேங்கியின் ஆளுநராக  பதவி ஏற்றபின்  கி பி 1094 ம் ஆண்டு முதல் கலிங்க போர் - குலோத்துங்கனின் 27 ம் ஆட்சி ஆண்டு நடைபெற்றது. இவை கலிங்கத்துபரணியிலும்  - கருணாகர தொண்டைமானின் திராட்சாராமம் என்ற இடர்க்கரம்பை கல்வெட்டுகளிலும் குறிப்பிட்ட பட்டு உள்ளது. அனந்தவர்ம சோட  கங்கன் தோற்று காடுகளில் தஞ்சம் புகுந்ததாக கலிங்கத்துபரணி கூறுகிறது.    அதன் பின்னர் வீரசோழன் அனந்தவர்ம சோட கங்கனுக்கு துணையாக இருந்தது  கல்வெட்டுகளால் அறிய முடிகிறது.


                              வீர சோழன் மற்றும் சோட கங்கன் இருவரின் கல்வெட்டுகளும் கி பி 1103 மற்றும் கி பி இ 1120 வரை வருடங்களில் உள்ளது. வேங்கியின் பதவியில் இருந்து வீர் சோழன்  வந்த 10 மற்றும் 28 ம் ஆண்டு வரை  உள்ளன.


              இடர்கரம்பை என்ற திராட்சாராமம்  கல்வெட்டு  வீரசோழன் மகளான சோழமாதேவி என்ற ஜெயம்கொண்டான் சோழமாதேவி  சோட கங்கனின் பட்டது அரசியான கலிங்கமா தேவி என்று குறிப்பிடுகிறது.

                                            கி பி  1131     அனந்தவர்ம சோட கங்கன் தம்பியான
ஸ்ரீ வீரப்பெருமாள்(டி) தேவரின் அரசி மகாதேவி மீனவன் மாதேவி   என்பவரை பற்றிய கல்வெட்டு. பாண்டியன் கூட மணஉறவு பற்றிய அரிய தகவல்.

           கி பி  1143 ம் ஆண்டு திராட்சாராமம்  கல்வெட்டு  இரண்டாம் குலோத்துங்க சோழனை  (1133-1150) அரசனாக குறிப்பிட்டு உள்ள கல்வெட்டு. தமிழக வரலாறுகளில் இத்தகைய குறிப்பு சேர்க்கப்பட வில்லை.
            சோட கங்க ஸ்ரீ பெருமா(ள்)டி தேவர் கங்கை புனித யாத்திரை செய்த தகவலை கூறி உள்ளது. அவரின் மனைவியாக பல்லவன் மகாதேவி என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

           இதனால் சோட கங்கர்கள்  தமிழக பல்லவர், பாண்டிய அரசுகளுடன் மிக நெருங்கிய உறவில் இருந்தது தெரிகிறது.

கீழை கங்கர்களின்  செப்பேடும்  - இலங்கையில் உள்ள அதன் தொடர்ச்சியும் 

                இலங்சினையாக காளை -  காளையின் இடப்புறம் சங்கு , அங்குசம் சாமரமும், வலப்புறம் சந்திரன் பிறையாக , கொடி, உடுக்கை இவை செப்பேடுகளில் பொறிக்கப்பட்ட சின்னங்கள். இதே சின்னங்கள் இலங்கை ஆரிய சக்ரவர்த்திகள் சின்னமாக இப்போதும் உள்ளது.    


ஸ்வஸ்தி ஸ்ரீ விஜய சிங்கபுரத்து  சகல கலிங்காதிபதி என்ற செப்பேடு வாசகம் 


சிங்கபுரமும் - சிங்கை ஆரியனும் : 

                                                                  மேலே உள்ள செப்பேடு குறிப்பிடும் அதே சிங்கபுரம் பற்றிய குறிப்பு. ஆரிய சக்கரவர்த்திகள் தங்களை சிங்கை ஆரியன் என்று குறிப்பிட காரணம் இந்த கலிங்க சிங்கபுரமும் காரணம் .

சோழனும் - வணிகமும் :

                             ராஜேந்திர சோழன் காலம்  வரை சோழமண்டல கடற்கரை என்று அழைக்கப்பட்ட வங்காள விரிகுடா கடற்கரையை ஆட்சி செய்தவர்கள்  சோழர்கள். அதனால் நடைபெற்ற போர்களும் - திருமண உறவுகளும் இந்த பகுதி வணிகத்தை தன் வசம் கொண்டு செய்வதற்க்கு மட்டுமே.                                 
                குலோத்துங்கன் காலத்தில் மிக முக்கிய துறைமுகங்கள் ஆன விசாகப்பட்டினம், முக்கலிங்கம், ஒடிசா பகுதிகள் கீழை கங்கர் கைக்கு சென்றது.   அதனால் நடைபெற்ற போர்களே கருணாகர தொண்டைமான் தலைமையில் நடைபெற்ற போர்கள்.

              அதன் பின்னர் கருணாகர தொண்டைமான் தலைமையில் விசாகப்பட்டினம் என்ற குலோத்துங்க சோழ பட்டினத்தில் முதல் முறையாக அஞ்சுவண்ணம் என்ற அரேபிய வணிக குழுவுக்கு வியாபாரம் செய்ய இடம் ஒதுக்கி கொடுக்கப்படுகிறது. கருணாகர தொண்டைமான் தலைமையில் உள்ள வளஞ்சியர் குழு  அவர் பெயரிலேயே கருணாகர தொண்டைமான் தென்இலங்கை வளஞ்சியர் குழு என்று அழைக்கப்பட்டது.
                                   

இலங்கையில் சோட கங்கனும் - சோழர்களும் :

                                     இலங்கை பகுதியில் கிடைக்கப்பட்ட முதல் கல்வெட்டு துண்டு சோட கங்கதேவ என்று குறிப்பிடும் கல்வெட்டு. தமிழக பகுதிகளில் சோழகங்கர்கள் என்று அறியப்பட்ட கங்கர்கள் - ஒடிசா மாநில பகுதியான கலிங்கத்தில் சோட கங்கர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களில் இலங்கைக்கு வந்த ஒரு அரசனை பற்றிய கல்வெட்டு.

                இலங்கை வரலாற்று ஆய்வாளர்கள் குழப்பும் மாகோன் - குளக்கோட்டோன் வரலாறு.

                                      இலங்கையில் மாகோன் படையெடுப்பு சோடகங்கன் மூலம் என்றால் இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சி காலம் ஆன கி பி 1133-1150 வரை மட்டுமே இருக்க முடியும்.  கருணாகர தொண்டைமானின் கடைசி கல்வெட்டு 1133 ம் ஆண்டு விக்கிரமசோழனின் ஆட்சி ஆண்டான 15 வது ஆட்சி  காலத்தில் ஸ்ரீரங்கத்தில் குறிப்பாக உள்ளது. விக்ரம சோழன் காலம் வரை கீழை கங்கர்களுடன் சுமுகமான உறவு இல்லை என்பதற்கு  முதல் கலிங்க போரும்  விக்ரம சோழன் காலத்தில் நடைபெற்ற போருமே ஆதாரம்.

