வன்னியனார் அடைக்கலம் காத்த அதலையூர் நாடாழ்வான் என்ற விஜயாலய தேவன் யார் என்பதை நிரூபிக்க கொடுக்கபடும் ஆதாரங்கள்.
தேவன் என்று முடிவதால் அவரை மறவர் என்றும் அவரையே வன்னியனார் அடைக்கலம் காத்தவர் என்று பெயர் உள்ளதால் வன்னிய மறவர் என்றும் பொய் கதை எழுதியவர்களுக்கு இந்த ஆதாரங்கள்.
THE TELUGU PALLAVAS : தெலுங்கு பல்லவர்கள்
கண்ட கோபலன் வம்சாவளி பற்றி கூறப்பட்டுள்ள செய்திகள்:
முக்கண் -காடுவெட்டி என்ற பாரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்த பல்லவன் வழி வந்தவன், கருடனும் -காளையையும் கொடியில் கொண்டவன் காஞ்சியின் அரசன் காமாட்சியின் அருளை பெற்றவன்.உலகை ஆள்பவன் என்ற பட்டங்கள் முக்கண் காடுவெட்டி என்ற பாரத்வாஜ கோத்திர வழி வந்த பல்லவர்கள் பயன்படுத்திய பட்டங்கள்.காஞ்சி முதல் ஸ்ரீசைலம் வரை ஆட்சி செய்தவன் அவை தற்போதைய செங்கல்பட்டு ,சித்தூர்,கடப்பா,நெல்லூர்,கர்னூல் மாவட்டங்களை சேர்த்த பகுதிகள்.


முக்கண் காடுவெட்டி வழி வந்த அரசர்கள் :
துரையப்ப ராசு அவர் மகன் யம்மராசு @ நந்தி வர்மா மகாராஜா முதலாம் குலோத்துங்கன் காலத்தை சேர்ந்தவர்.தர்ம வர்மா மகன் அல்லன் திருகாளத்தி என்பவரும் முல்கி நாட்டை சேர்ந்த சித்தனாதேவ மகாராஜா என்ற பல்லவனும் இருந்து உள்ளனர்.

மகாமண்டலேஸ்வரா பரமேஸ்வர அபிதேவ மல்லிதேவ மகாராஜா இவர்களுக்கு பின் வந்த வீர கண்ட கோபாலன் சோழர்கள் காலத்தில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி தனி ஆட்சி செய்ய தொடங்கிய 10 ஆண்டுகளுக்கு பின் சுந்தர பாண்டியனால் கொல்லப்பட்டார்.

VIJAYA GANDA GOPALA : விஜய கண்ட கோபாலன்
சுந்தரபாண்டியனால் கொல்லப்பட்ட கண்டகோபாலனுக்கு பின் அவர் தம்பிகளுக்கு அவர் ஆட்சி செய்த பகுதியை சுந்தர பாண்டியன் திருப்பி கொடுத்தார்.அவர்கள் இருவரும் சேர்ந்து ஆட்சி 5 வருடம் ஆட்சி செய்தனர். சுந்தரபாண்டியன் வீர கண்டகோபாலனை கொன்ற பின் விஜயகண்ட கோபாலன் ஆட்சிக்கு வந்தார்.அவனுக்கு அடையவளநாடன்(அதலையூர் நாடாழ்வான்) என்ற சிறப்பு பெயர் உண்டு.கோனேரி மெய்கண்டான் என்ற பாண்டியனுக்கு அமைச்சர் என்றும் மாளவராயரின் தம்பி என்றும் அழைக்க பட்டார்.கண்டகோபாலன் குடும்பமும் -யாதவர்களுடன் திருமண உறவு கொண்டு இருந்தனர்.அதனால் மாளவசக்ரவர்த்திகள் என்று அழைக்க பட்ட யாதவராயர்கள் உறவினர் என்று கூறப்பட்டு உள்ளது.
முக்கண் காடுவெட்டி வழி வந்த பாரத்வாஜ கோத்திரத்தில் வந்த பல்லவன் என்று கூறி உள்ள இந்த பல்லவனை தேவர் என்று முடிவதால் மறவர் என்று கதையை சேர்த்து விட்டு உள்ளனர். விசயால தேவன் வம்சாவளி பல்லவனாக இருப்பது கூட தெரியாமல் மறவர் என்றும் தேவர் என்றும் கதை தயார்படுத்திக் கொண்டு உள்ள மறவர்கள்.
திருவாலங்காடு கோவிலில் உள்ள கல்வெட்டு கூறும் தகவல்
ஸ்ரீ முக்கண் காடுவெட்டி வம்சத்தில் அவதரித்து
அருளிய திரிபுராந்ததேவர் மகன் மதுசூதனதேவர் திருபுவன சக்ரவர்த்திகள்
ஸ்ரீ விஜயகண்டகோபாலன் தேவர் பெயரால் செய்த தானம் பற்றி கூறப்பட்டு உள்ளது.