   சோட கங்கனின் இலங்கை ஆட்சி கி பி  1133 -1160 வரை நடைபெற்று இருக்க வாய்ப்பு உள்ளது.

         ஆனால் சோட கங்கன் இலங்கை வந்த காலமாக குறிப்பிடப்படும் வருடம் கி பி 1223. இந்த ஆண்டு   இரண்டாம் ராஜாதிராஜன் - மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நடைபெற்ற இலங்கை போருடன் கூட பொருந்தவில்லை.
              சோட கங்கன் இலங்கை வந்த வருடம் மற்றும் ஆட்சி செய்த காலம் 1133-1160 வரை இருக்கலாம். முக்கியமாக வணிகம் - மற்றும் வணிகர் பாதுகாப்புக்கு இங்கு ஆட்சி செய்து இருக்கலாம்.

சோட கங்கனின் கோகரணத்து கல்வெட்டு :


இலங்கையின் இந்திரபாலா கூறும் கருத்து :   

                            மட்டகளப்பு மானியத்தில் மட்டக்களப்பு  வன்னிய அரசர்கள் மாகோனால்  நிறுவப்பட்டவர்கள் என்றும் கலிங்க அரசனாக காட்ட படும் சோட கங்கன் பல்லவ அரசனின் மகளை மணந்த காரணத்தால்  பல்லவ தொண்டைமண்டல பகுதியான காலியூர் கோட்டம் (காளிகோட்டம்)  என்ற இடத்தில இருந்து படையாட்சிகளை கொண்டு வந்து வன்னிபம் அமைத்து கொடுத்தார் என்று கூறப்பட்டு உள்ளது.மேலும் அனைத்து சாதிகளுக்கும் அவர்களுக்கான வேலைகளை பிரித்து கொடுத்தார் என்றும் கோவில் மற்றும் குளங்களை  புனர்நிர்மாணம் செய்தார் என்று கூறப்பட்டுள்ளது.  குளகோட்டன் என்பவர் பற்றி கூறப்பட்டுள்ளது.

          குளகோட்டன்  என்பவரை குளம் வெட்டுபவர் என்றும் அவர் கோவில் மற்றும் குளம்  கட்டி சீர் செய்யும் வேலையும் நீர் பாசனத்தை சரி செய்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.குளகோட்டன் சைவ ,வைணவ கோவில் களோடு பெளத்த மதசின்னங்களையும் சரி செய்தார்.

காலியூர் கோட்டமும் படையாட்சிகளும் :                         

                                                                         காலியூர் கோட்டம் எனபது உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த   தொண்டை மண்டல படைப்பற்று பகுதி. இலங்கை குறிப்புக்கள் கூறும் செய்தி கலிங்க மாகோன்  காளி கோட்டத்து படையாட்சிகளை கொண்டு வந்து இலங்கையில் போர் செய்து கைபற்றினார். 

                                   மாகோன் காலத்தில் சோழதேசத்தை கலிங்கம் வரை ஆட்சி செய்தவர் இரண்டாம்  குலோத்துங்கன்  என்பது குலோத்துங்கனின் கோதாவரி கல்வெட்டு மூலம் தெரிகிறது. 

          சோட கங்கன் என்ற கீழை கங்கர்   கருணாகர தொண்டைமானுக்கு பின்னர்   இலங்கையில்  வணிகத்தை  கவனித்து ஆட்சி செய்தவர்கள் அவர்களே இலங்கையில் மாகோன் மற்றும்  குளககோட்டன் என்று அறியப்படுகின்றனர்.

பராந்தகன் முதல் வீரராஜேந்திரன் காலம் வரை சோழர்கள் ஆட்சி செய்தாலும் இலங்கையில் வன்னிமை அமைக்காமல் தங்கள் நேரடி ஆட்சியில் ஆட்சி செய்தனர்.

                 வன்னிமைகள்  சோட கங்கன் ஆட்சி ஆண்டான  கி பி இ 1133 ல் இருந்து  ஆரம்பிக்கப்பட்டு இருக்கலாம். இலங்கையில் படையாட்சி வன்னியர் வரலாறு ஆரம்பிக்கும் காலமும் இதுவாக இருக்கலாம்.

மூன்றாம் குலோத்துங்கன் காலத்து கல்வெட்டு கூறும் தகவல்:

                                    இலங்கையில் இருக்கும் திருநீற்றுச்சோழபுரத்தில் இருக்கும் சூசகர் கருணாகர வீரர்கள்  திருகண்ணபுரத்தில் இருக்கும் கருணாகர வீரர் மடத்துக்கு செய்த தானம் பற்றி கூறப்பட்டு உள்ளது.இது கருணாகர தொண்டைமான் இலங்கைக்கு சென்று திரும்பிய செய்தியை  அவர் பெயரால் இயங்கிய வணிககுழுவான  "கருணாகர தென்னிலங்கை  வளஞ்சியர்"  உறுதி செய்து உள்ளது. 

அஞ்சு வண்ணமும் - கிழக்கு கடற்கரை வணிகமும் : 


                            குலோத்துங்க சோழ பட்டினமான விசாகபட்டினத்தில்  அனந்தவர்ம சோட கங்கன் 13 ம் ஆட்சி ஆண்டில் கி பி 1090 எழுதப்பட்ட கல்வெட்டு குறிப்புகள்.

               சமங்கட்டு கண்டி அசாவு  என்பவர்  பதினெண்பூமி நகரசேனாபதி என்றும் - மலை மண்டல மாதா என்று அழைக்கப் படுகிறார். மாதாக்கள் - மலை மண்டல குழுவை தலைமை ஏற்பவர்.

                     சோழர் காலத்தில்  மலை மண்டல மாதாக்கள் என்ற வணிக தலைமை பொறுப்பு  சம்புவராயர்களுக்கு தொடக்கிறது. திருச்சிற்றம்பலம் அரசூர் உடையான் பல்லவராயர் இலங்கையில் உள்ள கல்வெட்டுகளில் மலை மண்டல மாதாக்கள் என்று அழைக்கப்படுகிறார். இதே வணிக கட்டமைப்பு மட்டுமே தொண்டைமண்டல வரலாறை சென்னப்ப நாயக்கர் வரை தொடர்ந்து உள்ளது.
           முதலாம் குலோத்துங்கன் காலம் முதல்  பாண்டிய நாட்டு பகுதியில் இருந்தவர்கள் கங்கர்களான காங்கேயன் என்ற மாளவராயர்கள் ,அதியமான், காலிங்கராயர்கள்.


              கி பி 1160 களில் வலுப்பெற்ற இலங்கை அரசுகளால் சோட கங்கர் மற்றும் சோழ படையினர் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கலாம். அதே கால கட்டத்தில் பாண்டியர் சகோதர சண்டை ஆரம்பம் 1160 -1175 வரை தொடர்கிறது. அந்த காலகட்டத்தில் ஒரு பாண்டியன் குலசேகரனுக்கும்  இலங்கை அரசனுக்கும் நடைபெறுகிறது. அதன் காரணமாக இலங்கை படையினர்  ராமேஸ்வரம் தீவுகளில் வந்து தங்குகின்றனர்.

            இதற்கான கல்வெட்டு கி பி 1171 ம் ஆண்டு இரண்டாம் ராஜாதிராஜனின் 5 ம் ஆட்சி ஆண்டில் ஆரப்பாக்கம் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

              சோழன் படைத்தளபதி  எதிரிலி சோழ சம்புவராயர் தன்  மகனான பிள்ளை பெருமாள் பல்லவராயன் இலங்கை தண்ட நாயக்கர்களிடம் போர் செய்ய சென்றபோது போரில் வெற்றி பெற தனது குருவான்   உ மாபதி தேவரிடம் அகோர பூஜை செய்ய வேண்டிய செய்தியும்  அவர் மகன் பெருமாள் நம்பி பல்லவராயர் இலங்கை சாமந்தர்கள்  - ஜயத்தர தண்டநாயகனையும் - லங்காபுரி   தண்டநாயகன் உள்ளிட்ட வீர்ர்களை வெற்றி கொண்டு விரட்டி அடித்து திரும்பினர்.

             இலங்கை அரசன் பராக்கிரமபாகு   சோழனுக்கு எதிராக போர் செய்யவும் இலங்கை படையினர்  சோழ நாட்டு பகுதி வரை வந்து தாக்கியதும் அண்ணன் பல்லவராயன் தலைமையில் சோழர்கள் இலங்கை படையை விரட்டினர் .

                         பழையனூருடையான்   - வேதவனமுடையான் -அம்மையப்பன்  @அண்ணன் பல்லவராயன்  தலைமையில் சென்றவர்கள் இலங்கை படையின் தண்டநாயக்கர் இருவரையும் கொண்டு தலையை மதுரையில் கோட்டை வாசலில் தொங்கவிட்டார்.

                  பின்னர் இலங்கைக்கு  சென்று  ஊராத்துறை, வலிகாமம், வல்வெட்டிதுறை ஆகிய ஊர்களில் புகுந்து தாக்கியும்  கொல்வாரை கொன்று யானையையும் பொருட்களையும் திரைகொண்டு வந்ததாக கல்வெட்டு உள்ளது.  

   
             குலசேகர பாண்டியன் இலங்கை அரசனுடன் சேர்ந்து கொண்டு சோழன் செய்த உதவியினை மறந்து சோழருக்கு எதிரான வேலைகளை ஆரம்பித்து - இலங்கை படை தலைவர்களின் தலைகளை மதுரையில் இருந்து எடுத்தும் சோழனுக்கு உதவிய ராஜராஜ கற்காடக மாராயன் மற்றும் ராஜகம்பீர அஞ்சுகோட்டை நாடாழ்வான் இருவரையும் ஆட்சி பகுதியில் இருந்து நீக்கியதால்  அண்ணன் பல்லவராயன் மதுரைக்கு படையெடுத்து மீண்டும்  பராக்கிரம பாண்டியன் மகனான  வீரபாண்டியனை  ஆட்சியில் அமர்த்தினார்  







            கி பி  1172 ம் ஆண்டு ராஜாதிராஜனின் திருவாரூர் கல்வெட்டு  பல்லவராயன்  - பழையனூர் உடையான் வேதவனம் உடையான் அம்மையப்பன்  பல்லவராயன் இலங்கை போருக்கு முன்பான கல்வெட்டு 


கி பி 1187 ம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நடைபெற்ற பாண்டியன் போர் பற்றிய மெய்கீர்த்தி


           விக்ரமபாண்டியன் தண்டால் இறந்த வீரபாண்டியன் மகனுக்காக போரில் மறப்படை, சிங்களப்படையை  மூக்கறுக்க அவர்கள் கடலில் தப்பித்தனர். மதுரையை மீண்டும் கொண்டு ஜயஸ்தம்பம் நாட்டி  பாண்டியருக்கு அருளியதை குறிப்பிடுகிறது. 




மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்த சூரைநாயகன் - கடற்போரில் ஈடுபட்ட கங்கர்.

    குவலாலயபுர பரமேஸ்வரன் - கங்கர்குலற்த்பவன்   - சூரை நாயகனான சீய கங்கன்.     இதே சீய கங்கன் - சாகரராஜன் என்றும் அழைக்கப்பட்டு இருக்கிறார்.

             குலோத்துங்கன் காலத்தில் உள்ள சீயகங்கன்  அமராபரணன் ஆன திருவேகம்பம் உடையான் (ஏகம்பம் - ஏகாம்பரர் )  குவலாலயபுர பரமேஸ்வரன் - கங்கர்குலற்த்பவன் என்ற சிறப்பு கொண்டவர்.


மூன்றாம் குலோத்துங்கனின் இலங்கை போருக்கு பின்னர்  உள்ள கல்வெட்டு குறிப்பு.

                மணிமங்கலம் வண்டுவராபதி எம்பெருமான் கோவிலுக்கு வழங்கப்பட்ட தானம்.

          கண்ணப்பன் துசி அதிநாயகம் - நீலகங்கரையன் வன்னியநாயன் ஆன உத்தமநிதி கண்ணப்பன் .
                  வன்னியநாயன் ஆன உத்தமநிதி கண்ணப்பன் வழங்கிய தங்கம் கொடுத்த குறிப்பு.
            இதே சோழ கங்கன் குறிப்பு இலங்கை கல்வெட்டுகளில் உத்தம சோழகங்கனாக உள்ளது.
             மூன்றாம் ராஜராஜன் காலத்தில் இருந்த பல்லவராயன் -  அரசூர் உடையான்  திருச்சிற்றம்பலம் உடையான் ஆன திருச்சிற்றம்பல பல்லவராயன்  மலைமண்ட மாதாக்கள் என்ற குறிப்பு இலங்கையில் குறிப்பிடபட்டு உள்ளது.

          ஆனால் மலைமண்டலம் என்ற தொண்டைமண்டல பகுதியை மலையாள தேசம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குழப்பி உள்ளனர்.

இலங்கை தமிழ் சாசனங்கள் என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள்:


           மலைமண்டலம் என்பது மலையாள தேசம் - அங்கு இருந்து வந்தவர்கள் அப்படி அழைக்க பட்டு இருக்கலாம் என்று குறிப்பிட்டு உள்ளது.