காக்கு நாயகதேவன் என்ற மதுசூதனதேவன் மகன் பல்லவன் கோப்பெருசிங்கனின் படைத்தலைவனாக இருந்து உள்ளார்.இந்த மதுசூதனதேவர் விஜயகண்டகோபாலனின் இளைய சகோதரர். காக்கு நாயகன் என்பது வன்னியர்களின் பட்டம் காஞ்சிபுரம் செங்கல்பட்டு பகுதியில் உள்ள பட்டம்.

திருப்பதி -திருமலை கோவில் கல்வெட்டுகள்:


நெல்லூர் பள்ளிகொண்ட பெருமாள் கோவில் கல்வெட்டுகள்:


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமக்கோட்டை கல்வெட்டு :
சொக்க நாயனான விஜய கண்ட கோபாலன் நெல்லூரில் இருந்து பாண்டியன் உதவியாக வந்த செய்தி வருடம் 1335

காடுவெட்டியார் சொக்க நயினார் ஆன விஜய கண்ட கோபாலர்
காடுவெட்டியார் சொக்க நயினார்:
திருபுவன சகரவர்த்திகள் ஸ்ரீ வல்லபதேவரின் ஆட்சி ஆண்டு இருபத்தஞ்சாவது ஆண்டு அரசூர் வரகூருடையான் மெய்க்குந் தேவர் சொக்க நாயனார் விஜயகண்ட கோபாலன் காணி விலை பிரமாணம் கொடுத்த பரிசு. ராசராசன் சுந்தர பாண்டியன் துலுக்கருடன் வந்து செய்த கலகத்தில் செய்த வரிவசூல் மற்றும் கொடுமைகளாலும்,வெள்ளம் போன்ற காரணங்களால் வரி செலுத்தாவர்களை திருநெல்வேலி உடையார் சிறை வைத்து அவர்களிடம் வரி வசூல் செய்த செய்தியை கூறும் கல்வெட்டு. இந்த காலத்தில் தான் சொக்க நாயனார் விஜயகண்ட கோபாலன் சுரைகுடிக்கு அனுப்ப பட்டார் என்பதை சுரைகுடி கல்வெட்டுகள் கூறுகின்றன.
வரகூருடையார் பிள்ளை காடு வெட்டியார் மகனார் சொக்கநாயனார் :
ராஜாராஜ வளநாட்டு வண்டாழை நாட்டு வரகூருடையான் மெய்க்குந்தேவர் மகனார் சொக்க்நாயனார் விஜய கண்ட கோபாலன்:
வரகூருடையார் காடுவெட்டியார் மகனார் சொக்க்நாயனார் விசைய கண்ட கோபாலர்:
சூரைக்குடித் தேவர் சொக்கநயினார் விசயாலய தேவர் :
வன்னியன் சூரைக்குடி :
வன்னியன் சூரைக்குடி என்ற ஊரை தாக்கி அதில் குடியேறிய கள்ளர் குடிகளை அழித்த முஸ்லிம்கள்.பின்னர் அந்த இடத்தை விசையால தேவன் தனது தலைமை இடமாக கொண்டார் என்று கூறப்பட்டு உள்ளது. இதை தான் இப்போது விசயால தேவன் வன்னிய மறவர் என்றும் வன்னியர் பட்டம் உள்ள கள்ளர் என்று கதை எழுதி கொண்டு உள்ளனர்.
இதற்க்கும் பதில் சொல்ல தெரியாமல் இப்போ வன்னியர் என்பது ஒரு சாதி இல்லை என்றும் அது காடு சார்ந்த பகுதியை குறிக்கும் சொல் என்று கதை எழுதி இருக்கும் அவங்க அறிவை எல்லாம் கல்வெட்டுல தான் எழுதி வைக்க வேண்டும். வன்னியன் சூரைக்குடி என்று எழுத முடியாமல் வ.சூரைக்குடி என்று எழுதும் போதே தெரியது அவங்க பயமும் அறிவும்.
ராசாக்கள் தம்பிரான் என்ற பாண்டியன் முஸ்லிம்களுடன் சேர்ந்து சுரைகுடியை அழித்து வீரையாச்சிலையையும் கோட்டியூரையும் இணைத்து ஒன்றாகா மாற்றி வரி வசூல் செய்த குறிப்பை கல்வெட்டு கூறுகிறது.
கல்வெட்டில் வெட்டிகொடுத்தபடி நடக்க தேசத்தில் உள்ள வன்னியர் ,கள்ளர் ,கருமர்,புறத்தார்,பட்டர்,வித்துவான்,பாடகர் மற்றும் எங்களுக்கு எதிரியான அறந்தாங்கி (தொண்டைமான்) மறவரும் உள்ள அனைவரும் பண்ணி கொடுத்த உடன்படிக்கை.
இது இப்ப எப்படி படிக்க படுது என்றால் இந்த வன்னியர் பள்ளியா ?? இல்லை இவர்கள் கள்ளர்கள் தான். ஆமா அப்ப கல்வெட்டு ல் இருக்கும் கள்ளர் யாரு என்றால் அது கள்ளர் தான். அப்ப அந்த வன்னியர் யார் என்றால் --வந்து வந்து வீரனுக்கு வேறு பெயர் வன்னியர் அதனால இங்கசொல்லி இருக்காங்க