   மலைமண்டம் என்பது தொண்டைமண்ட வணிக குழுவின் பெயர் மட்டுமே. காஞ்சிபுரம் மலைமண்ட பெருமாள்  - சதுரங்க பட்டின மலைமண்டல பெருமாள் என்ற பெருமாள் கோவில்கள் மலைமண்டத்தில் உள்ளது. மலைமண்டல குழுவுக்கு தலைவர்கள் எல்லோருமே பல்லவராயர்கள் மட்டுமே. இவர்களை மலையாள தேசம் என்று குறிப்பிட்டது வேடிக்கை.

              சேதிராயனையும் மலையாள தேசத்தில் இருந்து வந்த படைத்தலைவன் என்று குறிப்பிட்டு உள்ளனர்.


              ஈழம் எழுநூற்றுக்காதம் எறிந்து கொண்ட செயவாகுதேவர் நிழல் வேலைக்காரன் மலைமண்டல நாயக்கன் சேதிராயன் என்று குறிப்பிட பட்டது மூலம் மலைமண்டல குழுவின் நாயக்கர் என்பது தெரிகிறது.


              ஈழம் எழுநூற்றுக்காதம் எறிந்து கொண்ட என்பது தொண்டைமான் அரசர்களின் மெய்கீர்த்தியில் உள்ளது. ஆனால் பெயர் குறிப்பிடாமல் ஜெயாவாகு தேவர் என்பதால் திரையன் மோகனன் ஆன தொண்டைமான் கோப்பெருஞ்சிங்கன் படைத்தலைவர்களில் ஒருவர் என்பதால் அவரை குறிப்பிட வாய்ப்பு உள்ளது.

மூன்றாம் ராஜராஜனுக்கும்  கோப்பெருஞ்சிங்கனுக்கும் பிரச்சனை வரக்காரணம் வணிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. 

               கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் இருந்த படைத்தலைவர்கள் பற்றிய குறிப்புகளே இலங்கை கல்வெட்டுகளில் அதிகம் காணப்படுவதும்  மூன்றாம் ராஜராஜனின் 19-20 ம் ஆட்சி ஆண்டுக்கு பின்பு இதே படைத்தலைவர்கள் சோழனுக்கு எதிராக மாறியதும் தெரிகிறது.

          ஸ்ரீமத் குவலாலயபுர பரமேஸ்வரன் - கங்கர்குலோற்த்பவன்- காவிரிவல்லபன் - நந்திகிரி நாதன் -   அமராபரணன்  ஆன சீயகங்கர்.



         ஜெயசேவகன் சேதிராயன் ஆன சூராண்டார்  - ஜெயவாகு தேவர் நிழல் வேளைக்காறன் என்பதை குறிக்கும் ஜெயசேவகன்.

கடல் போரில் பங்கெடுத்ததை குறிக்கும் சுராண்டார். 

ஜெயசேவகன் சேதிராயன்  பிறந்த நாளில் பதினென்பூமி திசைவிளங்கும் திறல் ஆயிரத்து திகழ் வணிகர் குழு  செய்த தானம்  மலைமண்டல குழுவில் இவர்களும் இருப்பதை குறிப்பதாக உள்ளது.

          இலங்கையில் மலைமண்டல நாயக்கராக குறிப்பிப்பட்டவர்  வன்னியநாயன் சேதிராயன்  கோப்பெருஞ்சிங்கன் பெயரில் செய்த தானம்.

          கோப்பெருஞ்சிங்கன் - மூன்றாம் ராஜராஜனை கைது செய்து சேந்தமங்கலத்தில் சிறைவைத்த போது ஹொய்சாள வீர நரசிம்ம தேவன் படைத்தலைவர்கள் செய்த போர்.

         தண்டிகோபின ஜெகத்தொப்ப கண்டன் , அப்பன தண்டநாயக , சமுத்திர கோபய்யா தண்டநாயக  படையுடன் வந்து கோப்பெருஞ்சிங்கனின் ஆட்சி பகுதிகளை தாக்கி அழிக்க ஆரம்பித்தனர்.  

                 எல்லேரி, காலியூர் மூலை , தொழுகையூர்  பகுதி கிராமங்களை அழித்தும்,  கோப்பெருஞ்சிங்கனின் படைதலைவர்களான வீரகங்கநாடாழ்வான்,  சீனத்தரையனையும் ,   இலங்கை அரசன் பராக்கிரமபாகு உள்ளிட்ட நால்வரையும்  கொன்றும்  கொள்ளி சோழகோன் குதிரைகளை கைக்கொண்டு  பொன்னம்பல சிவனை தரிசனம் செய்தனர்.

        இதனால் கோப்பெருஞ்சிங்கன் ராஜராஜனை விடுதலை செய்ததை கல்வெட்டு தெரிவிக்கிறது.

இதில் கொல்லப்பட்ட பராக்கிரமபாகு இலங்கை அரசனா என்பது தெரியவில்லை.


         ஹொய்சாளர் தண்டநாயக்கரால் கொல்லப்பட்ட சீனத்தரையனுக்கு நினைவாக கொடுக்கப்பட்ட தானம்.

        சீனத்தரையனின் படைப்பற்றான வில்லியனூர் பகுதியில் கோப்பெருஞ்சிங்கனும் , தொண்டைமானும் செய்த தானம் பற்றிய குறிப்புகள் மூலம்  கொல்லப்பட்ட சீனத்தரையன் பெயரால் உள்ளது.

சேதிராயனை  மலைமண்டல நாயகனாக குறிப்பிடப்பட்ட இலங்கை கல்வெட்டு சாசனம்.


நீலகங்கர்களை குறிக்கும் கல்வெட்டுகள் உள்ள இலங்கை சாசனம் :

               குவலாலய பரமேஸ்வரன் - கங்ககுலோத்தமன் -காவிரி வல்லபன் - நந்தி கிரிஞ்சதன் உத்தம சோழன் பெயரால் மண்டலநாயக்கருக்கு உடன்படும் வேளைக்காறன் . ஓலைக்காரன் -மாதேவன் நேர் ஆணத்தி.




காஞ்சிபுரத்தில் உள்ள கீழை கங்க அரசனின் கல்வெட்டுகள் :

                அனந்த வர்மா ரகுத்த தேவா என்ற கீழை கங்க அரசனின் கல்வெட்டு  பரமவைஸ்ணவன் , பூரி புருசோத்தமனின் மகன்,ஏகாதேசி விரதத்தை கடைபிடிப்பவர் என்றும் மஹாராஜாதிராஜா ராஜபரமேஸ்வரா என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இவரின் மனைவி சோமளா தேவி - அபினவ -வாரணாசி என்ற ஒடிசாவில் கட்டக் பகுதியில் இருக்கும் போது காஞ்சி அருளாள பெருமாளுக்கு கொடுத்த தானம்.

அந்தருத்ர விஷ்யா என்ற ஒடிசா பகுதியை சேர்ந்த உடையகாமம்   என்ற ஊரினை தானமாக கொடுத்துள்ளார்.

அரசன் நேரில் இருந்து அரசி ஒடிசாவில் இருக்கும் போது கொடுக்கப்பட்ட தானம் பற்றிய கல்வெட்டு.

  இதை வரலாற்று ஆய்வாளர்கள் பார்க்கும் பார்வை இவர்கள் எப்படி ஒடிசாவில் இருந்து கோதாவரியை தாண்டி காஞ்சிபுரம் வரமுடியும். இடையில் காகதீயர்கள் வலுவாக இருப்பதால் இந்த கல்வெட்டு பொய்யாக இருக்கலாம் என்று கருத்து கூறி முடித்து உள்ளனர்.

           கலிங்கத்தில் இருந்து இலங்கைக்கு எப்படி போனார்கள் என்று வரலாற்று ஆய்வாளர்களுக்கு தெரியுமா. கடற்படை வைத்து இருக்கும் அரசன் தொண்டைமண்டல கடல்பகுதியில் இருந்து காஞ்சிபுரம் வரமுடியும் என்று யோசிக்காம வரலாறு எழுதியவர்கள் இந்த கல்வெட்டை கற்பனை என்று முடித்து விட்டனர்.


          மூன்றாம் ராஜராஜனின் 20 ம் ஆட்சி ஆண்டு காலத்தில் அனந்த வர்மா ரகுத்த தேவா காஞ்சிபுரம் அருளாள பெருமாளுக்கு தினமும் ஒரு நாழி நெய் - நான்கு விளக்கு எரிப்பதற்கு 128 பசு(64 பால் பசுவும் ,64 கன்றும் ) தானமாக கொடுத்துள்ளார்.

கீழை கங்கர்கள் காஞ்சிபுரத்தில் இருந்த போது ஹொய்சாள வீரநரசிம்மன் படை அவர்களை விரட்டியதாக குறிப்புகள் உள்ளது.

              ராஜராஜசோழனை  காடவன் சிறை வைத்த போது உதவிக்கு கீழை கங்கர்கள் வந்து காஞ்சியில் தங்கியதாகவும் அவர்களை த்ரிகலிங்க படை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. 

       சோழனை காக்க பேரண்டம் என்ற சிறப்பு படை காஞ்சியில் நிறுத்தப்பட்டு துஷ்டர்களான முக்கலிங்க படையான கீழை கங்கரிடம் இருந்து சோழனை காக்க நிறுத்தப்பட்ட படை என்று குறிப்பிடப்பட்டுஉள்ளது. 

ஹொய்சாளரின் கன்னட கல்வெட்டு குறிப்பிடும் தகவல் :

              அதியமான் -சேரன் -பாண்டியன் -மகர(மகதை) மற்றும் வலிமையான காடவர்களை வெற்றி கொண்டு சோழனை காப்பற்றி  சேது வரை உள்ள நிலம் தன் வசம் கொண்டு , கீழை கங்கரின்   யானை படை பலத்தை கொண்டு காஞ்சியில் நுழைந்த முக்கலிங்க படையை விரட்டிய நரசிங்க ராயன் என்று குறிப்பிடுகிறது .


மூன்றாம் ராஜராஜனின் 24 ம் ஆட்சி ஆண்டில் பதியப்பட்ட கல்வெட்டு :

           தண்டி கோபின ஜகதொப்பகண்டன் சோமய்ய தண்டநாயகன்  பற்றிய குறிப்பில் - வன்னிய வேட்டைக்காரன் , சேதிராயன் தலையை கொண்ட கண்டன் என்ற குறிப்பு   கோப்பெருஞ்சிங்கனுடன் நடந்த போரில் கொல்லப்பட்ட இலங்கை அரசன் மற்றும் 4 படைத்தலைவர்களில் ஒருவரான வன்னியநாயன் சேதிராயனை கொன்று வன்னிய வேட்டைக்காரன் என்றும் ,சேதிராயன் தலையை கொண்ட கண்டன் என்று கல்வெட்டுகளில் குறிப்பாக கொண்டு பதிந்து உள்ளனர்.

இதன் பின்னர் இலங்கை வணிகம் முழுவதும் ஹொய்சாளர் கைக்கு செல்வதை பார்க்கும் போது ராஜராஜன் சிறைபிடிக்க பட்டதும் அதை மீட்க ஹொய்சாளரும் - காடவனுக்கு உதவியாக கீழை கங்கரும் காஞ்சி வரை வந்து உதவுவதும் வணிகத்தை கைப்பற்ற மட்டுமே என்று தெரிகிறது.

        இலங்கையில் தம்பலகாமம் என்ற இடத்தின் துண்டுகல்வெட்டு  ஜகதொப்பகண்டன் பற்றிய குறிப்பு.


                  ஜகதொப்பகண்டன் என்ற  சோமய்ய தண்டநாயகன் - வன்னிய வேட்டைக்காரன்  என்ற சிறப்பு பெயர் இலங்கையில் வன்னிமை வன்னியர்களாக இருந்த வன்னியர்களை வெற்றி கொண்டதையும்   வன்னியநாயன் - சேதிராயன் , வன்னியநாயன் -நீலகங்கரையரை   வெற்றி கொண்டதை குறிக்கும் செய்தி.

            சேதிராயன் தலையை கொண்ட கண்டன் எனபதன்  மூலம் வன்னியநாயன் சேதிராயனை கொன்றதையும் தன் சிறப்பாக கூறும் குறிப்புகள் எல்லாம் இலங்கை வணிகத்துக்கான போரில் ஏற்பட்டது மட்டுமே.
                   பேரண்டம் என்ற சிறப்பு படைக்கு  தலைமை    ஏற்ற     ஜகதொப்பகண்டன்  தலைமையில்  நிறுத்தப்பட்டு படை பற்றிய குறிப்புகளே இந்த துண்டு கல்வெட்டுகள். இலங்கை வரலாற்று ஆய்வாளர்கள் இந்த குறிப்புகளை இலங்கையின் விக்ரமசலமேகன்  எனபவரோடு இணைத்து உள்ளனர். 

          உடையார் நிச்சயித்த  ஜகதொப்பகண்டன் தானத்துக்கு நிலையாக்கிய தம்பலகாமம் ஊரை என்ற கல்வெட்டு - வீரநரசிங்க ராயன் என்ற அரசனின் படைத்தலைவன் என்பதை குறிக்கும்.

                தோப்பாவையை  கைப்பற்றிய  கலிங்க மாகோன் அதன் பகுதிகளை படையாட்சி வன்னியருக்கு பகுந்து கொடுத்தான் என்று மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் கூறுகிறது.

                      கோணம்,கந்தளாய் ,கொட்டியாரம்,கட்டுக்குளம், பதவியா, மன்னார், மாதோட்டம், புலச்சேரி,தேவர்பட்டினம் முதலிய ஊர்களில் படைநிலைகளை  மாகோன் அமைத்ததாக குறிப்பு உள்ளது.