அது இப்ப இருக்கும் வன்னியர் இல்லை.அறந்தாங்கி தொண்டைமான் யாரு?? -கல்வெட்டுல் மறவர் என்று இருக்கு அதனால அவர் மறவர் தான். தொண்டைமான் வன்னியர் தானே -அப்படியா வன்னியரா அப்ப வன்னியர் பட்டம் உள்ள வன்னிய மறவர் தான்.எப்படி இது மறவர் என்றால் மட்டும் வீரன் என்று வராம சாதி என்று சொல்லுற.அது அப்படி தான் எங்க ஆளுங்க வன்னியர் பற்றி ஆராய்ச்சி பண்ணி சொல்லி இருக்காங்க. அதனால் வன்னியர் பற்றி நாங்க சொல்லுவது உண்மை -உண்மை என்று சத்தியமே பண்ணி இருக்கார் ஒரு அறிவாளி.
வன்னியர் பற்றி ஆராய்ச்சி செஞ்ச ஒரு மிக பெரிய வரலாற்று அறிஞரின் கருத்து தான் இது.இப்படி எல்லாம் கருத்தை சொல்லிட்டு இப்ப எங்களுக்கும் வன்னியர் பட்டம் இருக்கு வன்னிய மறவர் என்றும் கள்ளருக்கும் வன்னியர் பட்டம் இருக்கு என்றும் கதை சொல்ல ஆரம்பித்து இருக்கின்றார்கள்.இந்த கதைக்கு ஒரு கல்வெட்டு ஆதாரம் இருக்கா என்றால் இல்லை.அப்பறம் எப்படி வன்னியர் பற்றி கதை சொல்ல முடியுது என்றால் திருநெல்வேலி மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே. அதில் வன்னியர் OR மறவர் என்று உள்ள ஒரே ஒரு வார்த்தை மட்டுமே வைத்து உரிமை கொண்டாடுகின்றனர்.
கல்வெட்டுகளில் ஒரு இடத்திலும் வன்னிய மறவர் -வன்னிய கள்ளர் என்ற ஒரு வரி கூட இல்லமால் வன்னியர் என்பது எங்கள் பட்டம் என்று உரிமை கொண்டாடும் காரணம் தமிழகத்தில் இருக்கும் எல்லா அரசனுக்கும் வன்னியருக்கும் உள்ள தொடர்பை கூறும் வரலாறை உரிமை கொண்டாட மட்டுமே.
சூரைக்குடி மற்றும் விரையச்சிலை சோழர் மற்றும் பாண்டியர்கள் காலங்களில் படைகளும் படை தலைவர்களும் இருந்த பகுதி என்று கூறப்பட்டுள்ளது
விஜயநகர காலத்தில் இருந்த சூரைக்குடி தீராதவினை தீர்த்த விஜயாலய தேவர் மகன் ஸ்ரீரங்க நாதர் என்ற பெத்தப்ப விஜயாலய தேவர்.
வினை தீர்த்த விஜயாலய தேவர் -ராயப்ப விஜயாலய தேவர் என்று விஜய நகர தெலுங்கு அரசர்கள் பெயரையும் சேர்த்து வைத்து கொண்டு உள்ளனர்.
வன்னியனார் அடைக்கலம் காத்தார் ஆன நாடு மதித்த விஜயாலய தேவர்
அரையர் என்ற அரச மக்களுக்குள் நடந்த சண்டையில் விசையரையனும் -வன்னியரையனும் ஆலங்குடி மழவர் படையை கொண்டுவந்து 20 பேரை வெட்டியதும் அந்த குற்றத்துக்கு கோவிலுக்கு தானம் கொடுத்த செய்தி
திருநலக்குன்றமுடையார் நாயனார் கோவில் திருப்பணிக்கு கோனாடு இருபத்துநான்கு வட்டகையும் ஊர்வழி தோரும் உள்ள காணி உடைய பிராமிணர்-வெள்ளாளர்-செட்டிகள் ஆள் ஒன்றுக்கு ஆண்டுக்கு அரை பணமும் -அவர்களில் இளையவர்கள் கால் பணமும் படை பற்றுகளுக்கு பணம் காலும் மக்கள் ஆள் ஒருவருக்கு பணம் அரை காலும்,பள்ளர் பறையர் மக்களுக்கு பணம் அரை காலும் தண்டி(வசூல்) திருப்பணி செய்வீர்கள் என்றும் பணம் கொடுக்காதவர்களிடம் உள்ள வெண்கலம் பிடிங்கி மண்கலம் கொடுக்கவும் என்றும் கூறப்பட்டு உள்ளது. நாடு,நகரம்,கிராமங்களும்,வன்னியர்களும்,படைபற்றுகளும் சேர்ந்து கல்வெட்டில் வெட்டி கொடுத்துள்ளனர்.
இந்த கல்வெட்டுகள் கள்ளர் பற்றிய செய்தியையும் மறவர் என்ற சாதியை பற்றியும் கூறவே இல்லை.மறவர்,கள்ளர் ஆட்சி அதிகாரம் பெற்ற காலம் மறவர்-கள்ளர் பாளையங்கள் வந்த பின்னர் மட்டுமே.