         ஒல்லாந்தர், பிரிட்டிஷ் குறிப்புகளில் தம்பலகாமம் வன்னிமை - திரிகோணமலை பிரதேசத்து நான்கு வன்னிமையில் ஒன்றாகவும் ,  தம்பலகாமத்து வன்னியனாரை பற்றிய குறிப்புகள் அதிகம் உள்ளது.

பாண்டிய நாட்டில் கங்கர்கள் - காங்கேயன் -மாளவ சக்கரவர்த்தி - ஆரிய சக்கரவர்த்தி :

                   மாளவ சக்கரவர்த்தி என்பதை மழவச் சக்கரவர்த்தி என்று எழுதப்பட்ட குறிப்புகளே அதிகம் உள்ள தொல்லியல் குறிப்புகள். கங்கரை மாள வங்கிசன் என்ற குறிப்புகளும் கல்வெட்டுகளில் மாளவ சக்கரவர்த்தி என்ற கல்வெட்டு குறிப்புகள் இந்த தொல்லியல்துறை குழப்பங்களையே  காட்டுகிறது.
                 இரண்டாம் ராஜாதி ராஜன் காலத்தில் நடைபெற்ற சிங்கள படையெடுப்பு  செம்பொன்மாரி என்ற காங்கேயனை கைது செய்ததாக குறிப்புகள் உள்ளது. திருஞானசம்பந்தர் மடத்துக்கு சோழ தேசத்தில் இருந்த நிலத்தை விற்று தானம் கொடுத்ததாக குறிப்பு உள்ளது. இதே குறிப்பு பின்னர் பாண்டியர் காலத்தில் கோளக்கி மடம் பற்றிய தானங்கள் அய்யன் மழவராயன் செய்ததாக கல்வெட்டு குறிப்புகள் உள்ளது. 



திருப்பத்தூர் பகுதியில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கல்வாயில் நாடாழ்வான் ஆன கண்டன் ஆளுடையான்.


          கண்டன் ஆளுடையானை  நியமம் பகுதிக்கு அரசன் ஆன  கண்டன் அமுத கண்டன் என்று குறிப்பிடுகிறது. 


காங்கேயன் குறவஞ்சி என்ற குறவஞ்சி  பாடல் கூறும் காங்கேயன் பற்றிய தகவல்கள்.

                 மாரியம் பதியில் உள்ள  காங்கேயன் சூரிய குலத்தில் தோன்றிய மரபினன். மேருவினும் புகழ் உடையவன். செம்பியனை வென்றவன்.பாடிய புலவருக்கு பாரி போல் பரிசு வழங்குபவன். காசி விசுவநாதரை வணங்குபவன்.
                கங்கை பெருங்குலத்தவன், ரவியான சூரிய கோத்திரன், மாளவ வங்கிசன் ஆன  நாராயண காங்கேயன்  - முத்து துறைமுகமுயுடையோன்

         காங்கய தீரன் மாரிநாடுடையான் , மலைகலங்கிடினும் மனங்காதவன் , அலைகலங்கிடவே ஐவேல் எறிந்தோன் . கண்டன் காங்கேயனை குவலாலயம் பதியான். (காசியம் பதியான் என்று மாற்றப்பட்டுஉள்ளது
          சூரிய குல காங்கேயன் தொழுதிறைஞ்சும் வாசல் -விசைய முத்து ரெகுநாத சேதுபதி தினம் பணியும் திசை புகழும்  பொன்மாரி சிறையிலார் வாசல்.

         காங்கேயனை -சேதுபதி என்று கூறும் காங்கேயன் குறவஞ்சி மூலம் கங்கர்ளே முதல் சேதுபதி என்பது உறுதியாகிறது. பின்னர் எழுதப்பட்ட கதைகளுக்கு வரலாறு  இல்லை என்பதே  உண்மை. 
          ராமேஸ்வரம் தீவை குறிக்கும் மூன்றனசை மன்னர் என்ற குறிப்பு. பின்னாளில் மறவ சேதுபதி காலத்திலும் காங்கேயனே வன்னியனாக குறிக்க பட்டு இருக்க வேண்டும்.

திருநாடு உடையான் - சேது நாட்டுக்கு அரசன்:

       மாறவர்மன் சுந்தரபாண்டியன்  காலத்தில்  அரையன் திருநாடு உடையான் ஆன நீலகங்கரையர்  பெயரில் அமைக்கப்பட்ட  திருநாடுஉடையான் சந்தி.




திருபுவன சக்கரவர்த்தி  கோனேரின்மை கொண்டான்  காலத்தில்   அரையன் திருநாடு உடையான் ஆன நீலகங்கரையர்  பெயரில் அமைக்கப்பட்ட  திருநாடுஉடையான் சந்தி.






கோனேரின்மைகொண்டான் திருபுவனச் சக்கரவரத்திகள்  ஸ்ரீ குலசேகரதேவர் காலத்தில் ஊர் வாரணாசி சீரங்கநாதரான மாளுவ சக்கரவர்த்திகள் பற்றிய கல்வெட்டு.   

           மாறவர்மன் குலசேகரன் காலத்தில் நரசிங்கதேவர்  மகனார்  அலைவாயுகந்த பெருமாள் ஆன மாளவசக்கரவர்த்திகள்  தான் கட்டிய மாளவன் சந்திக்கு கொடுத்த தானம்.


           ஜடாவர்மன் குலசேகரன் இரண்டாவது ஆட்சி ஆண்டில்  பள்ளிப்பீடம் மழவராயனில் எழுந்தருளி இருந்து மழவராயர் ஸ்வாமிகள் செல்வத் திருவாரூர் கிருஷ்ண கொளகி மடத்து ஆச்சரியபுருஷரில் தற்புருஷசிவர்  செய்யத் திருவாய் மொழிந்தருளின படி இவ்வாசாரியார் மாடக்குளக் கீழ் மதுரை திருஞானசம்பந்தன் மடத்துக்கு பாகனூர்க் கூற்றத்துச் சோழ குலாந்தகச் சதுர்வேதி மங்கலத்து  ஸ்ரீவல்லவன்   கட்டளையிலும் பராக்கிரம பாண்டியன் கட்டளைக் கீழ்கூற்றத்தில்  முத்தியாண்டான் பற்றாய் ஐயன் மழவராயர்க்கு காணியாய் கொடுத்த நிலமும். 

கோனேரின்மை கொண்டான்  காலத்தில் உள்ள  மாளவச்சக்ரவர்த்தி ஆன காங்கேயன் 

         எம்மண்டலமும் கொண்டு அருளிய மாறவர்மன் குலசேகர தேவர் காலத்தில் ஆரிய சக்கரவர்த்திகள் திருமுகப்படி திருப்புல்லாணி திருப்பதியார்க்கு செய்த தானம்.  

கோனேரின்மை கொண்டான் காலத்தில் மூன்று ஆரிய சக்கரவர்த்திகளை பற்றிய கல்வெட்டு குறிப்பும் அவர்கள் செய்த தானம்.  

தெய்வசிலையான் அழகனான ஆரிய சக்கரவர்த்தி 

பராக்கிரம பாண்டியன் அம்மான் ஆன ஆரிய சக்கரவர்த்தி 

ஆரியச்சக்கரவர்த்தி -பெயர் கல்வெட்டுகளில் சிதைந்து உள்ளது.   



         பராக்கிரம பாண்டிய தேவர் காலத்தில் சீரங்கநாத நாயக்கர் என்ற ஆரிய சக்கரவர்த்தி (மாளவ சக்கரவர்த்தி  என்ற கல்வெட்டு இதே பெயரில் மேலே உள்ளது) தன் பெயரால் கண்டர் கண்டன்  சந்தி அமைத்ததை குறிப்பிடுகிறது. 

            இதே ஸ்ரீரங்கநாதன்  பராக்கிரம பாண்டியன் அம்மான் ஆக இருக்கலாம். இவர் மகன் மாளவ சக்கரவர்த்தி அலைவாயுகந்த் பெருமாள் என்ற கல்வெட்டும் மேலே கொடுக்கப்பட்டு உள்ளது.  திருப்புல்லாணி கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் மூவரில்  இவர்கள் இருவர் இருக்க வாய்ப்பு உள்ளது.   

         ஸ்ரீ பராக்கிரமபாண்டிய தேவர் காலத்தில்  இப்பகுதிக்கு உடையார் என்று குறிப்பிடப்பட்ட மாளவ சக்கரவர்த்திகள்.  



          கி பி 1277 ஆண்டு திருவரங்கம் கல்வெட்டு - மாறவர்மன் குலசேகர தேவர் காலத்தில் செவ்விருக்கை நாட்டு சக்கரவர்த்தி நல்லூர்  மதிதுங்கன்  தனிநின்று வென்ற பெருமாள் ஆன ஆரிய சக்ரவர்த்திகள்  



இலங்கையின் வரை படத்தின் விளக்கம் :  சிலோன் என்பது வன்னியர்களின் நாடு என்ற டச்சுக்காரர்களின் குறிப்புகள்




         இலங்கையில்  ஆரிய சக்கரவர்த்திகள்  என்ற குறிப்புகள்  கொடுக்கப் பட்டவை எல்லாம் இலங்கையில் சோட கங்கர் ஆட்சி காலங்களுக்கு முன்பே இருப்பதை போல் எழுதப்பட்டு உள்ளது. அதற்கான ஆதராம் கல்வெட்டுகள் எதுவும் இல்லை.  
         கி பி 1467 க்கு பின்னர் ஆரிய சக்கரவர்த்திகள் பற்றிய குறிப்புகள் வருடம் வாரியாக கொடுக்கப்பட்டு உள்ளது. இவை ஒல்லாந்தர்களின் குறிப்புகள் மற்றும் பிரிட்டிஷ்காரர்களின் குறிப்புகளின் அடிப்படையில் இருக்க வாய்ப்பு உள்ளது. 

           தட்சிணகைலாச புராணம் ஆரிய சக்கரவர்த்திகளை பெரிய கரைகளை உடைய கடற்கரையில் கடவுளர்களும் வந்து வணங்கும் சேதுவை பாதுகாக்கும் காவலன் என்று பொருள்படும்படி    சேதுகாவலன் என்று அழைக்க பட்டதாக கூறுகிறது.

ஆரிய சக்ரவர்த்திகளின் நாணயம் சேது முத்திரை பொறிக்கப்பட்டு 
காளை சின்னம் மற்றும் சந்திரனோடு உள்ளது 





இலஞ்சினையாக கொடுக்கப்பட்டவை பற்றிய இலங்கை புத்தகம் கூறும் படம்
                    ராமேஸ்வரம் கோவிலை  பரராஜ சேகரன் என்றவர் 1414 ம் வருடம் கட்டினார்  என்ற குறிப்பு கோவிலின் கல்வெட்டுகளில் உள்ளது. அதற்கு தேவையான  தூண்களும் மற்ற பாறைகளும் திருகோணமலை பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு இராமேஸ்வரம் கொண்டு செல்ல பட்ட குறிப்பு இலங்கையில் உள்ளது.

                 கோவிலில் இருந்த கல்வெட்டு குறிப்புகள் 1866 ம் ஆண்டு ராம்நாடு அரசனால் அழிக்க பட்டும் - திருத்தமும் செய்ய பட்டு உள்ளது.இதை அழிக்கவேண்டிய காரணம் கோவில் உரிமை பற்றிய உண்மை வெளியே தெரியாமல் இருக்க மட்டுமே என்று தெரிய வருகிறது.

                 விஜய நகர ஆட்சியில் ஈழம் - இலங்கை அவர்களுக்கு அடங்கிய பகுதியாக மாறியது. ஆனால் ஆட்சி அதிகாரம் ஆரிய சக்கரவர்த்திகள் கையில் மட்டுமே இருந்தது. பின்னர் ஒல்லாதார் - பிரிட்டிஷ் என்று மாறிய போது நிகழ்ந்த மாற்றங்கள் அதிகம்.  

          பண்டாரம் என்று பெயர் மாற்றம் வைத்து திரிக்கப்பட்டவை  எல்லாம் ஆதாரம் இல்லாமல் எழுதப்பட்ட பிற்கால கதைகள். 
        கல்வெட்டுகள் ஆதாரம் உள்ளவரை தொகுத்து கொடுக்க பட்ட வரலாறு அதன் பின்னர் உருமாற்றம் அடைத்ததை இங்கு எழுதவில்லை.  

ஆரிய சக்கரவர்த்திகளின் தற்போதைய அரசு கொடி :








        ஆரிய சக்கரவர்த்திகளின் வழி வந்தவர் நெதர்லாந்து நாட்டில் வசிக்கும் ஸ்ரீ மான்   ராஜா ரெமிஜியஸ் கனகராஜா ( Raja  Remigius  Kanagarajah Jaffna) அவர்கள்.



                      கி பி 1550 முதல் 1595 வரை  விஜயநகர அரசுகளின் கட்டுப்பாட்டில் இல்லாமல்  தெற்கில் மாவலி வாணாதிராயனும் , வட பகுதியில் கோனேரிதேவ மஹராஜனும் தனி ஆட்சி செய்ய ஆரம்பித்த போது  சேது பகுதி மாவலி வாணாதிராயன் ஆட்சிக்கு வந்தது.

              மாவலி வாணாதிராயன் தன்னை ஸ்ரீமத் தேவ்வை காவலன் -திருவணை காவலன் என்று கூறுவது சேதுபகுதிக்கு தலைவன் என்பதால் மட்டுமே. இவரது மாமன் என்று நீலகங்கரையரை குறிப்பிடுவதும் சிறப்பு.