குன்றுசூழ்நாட்டு பரம்பையூர் வன்னியரான நம்பு செய்வார் :
மறவர் என்பது சாதி பெயர் இல்லை என்பதை நிருபிக்கும் கல்வெட்டுகள்:
சுந்தரபாண்டியன் காலத்தில் புறமலைநாட்டு பொன்னமமராபதி முதலான நாடுகளில் மறமாணிக்கறோம் பேர் வஞ்சி(வச்சி) கேட்டு அதற்கு பரிசாக கொடுத்த திருவரன்குளமுடையானுக்கு மறச்சக்ரவர்த்திப்பிள்ளை என்று பெயரும் கொடுத்து தூத்திக்குடி வயலில் வடபாகம் விளைநிலமும் இதன் எல்லையான புன்செய்களும் முன்பு எழுதி கொடுத்தபடி இறையிலியாக காணிக்கையாக கொடுத்தோம்.
இதில் உள்ள செய்தி நிலம் தானம் கொடுத்து மறச்சக்ரவர்த்திப்பிள்ளை என்ற பெயரை பெற்ற மறமாணிக்கம் என்ற வீரன் அல்லது படைபற்று தலைவன். இது மறவர் என்ற சாதியை குறிக்க வில்லை.

மறமுதலிகள் என்ற அரசமக்கள் என்ற அரையர்களின் வீரர்களுக்கு தலைவன் இவர்கள் மறவர் என்ற சாதியை சேர்ந்தவர்கள் இல்லை.
விரையாச்சிலையில் ஊர் மக்கள் சேர்ந்து இடையர்களில் கேரளன் சொறனுக்கு மறமாணிக்க கோணான் என்று பெயர் கொடுத்தனர்.இதனால் மறவர் என்பது பாளையங்கள் உண்டாகும் வரை வீரனை மட்டுமே குறிக்கும்சொல். மறவர் என்ற சாதிக்கும் -(மறம் என்றால் வீரன் ) மறம் என்ற சொல் வீரத்தை மட்டுமே குறிக்கும் சொல்லுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. பின்னர் மறவர் எனபது சாதியான பின் வீரன் என்ற சொல்லுக்கு உரிய மறம் எல்லோராலும் மறைக்க பட்டு விட்டது.