             நரசா நாயக்கன் காலத்தில் மாவலியை வென்று காங்கேயனை கைகொண்டு என்று கூறப்படுவது இவர்கள் இருவரையும் போரில் வென்றதாக உள்ள கல்வெட்டு குறிப்புகள் மூலம் அறியலாம். 


மறவ சேதுபதிகள்: 

        மதுரையை ஆண்ட நாயக்க மன்னன் கிருஷ்ணப்ப நாயகன் 1595 ம வருடம் இறந்தார்.அவரது மகன்கள் லிங்கப்பா-முத்துகிருஷ்ண நாயக்கன். 1602 ம் வருடம் லிங்கப்பா இறந்த பின் தன் மாமன் கஸ்தூரி ரங்கையா ஆட்சியை பிடித்து விடுவர் என்று பயந்த முத்துகிருஷ்ண நாயகர் போகலூரை சேர்ந்த உடையன் என்பவர் உதவியுடன் கஸ்தூரி ரங்கையா நாயகனை கொன்றார்..
    1605ம் ஆண்டு உடையக்க தேவருக்கு சேதுபதி பட்டம் கொடுத்து ராம்நாடு மற்றும் சுற்றியுள்ள 72 பாளையக்காரர் களுக்கு தலைவராக நியமனம் செய்தார்.



மேலும் தன் குருவை பாதுகாப்பாக அழைத்து வந்த காரணத்தால் உடையனுக்கு நல்ல உடையும் நகைகளும் சில கிராமங்களும் கொடுத்து அனுப்பினார். அந்த பொறுப்பில் இருந்து நீக்கிய போது   புகலூர் சென்று      கோட்டை கட்டி மேலும் சிலரை சேர்த்து   கொண்டு      வரிவசூல் மட்டும் பாதுகாப்பு வேலைகளை செய்து   வந்த   பணத்தை நாயக்கருக்கு கொண்டு கொடுத்தார்.


      இதனால் சந்தோசம் அடைந்த  முத்து கிருஷ்ணா  நாயக்கர் அவருக்கு உடையன் சேதுபதி என்று பட்டம் கொடுத்து யானை-குதிரை மற்றும் கொடிகளும் கொடுத்து மரியாதை செய்தார்.ராம்நாடு சென்று மண்கோட்டை கட்டி அரசனாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார்.

மறவ சேதுபதியின் செப்பேடுகள் எல்லாம் விஜய நகர மெய்கீர்த்திகளை கொண்டு எழுதப்பட்டது . சேதுபதிகள் அரசு உருவான காலம் கி பி 1606 .

         அந்த காலகட்டத்தில் விஜயநகர அரசு முடிந்து மதுரை நாயக்கர் ஆட்சி நடைபெற்றது. இதில் கூறப்பட்டு உள்ள  கொண்டநாடு கொடாதான், பாண்டி மண்டல ஸ்தாபனாசாரி, சோழ மண்டல பிரதிஷ்டச்சாரி, ஈழம், யாழ்ப்பாணம் எம்மண்டலமும் கொண்டருளி   எனபது எல்லாம் மதுரை நாயக்கர் காலத்தில் கூட நடைபெறாத நிகழ்வுகள். 

          ரவிகுல சேகரனும், சொரி முத்து வன்னியனும் அந்தம்  என்பது தொண்டி துறைமுகத்து தலைவன் காங்கேயனை  வெற்றி கொண்ட மல்லிகார்ஜுனராயர்  காங்கேயனை வெற்றி கொண்டதை  மறவர் சேதுபதி செப்பேட்டில் எழுதியது.    
      
    மல்லிகார்ஜுன மஹாராயர்  காலத்தில் தக்கார்க்கு தக்கான் , இராகுத்தமிண்டன்,  சொரிவன்னிய சூரியன், இராகுத்தமிண்டன், பதினெட்டு வன்னியரை முதுவுபுறம் கண்டான், காங்கேயனை வென்று கடை(சி)யில் விலைகொண்டான், வெட்டு மாவலிக்கு விருந்துஇட்டோன்.   

        வன்னியர் ஆட்டம் தவிர்த்தான் , தொண்டைத்துறை காவலனை அந்தம் எல்லாம் விஜய நகர அரசர் மெய்க்கீர்த்தி இவைகளை எல்லாம் கூறி கடைசியில் அடியார்க்கு வேலைக்காரன்  என்று மதுரை நாயக்கரை கூறி செப்பேட்டில் கூறப்பட்ட தானம் குறிக்கப்பட்டு உள்ளது.


       சொரி வன்னிய சூரியன் :   காங்கேயனை நேரடியாக சூரிய குலத்தில் தோன்றிய வன்னியன் - முத்துக்களை அதிகமா கொண்ட தொண்டிக்கு தலைவன் என்று கூறுகிறது. 

அடுத்து தொண்டி துறைமுகத்தின் தலைவரான வன்னியரை தடுத்து பெருமை கொண்டான

             மதுரை நாயக்கர் காலத்தில் தளவாய் ராமய்யன் - சேதுபதி போர் பற்றி  ராமையன் அம்மனை தெரிவிக்கிறது. ஆனால் வன்னியனான காங்கேயன் ராமேஸ்வரம் தீவில் இருந்து ஆட்சி செய்ததும் அவன் ஒருவனால் மட்டுமே சடைக்கன் என்ற மறவ சேதுபதி போரில் வெற்றி பெற்றதும் பாடலாக உள்ளது. 

           இந்த வன்னியன் மறவ சேதுபதியின் மருமகன் என்று குறிப்பை மட்டுமே வைத்து அந்த வன்னிய காங்கேயனை வன்னிய மறவன் என்று கதை எழுதப்பட்டு உள்ளது.  இந்த வன்னிய காங்கேயன் போரில் இறந்த பின் மறவ சேதுபதி கைது செய்யப்பட்டு மதுரை வரை கைவிலங்கோடு சென்ற குறிப்பும் உள்ளது. 

                          குலோத்துங்கன் காலத்து குறிப்பு முதல் விஜயநகர கால குறிப்புகள் கல்வெட்டுகள் காங்கேயனையும்  - கங்கரை  வன்னியர் என்று குறிப்பிடுகிறது. 

               கங்கர்கள்    இலங்கையில் ஆரிய சக்ரவர்த்திகளாகவும்  ஒடிசாவில் பூரி ஜெகன்னதர் கோவில்,கோனார்க் சூரிய கோவில் மற்றும் தமிழக்தில் நீலகங்கரையன் பட்டினம் என்ற நீலாங்கரையாகவும் வரலாற்றில் நிலைத்து உள்ளனர். 

 தமிழகத்தில் உள்ள நீலகங்கரையர் கோட்டை பற்றிய ஆய்வு முடித்தவுடன் தனியாக வெளிவரும்.