மாங்குடி மறவன் அவையன் சாத்தனான அதலையூர் நாட்டு பெரையன்
வீரையாச்சிலை மறவரில் நயினார் கங்கனுக்கு அதே ஊரை சேர்ந்த அரச மக்கள் பிள்ளான் ராசபிள்ளையான் ராசிங்க தேவன் செய்த தானம். அரசமக்கள் என்ற அரையர்கள் வேறு அவர்களுக்கு கீழ் வேலை செய்த வீரர்கள்என்ற மறவர்கள் வேறு என்பதை இந்த கல்வெட்டு உறுதி செய்கிறது.
மலையாலங்குடி அரையர்கள்அனைவரும் -மறமுதலிகள் அனைவரும் என்று தனி தனியாக கூறப்பட்டு உள்ள செய்தி.
மலையாலங்குடி அரசுமக்கள் :
அரையர்களும் மறமுதலிகளும்:
மலையாலங்குடி அரசுமக்கள் -மறமுதலிகளும் :
அரசர் மக்களில் நாட்டான் உலகுடைய நாயனாரன உய்ய வந்த தேவர் - மறவன் மாடையன் மக்கணாயன்.
தேவர் -மறவர் என்றால் இப்போது சாதியை மட்டுமே குறிக்கும் என்ற மாயை உருவாக்கி அதை வைத்து அரசியல் செய்து கொண்டு இருந்தவர்கள் தற்போது வரலாறையும் அதே மாயையை வைத்து கதையை உருவாக்கி வருகின்றனர்.
விஜய நகர அரசர்கள் பரம்பரைகள்(சாளுவ அரசர்கள்) காலத்தில் இவர்களுக்கு எந்த உரிமையும் கொடுக்க படவில்லை.கிருஷ்ண தேவராயர் காலத்துக்கு பின் வந்த நாயக்கர்கள் அமைத்த பாளையங்கள் வந்த பின்னர் மட்டுமே இவர்கள் பதவிக்கு வந்தனர். அதுவரை அரசு மக்களாக இருந்தவர்களின் பட்டங்களையும் பெயர்களையும் பயன்படுத்தி கொண்டவர்கள் தான் இப்போது அந்த பட்டங்களுக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.இவர்கள் கூறும் ஒரு பட்டங்களுக்கும் கல்வெட்டு ஆதாரம் எதுவும் இல்லை.ஆதாரம் இல்லாமல் இவர்கள் கொண்டாடும் கலிங்கராயன்,தொண்டைமான்,பல்லவராயன்,மழவராயர் எல்லாம் எங்கு இருந்து யார் காலத்தில் தென்பகுதிக்கு சென்றனர் என்ற ஆதாரம் கல்வெட்டுகளில் இருந்தாலும் இப்போது இவர்கள் தாங்களே வைத்து கொண்ட பட்டங்களை வைத்து சொந்தம் கொண்டாடி வரும் இவர்களுக்கு எல்லா அரையர்கள் என்ற அரசமக்கள் யார் என்ற வரலாறை எடுத்து கொடுத்து உண்மையை வெளி கொண்டு வரும் காலம் வந்துள்ளது.
இப்படி உரிமை கொண்டாடிய வன்னியன் சூரைக்குடி விஜயாலய தேவன் -முக்கண் காடுவெட்டி வழியில் பாரத்வாஜ கோத்திரத்தில் வந்த பல்லவன் என்று நிரூபிக்க பட்டு உள்ளது.அவர்கள் எப்படி நெல்லூர் -செங்கல்பட்டு பகுதிகளில் இருந்து சுரைக்குடியில் நிலைபெற்றனர் என்பது வரலாறு. இந்த வரலாறை தெரியாமல் தேவன் என்று முடிவதால் கண்டகோபாலன் வழி வந்த பல்லவனை மறவன் என்ற சாதியில் கொண்டு போய் சேர்ந்து உரிமை கொண்டாடும் இவர்களது வரலாற்று அறிவை உலகம் பார்த்து பதில் சொல்லும்.
இவர்களுக்கும் இவர்கள் செய்த வன்னியர் ஆராய்ச்சிக்கும் கூறும் ஓரே தகவல் தென்பகுதியில் குடியேறிய வட தமிழக அரையர்கள் எல்லோருமே வன்னியர்கள் மட்டுமே. படை பற்றும் படை வீரர்களும் வன்னியர்களே.இதை நிரூபிக்க தேவையான எல்லா ஆதாரமும் கொடுக்க படும். வார்த்தை வைத்து விளையாடும் எதுவும் நிலைக்காது. இந்த வன்னியர் பள்ளி இல்லை என்று மீண்டும் மீண்டும் வந்து பல்பு வாங்க வேண்டாம்.
மறவர் -கள்ளர் வரலாறை கிருஷ்ணதேவராயர் காலத்துக்கு பின் வந்த நாயக்கர்கள் காலத்தில் இருந்து தேடி அதை ஆவண படுத்தி உரிமை கொண்டாடவும். வன்னியர் வரலாறை பேசாமல் தென் இந்திய வரலாறையும் -இலங்கை வரலாறையும் பேச முடியாது என்பது தான் உண்மை நிலைமை. இந்த ஒரு காரணத்துக்கு மட்டுமே கள்ளர் -மறவர் எல்லாம் வன்னியர் பட்டம் இருப்பதாக இப்போது கூறிக்கொண்டு உள்ளனர்.